Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Startup Layoffs 2022: இது வெறும் ட்ரெய்லர் தான்... மெயின் பிச்சரே இனிமே தான் வரப்போகுது... அடுத்த ஆறு மாதங்களுக்கு திக் திக்... 

Nandhinipriya Ganeshan May 26, 2022 & 18:55 [IST]
Startup Layoffs 2022: இது வெறும் ட்ரெய்லர் தான்... மெயின் பிச்சரே இனிமே தான் வரப்போகுது... அடுத்த ஆறு மாதங்களுக்கு திக் திக்... Representative Image.

Startup Layoffs 2022: இந்தியா ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இந்த வருடம் ஒருபக்கம் பெரும் மகிழ்ச்சியையும், மறுபக்கம் பெரும் கவலையையும் கொடுத்துள்ளது. அதாவது சமீபத்தில் தான் இந்தியா 100 யூனிகார்ன் ஸ்டார்ட்அப்களை பெற்று சாதனைப்படைத்தது. ஆனால், அதில் கிட்டத்தட்ட 9 நிறுவனங்கள் மட்டுமே நல்ல நிலையில் செயல்பட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“இந்த பணிநீக்கம் பத்து மடங்கு அதிகரிக்க போகுது… நிபுணர்கள் பகீர் தகவல்... அடுத்த ஆறு மாதங்களுக்கு திக் திக்…”

பணிநீக்கம்:

இந்த சந்தோசத்தை கொண்டாடும் வேளையில் தான், இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு கஷ்ட காலம் பிறந்தது. உண்மையை சொல்லப்போனால், இது ஒரு துரதிஷ்ட வருடம் என்றே சொல்லலாம். தொடர்ந்து பல்வேறு துறைகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை முன்னறிவிப்பு இன்றி வேலையைவிட்டு தூக்கினர். கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சுமார் 6000 ஊழியர்களை பணிநீக்கம் (2022 layoffs) செய்துள்ளன. 

  • ஓலா -  2,100
  • அனாகாடமி - 925
  • வேதாந்து - 624
  • எம்ஃபைன் - 600
  • கார்ஸ் - 24 600
  • ட்ரெல் - 300
  • லிடோ லேர்னிங் - 200
  • ஃபர்லென்கோ - 200
  • மீஷோ - 150
  • ஓகே கிரெடிட் - 40

மொத்தம் = 5,739

10 மடங்கு உயரும்:

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இந்த பணிநீக்கம் தொடரும் என்றும், தற்போதைய எண்ணிக்கையை விட 10 மடங்கு  (அதாவது 60,000)ஸ்டார்ட்அப் பணிநீக்கங்கள் நடக்கும் என்றும் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் இரண்டாம் நிலை பராமரிப்பு அறுவை சிகிச்சை தளமான Glamyo Health ன் இணை நிறுவனர் Archit Garg சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் பேசிய அவர் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பில் அதிக சரிவு ஏற்பட்டுள்ளது மற்றும் நிதி சூழல் பழைய நிலைக்கு திரும்ப 6-9 மாதங்கள் ஆகலாம். எனவே, இந்த பணிநீக்கம் உண்மையான எண்ணிக்கை இதை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் எதிர்மறையான செய்திகள் வரும் என்றும் கூறினார். 

எட்டெக் துறையில் தொடரும் வீழ்ச்சி:

பணிநீக்கம் குறித்து பேசிய HRTech நிறுவனமான Incluzon இன் இணை நிறுவனர் நவீன் ஜாங்கிர் "மாணவர்கள் மீண்டும் பள்ளிகளுக்குச் செல்வதால், எட்டெக் ஊழியர்கள் மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகலாம். இந்திய எட்டெக் துறையில் உருவாகும் குறிப்பிடத்தக்க நெருக்கடியுடன், கட்டமைப்பு மற்றும் செயல்முறைகளில் தெளிவின்மையும் ஒரு தடையாக வருகிறது." என்று அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு ஓலா, அனாகாடமி, வேதாந்து போன்ற நிறுவனங்கள் இதுவரை 3600 ஊழியர்களை பணிநீக்கம் (layoffs in india 2022) செய்துள்ளதாக ஊடக அறிக்கைகள் மற்றும் நிறுவனத்தின் அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. 

கொரோனா எதிரொலி:

கொரோனா காலத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடியதால் ஏராளமான எட்டெக் ஸ்டார்ட்அப்கள் உருவாகின. அதுமட்டுமல்லாமல், பல்வேறு துறைகளிலும் நல்ல முதலீட்டை ஈட்டி வந்தனர். ஆனால், கொரோனா கட்டுபாடு விலகி எல்லாம் பழைய நிலைக்கு திரும்பு வேளையில், பொருளாதார நெருக்கடி வலுப்பெற்றுள்ளது. மேலும், கொரோனா காலத்தில் எல்லா ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலும் பெரும்பாலான ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர், இப்போது அதைக் கையாள முடியவில்லை.

இதனால், குறைந்த நிதியுதவி மற்றும் அதிக நிதியுதவி பெறும் ஸ்டார்ட்அப்கள் இரண்டும் பாதிக்கப்படும் என்று உலகளாவிய தொழில்நுட்ப-ஆட்சேர்ப்பு வழங்குநரான iXceed சொல்யூஷன்ஸின் நிர்வாக இயக்குநரும் இணை நிறுவனருமான யோகிதா துல்சியானி குறிப்பிட்டுள்ளார்.  அதேப்போல், மாதவிடாய் பராமரிப்பு ஸ்டார்ட்அப் அவ்னியின் (menstrual care startup Avni) இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுஜாதா பவார், தங்களுடைய பாதையை நிர்வகிக்கத் தவறிய மற்றும் வணிகத்தை கவனமாக வளர்க்கத் தவறிய ஸ்டார்ட்அப்கள் இதுபோன்ற பணிநீக்கங்களுக்கு உட்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்