Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

இரண்டு நிறுவனங்களை ஒரே சமயத்தில் வாங்கிய பிசிக்ஸ் வாலா.. 

Nandhinipriya Ganeshan October 13, 2022 & 15:11 [IST]
இரண்டு நிறுவனங்களை ஒரே சமயத்தில் வாங்கிய பிசிக்ஸ் வாலா.. Representative Image.

எட்டெக் ஸ்டார்ட்அப்கள் நிதி திரட்டுவதில் போராடி வரும் இந்த நேரத்தில், கடந்த ஜூன் மாதம் நொய்டாவை சேர்ந்த எட்டெக் நிறுவனமான பிசிக்ஸ் வாலா, வெஸ்ட்பிரிட்ஜ் மற்றும் ஜிஎஸ்வி வென்ச்சர்ஸ் போன்ற மார்க்யூ முதலீட்டாளர்களிடம் இருந்து சீரிஸ் ஏ நிதிச் சுற்றில் 100 மில்லியன் டாலர்களை திரட்டி இந்தியாவின் 101 வது யூனிகார்ன் என்ற அந்தஸ்தை பெற்றது நம் அனைவருக்குமே தெரியும். 

2014 ஆம் ஆண்டு அலக் பாண்டே என்பவரால் யூடியூப் சேனலாக தொடங்கப்பட்டு தற்போது மிகவும் ஃபேமஸான எட்டெக் ஸ்டார்ட்அப்களில் ஒன்றாக விளங்குவது PhysicsWallah. இது கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஜெய்ப்பூரை சேர்ந்த மற்றொரு எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஃப்ரீகோவை 'Freeco', ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்கியது. யூனிகார்ன் நிறுவனமாக மாறிய பிறகு பிசிக்ஸ் வாலாவின் முதல் கையப்படுத்தல் இதுவாகும். அதன்பிறகு, தற்போது ஒரே நிறுவனர் குழுவைக் கொண்டுள்ள PrepOnline மற்றும் Altis Vortex என்ற இரண்டு எட்டெக் ஸ்டார்ட்அப்களின் குறிப்பிட்ட பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மதிப்பு வெளியிடப்படவில்லை.

இந்த கையப்படுத்தலின் மூலம் பிசிக்ஸ் வாலா மருத்துவபரிசோதனை சம்பந்தமான படிப்பிலும் தனது இருப்பை வலுப்படுத்தவும், புத்தக விநியோகம் மற்றும் மெட்டீரியல்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. 

பிரிப்ஆன்லைன்:

ஆன்லைன் லேர்னிங் தளமான PrepOnline, அகில இந்திய முன் மருத்துவத் தேர்வு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மற்றும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சியூஇடி) ஆகியவற்றிற்கு மாணவர்களை தயார்படுத்தி வருகிறது.

ஆல்டிஸ் வோர்டெக்ஸ்:

இந்த நிறுவனம், இந்தியாவில் போட்டித் தேர்வுகளுக்கான தேர்வுத் தயாரிப்பு புத்தகங்களை (exam preparation books) வெளியிட்டு வருகிறது. இதுவரை, கிராஜுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங் (கேட்), யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி), ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (எஸ்எஸ்சி), நீட் மற்றும் சியூஇடி போன்ற தேர்வுகளை உள்ளடக்கிய 150 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்