Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்கள்.. ஸ்டார்ட்அப்பின் புதிய முயற்சிக்கு அமோக வரவேற்பு...

Nandhinipriya Ganeshan August 23, 2022 & 13:15 [IST]
ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்கள்.. ஸ்டார்ட்அப்பின் புதிய முயற்சிக்கு அமோக வரவேற்பு...Representative Image.

இன்றைய காலக்கட்டத்தில் தங்கத்தை வாங்குவதே பெரிய சவலாக இருக்கிறது. இதில் வைரத்தை யோசித்துக்கூட பார்க்க முடியாத நிலையில் இருக்கிறோம். ஏனென்றால், தங்கமே வைரத்தின் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், இன்றைய நவீன காலத்தில் வாழும் மக்களின் ரசனையை புரிந்துக் கொண்டு, உலகளவில் இயற்கையான வைரங்களுக்கு பதிலாக ஆய்வகத்தில் வைரம் உருவாக்கி நகைகளை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது ஒரு நிறுவனம்.

என்னது ஆய்வகத்தில் வைரமா? என்று நீங்க யோசிக்கலாம். நான் முன்பு கூறியதுபோலவே உண்மையான வைர நகைகளை வாங்குவது என்பது பெரிய சவாலானது. இந்த நுணுக்கங்களை அறிந்துக் கொண்ட டெல்லியை சேர்ந்த சூர்யா ஜெயின் மற்றும் அபிஷேக் தன் என்ற இரண்டு இளைஞர்கள் சேர்ந்து 2021 ஆம் ஆண்டு 'Aupulent' என்ற நிறுவனத்தை தொடங்கினர். 

வைர நகைகளை கனவில் கூட சிந்தித்து பார்க்காதவர்களுக்காக ஃபேஷன் பொருட்களை ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரங்களை கொண்டு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த கால மக்களின் ரசனைகளுக்கு ஏற்ப இந்த ஃபேஷன் பொருட்கள் இருப்பதால், இளைஞர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரம் சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் வைரத்தின் போலியான வடிவம் என்றாலும் அசலை போன்ற அதே தன்மையுடன் சிறப்பாக இருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இயற்கை வைரத்திற்கும் ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரத்திற்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாம். அந்த அளவிற்கு அச்சிபிசராமல் தயார் செய்கிறார்கள். 

இந்த நிறுவனம் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை புதிய கலெக்ஷன்களை அறிமுகப்படுத்துகிறது. ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரத்தை கொண்டு செயின், கம்மல், மோதிரம், பிரேஸ்லெட் போன்ற நகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 

நகை துறையில் புதுமையை படைக்கும் வகையில் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற ஃபேஷன் பொருட்களை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம். உண்மையில், நிறுவனத்தின் இப்புதிய முயற்சி பாராட்டத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்