Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விதை நிதி பெற்ற பிக்மைவொர்க்.. யாருகிட்ட இருந்து தெரியுமா?

Nandhinipriya Ganeshan September 14, 2022 & 15:20 [IST]
விதை நிதி பெற்ற பிக்மைவொர்க்.. யாருகிட்ட இருந்து தெரியுமா?Representative Image.

டிஜிட்டல் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களைப் பெற உதவும் ஸ்டார்ட்அப் நிறுவனமான PickMyWork, SOSV இன் ஆர்பிட் ஸ்டார்ட்அப்ஸ் தலைமையிலான விதை சுற்றில் $1 மில்லியன் திரட்டியுள்ளது. மேலும், சூனிகார்ன் வென்ச்சர்ஸ், உபய சோஷியல் வென்ச்சர்ஸ், ப்ளூம் ஃபவுண்டர்ஸ் ஃபண்ட், வென்ச்சர் கேடலிஸ்ட், மும்பை ஏஞ்சல்ஸ், 888 நெட்வொர்க், இம்பீரியர் ஹோல்டிங்ஸ் மற்றும் வீஃபவுண்டர் சர்க்கிள் உள்ளிட்ட முதலீட்டாளர்களும் இந்த விதைச்சுற்றில் பங்கேற்றனர். 

அதுமட்டுமல்லாமல், ஆகாஷ் குப்தா (தலைமை நிர்வாக அதிகாரி - ஜிப் எலக்ட்ரிக்), கௌரவ் சோப்ரா (தலைமை நிர்வாக அதிகாரி - இந்தியா லெண்ட்ஸ்), மற்றும் பிரஜாக்ட் தியோலாசி (CTO - டர்டில்மிண்ட்) உள்ளிட்ட ஸ்டார்ட்அப் உலகின் முக்கிய CXO களின் முதலீடுகளும் கிடைந்துள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 

குருகிராமை சேர்ந்த இந்த ஸ்டார்ட்அப் நிறுவனமானது மீஷோ, ஃப்ரீசார்ஜ், பிளிப்கார்ட், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் அமேசான் பே உள்ளிட்ட 25 நிறுவனங்களுடன் பணிபுரிந்துள்ளது. இந்நிலையில், பெறப்பட்ட நிதியை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள அதன் வாடிக்கையாளர்களை வளர்ப்பதற்காக பயன்படுத்தவுள்ளதாக திட்டமிட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்