Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒன்னு, ரெண்டு, மூணு என நிறுவனங்களை வாங்கி குவிக்கும் பிரபல தமிழ்நாடு ஸ்டார்ட்அப்...!!

Nandhinipriya Ganeshan July 06, 2022 & 19:15 [IST]
ஒன்னு, ரெண்டு, மூணு என நிறுவனங்களை வாங்கி குவிக்கும் பிரபல தமிழ்நாடு ஸ்டார்ட்அப்...!!Representative Image.

சென்னையை தலைமையிடமாக கொண்ட ஃபின்டெக் சாஸ் ஸ்டார்ட்அப் M2P Fintech,  பெங்களூரைச் சேர்ந்த கிளவுட் லெண்டிங் தளமான Finfluxஐ ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்கியுள்ளது. எம்2பி நிறுவனத்தால் வாங்கப்படும் மூன்றாவது இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், நிறுவனத்தின் சிலவற்றை டிஜிட்டல் மயமாக்கவும், ஆட்டோமேஷன் முறையை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. 

Finflux மொத்தம் 15 நாடுகளில் 60க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கும், 12 மில்லியனுக்கும் அதிகமாக கடன் வாங்குபவர்களுக்கு சேவை செய்து வருகிறது. தற்போது M2P நிறுவனம் வாங்கிவிட்டதை அடுத்து, 100 மில்லியன் கணக்கில் கடன் வாங்குபவர்களுக்கு சேவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

ஆர். மதுசூதனன்,  ஆர். முத்துக்குமார் மற்றும் பிரபு ரங்கரான் ஆகியோரால் 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட M2P, இந்த ஆண்டு ஜனவரியில் நியூயார்க்கை சேர்ந்த தனியார் பங்கு நிறுவனமான இன்சைட் பார்ட்னர்ஸ் தலைமையில் 56 மில்லியன் டாலர்களை பெற்றது. இதன் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மதிப்பு $600 மில்லியனாக உயர்ந்தது. மேலும் இந்த நிதிச்சுற்றில் MUFG இன்னோவேஷன் பார்ட்னர்ஸ், டைகர் குளோபல் மற்றும் பெட்டர் கேபிட்டல் ஆகியோரும் பங்கேற்றன. அதற்குமுன்பு, 2021 ஆம் ஆண்டு சில முதலீட்டார்களிடம் இருந்து 100 மில்லியனை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளையும் உடனுக்குடன் பெறுங்கள். 

Tags:

M2P Fintech Chennai | M2P acquisition | M2P Fintech founders | M2P Funding


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்