Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

OLA Electric Car: ஓலாவின் ஓஹோ அறிவிப்பு… திணறடிக்கும் காரின் விலை…!!

Nandhinipriya Ganeshan July 19, 2022 & 15:00 [IST]
OLA Electric Car: ஓலாவின் ஓஹோ அறிவிப்பு… திணறடிக்கும் காரின் விலை…!!Representative Image.

OLA Electric Car: ஓலா டாக்ஸி, ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என இந்தியாவில் ஓலா நிறுவனம் ஒரு பெரும் புரட்சியே செய்து வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனத்தின் வாகன தயாரிப்பு தொழிற்சாலை அதிக வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்து வருகிறது. இந்த சாதனையின் அடுத்த இலக்காக ஓலா எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரிக்க இருப்பதாக நிறுவனத்தின் ஓனர் பாவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு ஸ்போர்ட்ஸ் கார் பிரியர்களுக்கு மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிக இடங்களில் தீப்பிடித்து எரிந்திருந்தாலும் அந்நிறுவனத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை இன்னும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இன்னமும் இந்த ஸ்கூட்டர்களை ஆர்வத்துடன் பலரும் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இருப்பினும்  நிறுவனம் ஏராளமான நஷ்டத்தை சந்தித்து வந்தது. அப்பவும் மனம் தளராத பாவிஷ் அகர்வால் தற்போது இந்த செய்தியை அறிவித்திருக்கிறார்.

இது சம்பந்தமான டீசர் ஒன்றையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு முறை ஜார்ஜ் செய்தால் சுமார் 400 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாமாம். அதுமட்டுமல்லாமல், ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு பல பெரிய நிறுவனங்கள் போட்டியாக இருப்பதால், ஓலா எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரின் விலை 15-18 லட்சமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்