Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,677.13
-195.16sensex(-0.26%)
நிஃப்டி22,356.30
-49.30sensex(-0.22%)
USD
81.57
Exclusive

Startup News Tamil: இந்திய ஸ்டார்ட் அப் உலகின் ஒட்டுமொத்த அப்டேட்ஸ்… [ஜூலை 19.2022]

Nandhinipriya Ganeshan July 20, 2022 & 12:52 [IST]
Startup News Tamil: இந்திய ஸ்டார்ட் அப் உலகின் ஒட்டுமொத்த அப்டேட்ஸ்… [ஜூலை 19.2022]Representative Image.

Startup Funding India: இந்திய ஸ்டார்ட் அப் உலகில் கடந்த செவ்வாயன்று (ஜூலை 19, 2022) நடந்த நிதி திரட்டல் விபரங்கள், எந்த நிறுவனம் எந்த நிறுவனத்தை வாங்கியது, மற்றும் பல முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

▶ பெங்களூரை சேர்ந்த ஹெல்த்டெக் ஸ்டார்ட் அப் ஏகோ கேர் (Eka Care) சிரீஸ் A சுற்றில் ஹம்மிங்பேர்ட் வென்ச்சர்ஸ், மிரே அசெட்ஸ், ஆதித்யா பிர்லா வென்ச்சர்ஸ், பின்னி பன்சால், வெர்லின்வெஸ்ட் மற்றும் 3one4 கேபிடல் ஆகிய முதலீட்டாளர்களிடமிருந்து $15 மில்லியனை பெற்றிருக்கிறது.

▶ MSME-ஐ மையமாகக் கொண்ட மொத்த விற்பனை தளமான Lal10, யுஜ் வென்ச்சர்ஸ் (தி Xander Group, Inc.) மற்றும் பியோண்ட் கேபிடல் வென்ச்சர்ஸ் தலைமையிலான ப்ரீ-சீரிஸ் A நிதிச்சுற்றில் இருந்து 5.5 மில்லியனை திரட்டியுள்ளது.

▶ சென்னையை சேர்ந்த அக்ரிடெக் ஸ்டார்ட் அப் வெஜ் ரூட், அமெரிக்காவை சேர்ந்த VGROW வென்ச்சர்ஸிடம் இருந்து 1.1 மில்லியை பெற்றுள்ளது.

▶ O' Be Cocktails பிரிட்ஜ் ரவுண்டில் 3.5 கோடி ரூபாயை திரட்டியுள்ளது.

▶ குழந்தைகளுக்கான காலணிகளை தயாரிக்கும் பெங்களூருவைச் சேர்ந்த டி2சி ஃபூட்வேர் பிராண்டான Plaeto சிரீஸ் A சுற்றில் Florintree Advisors மற்றும் பல முதலீட்டாளர்களிடம் இருந்து 40 கோடி ($5 Mn) ரூபாயை திரட்டியுள்ளது.

▶ சைபர்செகியூரிட்டி ஸ்டார்ட் அப் BugBase, முந்தைய விதை நிதியாக 2am VC மற்றும் பல முதலீட்டாளர்களிடம் இருந்து 500K அமெரிக்க டாலர்களை பெற்றுள்ளது.

▶ API உலகின் ஜாம்பவான் எம்2பி ஃபிண்டெக், அடையாளச் சரிபார்ப்பு சேவை வழங்கும் நிறுவனமான Syntizen ஐ ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்கியுள்ளது.

▶ Neighbourhood சமூகம் வாங்கும் தளமான க்ரோஹூட் (Grohood), இந்திய ஏஞ்சல் நெட்வொர்க்கிலிருந்து முந்தை விதை சுற்றில் (pre-seed round) ஒரு குறிப்பிட்ட தொகையை திரட்டியுள்ளது. இதன் மதிப்பு வெளியிடப்படவில்லை.

▶ மணிபால் குரூப்ஸ் லக்சூரி பிராண்டான ஏகம் (Ekam), புகழ்பெற்ற ஏஞ்சல் முதலீட்டாளர்களான கோபால் சீனிவாசன், நாராயண் ராமச்சந்திரன் தலைமையிலான ஏஞ்சல் ரவுண்ட் நிதியில் ரூ.4.8 கோடியை திரட்டியுள்ளது.

▶ இந்தியா & சிங்கப்பூரை தளமாகக் கொண்ட B2B மென்பொருள்-ஒரு-சேவை (SaaS) ஸ்டார்ட்அப் ElevateHQ, லியோ கேபிட்டல் தலைமையிலான முன் விதை (Pre-seed) நிதி சுற்றில் $1.1 மில்லியன் திரட்டியுள்ளது.

▶ ராய்ப்பூரை சேர்ந்த சியாவான் ஹெல்த் கேர் விதை சுற்றிலிருந்து $200K மதிப்பிலான நிதியை பெற்றுள்ளது.

▶ SALT Attire நிறுவனம் மும்பையில் மேலும் இரண்டு புதிய ஸ்டோர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

▶ ஷிப்ரோக்கெட் ‘ஓமுனி’ என்ற நிறுவனத்தை 200 கோடிக்கு வாங்கியுள்ளது.

▶ பெப்பர் கன்டென்ட் முன்னாள் OYO இந்தியா COO ஹர்ஷித் வியாஸை CBO ஆக நியமித்துள்ளது.

▶ ஈகாம் எக்ஸ்பிரஸ் லிமிடெட் அமித் சவுத்ரியை தலைமை தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப அதிகாரியாக நியமித்துள்ளது.

▶ Zingbus தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச பயணக் காப்பீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

▶ ஆம்னி-சேனல் ஹோம் மேம்பாடு சில்லறை விற்பனைதளமான IBO (Ebo Mart Private Limited), பெங்களூருவில் அதன் முதல் கடையை திறந்துள்ளது.

▶ Snapdeal | AceVector குழுமம் அடுத்த மாத இறுதியில் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான (ONDC) ஓபன் நெட்வொர்க்கில் அறிமுகமாக உள்ளது.

▶ சிரோனா ஹைஜீன் இந்தியாவில் 10 லட்சம் மென்சுரல் கப்களின் விற்பனையை கடந்துள்ளது.

▶ TaCa ஹெல்த்கேர், 6 மாதங்களில் 400-500 பேரை பணியமர்த்த உள்ளது.

▶ ஆளில்லா விமான தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் EndureAir சிஸ்டம்ஸ், ரூ.13.5 கோடி நிதியை தன்வசப்படுத்தியுள்ளது.

▶ எண்ட்-டு-எண்ட் காமர்ஸ் ஸ்டார்ட் அப் எனிமைண்ட் குரூப், JIC வென்ச்சர் க்ரோத் இன்வெஸ்ட்மென்ட்ஸ், ஜப்பான் போஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன், நோமுரா SPARX இன்வெஸ்ட்மென்ட் மற்றும் ப்ரோட்டோ வென்ச்சர்ஸ் உள்ளிட்ட புதிய முதலீட்டாளர்களிடமிருந்து அதன் தொடர் D நிதி சுற்றில் $29.4 மில்லியன் திரட்டியுள்ளது.

▶ Arvog Finance ARIV கல்வியில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

▶ நியோபேங்கிங் தளமான NIYO SOLUTIONS, மல்டிபிள்ஸ் ஆல்டர்நேட் அசெட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து $30 மில்லியன் திரட்டியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்