Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Weekly Funding Roundup: வாராந்திர நிதி குவிப்பு விபரங்கள் [செப் 03 - 10]...

Nandhinipriya Ganeshan September 12, 2022 & 14:30 [IST]
Weekly Funding Roundup: வாராந்திர நிதி குவிப்பு விபரங்கள் [செப் 03 - 10]...Representative Image.

Weekly Funding Roundup: இந்த வாரத்தில் 36 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்டி இருக்கின்றன. அதில் 5 நிறுவனங்கள் மட்டும் தங்களது விபரங்களை வெளியிடவில்லை. ஆகமொத்தம், இந்த வாரத்தில் 31 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெற்ற மொத்த தொகையின் மதிப்பு சுமார் $231 மில்லியன் ஆகும். அதுவே, சென்ற வாரத்தில் 23 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுமார் $275 மில்லியனை பெற்றிருந்தன. வாராந்திர நிதியின் அடிப்படையில் பார்க்கும்போது இந்த வாரத்தின் மதிப்பு சென்ற வாரத்தை விடவும் சற்று குறைவாகவே உள்ளது.

இந்த வாரத்தின் முக்கிய ஒப்பந்தங்கள்:

Tata 1mg - குர்கானை சேர்ந்த ஹெல்த்கேர் ஸ்டார்ட்அப், டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா டிஜிட்டல் தலைமையிலான நிதிச்சுற்றில் 40 மில்லியன் டாலர்களை திரட்டியது. மேலும், KWE Beteiligungen, HBM ஹெல்த்கேர் இன்வெஸ்ட்மென்ட்ஸ், MPOF மொரிஷியஸ் மற்றும் MAF மொரிஷியஸ் போன்ற துணிகர முதலீட்டாளர்கள் மற்றும் ஹெல்த்கேர் நிதியாளர்களும் நிதியுதவி சுற்றில் பங்கேற்றனர். 

Akshayakalpa Organic - கர்நாடகாவின் திப்டூரில் உள்ள அக்ரி ஃபார்மிங் நிறுவனம், புகழ்பெற்ற பிரிட்டிஷ் நிதி நிறுவனங்களான பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் (பிஐஐ) தலைமையிலான சிரீஸ் B நிதிச் சுற்றில் 15 மில்லியன் டாலர்களை திரட்டியது. மேலும் இந்த சுற்றில் ரெயின்மேட்டர் அறக்கட்டளை மற்றும் வென்ச்சர் டெய்ரி போன்ற முதலீட்டாளர்களும் பங்கேற்றனர். 

GroMo - அங்கிட் கந்தேல்வால் மற்றும் தர்பன் குரானா ஆகியோரால் நிறுவப்பட்ட ஃபின்டெக் ஸ்டார்ட்அப் க்ரோமோ, SIG வென்ச்சர் கேபிட்டல் தலைமையிலான சீரிஸ் A நிதி சுற்றில் 11 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது. மேலும், தாஸ் கேபிட்டல், ஒய்-காம்பினேட்டர், Ace & Company, குட்வாட்டர் கேபிட்டல், சோமா கேபிட்டல், பியாண்ட் நெக்ஸ்ட் வென்ச்சர்ஸ், மற்றும் Hauz Khas Ventures போன்ற முதலீட்டாளர்களும் இச்சுற்றில் பங்கேற்றனர்.

ZippMat - B2B பரிவர்த்தனைகளை அடிப்படையாகக் கொண்ட SCaaS நிறுவனம், Indian arm of Boston-based Matrix Partners மற்றும் Matrix Partners India தலைமயிலான விதை நிதிச்சுற்றில் 10 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது. Zephyr Peacock, HDFC Bank, மற்றும் TradeCred போன்ற முதலீட்டாளர்களும் இந்த சுற்றில் இடம்பெற்றிருந்தனர். 

CashFlo - மும்பையை தளமாகக் கொண்ட fintech ஸ்டார்ட்அப், அமெரிக்க துணிகர மூலதன நிறுவனமான ஜெனரல் கேடலிஸ்ட் தலைமையிலான நிதி சுற்றில் 8.7 மில்லியன் டாலர்களை திரட்டியது. மேலும், இந்த நிதிச்சுற்றில் ஏஞ்சல் முதலீட்டாளர்களான ஜிதேந்திர குப்தா, அம்ரிஷ் ராவ், நிதின் குப்தா, ரங்கராஜன் கே (ஃபைவ்ஸ்டார்), கோகுல் ராஜாராம் மற்றும் ஒயிட்போர்டு கேபிடல் மற்றும் தற்போதைய முதலீட்டாளரான எலிவேஷன் கேபிடல் போன்றோரும் பங்கேற்றனர். 

கையகப்படுத்தல்கள் (Acquisitions):

Gate Academy by Unacademy 

Tutelor by IppoPay

Jofin by AscentHR

வெளியிடப்படாத டீல்ஸ் (Undisclosed Deals):

D’chica

Plutos ONE

Travel Buddy 

Healthledger

Diagnostics ஆகிய நிறுவனங்கள் தங்களது நிதி விவரங்களை வெளியிடவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்