Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Startup School in India: கூகுளின் வேற லெவல் ஐடியா.. இனி இந்த ஊரிலும் யூனிகார்ன் மழை தான் பெய்ய போகுது..!!

Nandhinipriya Ganeshan July 06, 2022 & 18:15 [IST]
Startup School in India: கூகுளின் வேற லெவல் ஐடியா.. இனி இந்த ஊரிலும் யூனிகார்ன் மழை தான் பெய்ய போகுது..!!Representative Image.

தொழில்நுட்ப ஜாம்பவான் கூகுள், நாட்டில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள 10,000 ஸ்டார்ட்அப்களுக்கு உதவும் வகையில் ஸ்டார்ட்அப் ஸ்கூல் ஒன்றை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஸ்டார்ட்அப் ஸ்கூல் என்பது, வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தேவையான கருவிகள், தயாரிப்புகள், அறிவைக் கொண்டு ஆரம்ப நிலையில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனர்களை ஊக்கப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஆன்லைன் பயிற்சியாகும். 

மேலும், இந்த ஆன்லைன் பயிற்சியில் தொழிலில் பயனுள்ள தயாரிப்பு உத்தியை எப்படி வடிவமைப்பது, தயாரிப்பு தேவைகள் என்னென்ன, இந்தியா போன்ற மார்க்கெட்களில் அடுத்த பில்லியன் பயனர்களுக்கு ஆப்களை எப்படி உருவாக்குவது, யூசர்களை எப்படி கையகப்படுத்துவது போன்ற பல கோணத்தில் அறிவுறுத்தல் தொகுதிகள் இடம் பெறும். 

ஒன்பது வாரம் கொண்ட இந்த திட்டத்தில் ஸ்டார்ட்அப் ஸ்கூலில் சேர்வோர் கூகுள் அதிகாரிகளுடன் மட்டுமல்லாமல், வெளியில் இருந்து பயிற்சி அளிப்பவர்கள் உடனும் ஆலோசனை செய்யும் வாய்ப்பையும் பெறுவார்கள். அந்த வகையில், D2C, B2B, B2C ஈகாமர்ஸ், மொழி, சோஷியல் மீடியா, நெட்வொர்கிங், ஜாப் சர்ச் பிரிவில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளது.
 

சுமார் 70,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன், உலகிலேயே ஸ்டார்ட்அப்களுக்கான மூன்றாவது பெரிய பிறப்பிடமாக இந்தியா திகழ்கிறது. மேலும், பல இந்திய நிறுவனர்கள் தங்களது நிறுவனங்களை யூனிகார்ன் அந்தஸ்துக்கு உயர்த்தியும் வருகிறார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் உள்ள இளம் இந்தியர்களின் முன்முயற்சியை ஊக்குவிக்கவும், புதுமையை படைக்கவும் கூகுளின் இந்த திட்டம் உண்மையில் பாராட்டத்தக்கதாக அமைந்திருக்கிறது. 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளையும் உடனுக்குடன் பெறுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்