Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

States' Startup Ranking 2021: ஆறு இடங்கள் முன்னேறிய தமிழ்நாடு... முதல்வர் வாழ்த்து..!!

Nandhinipriya Ganeshan July 05, 2022 & 14:15 [IST]
States' Startup Ranking 2021: ஆறு இடங்கள் முன்னேறிய தமிழ்நாடு... முதல்வர் வாழ்த்து..!!Representative Image.

States' Startup Ranking என்பது தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்த மேம்பாட்டு துறையால் (DPIIT - Department for Promotion of Industry and Internal Trade) வழங்கப்படும் வருடாந்திர அறிக்கையாகும். இங்கு நாட்டின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை அவற்றின் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்ப தரவரிசைப்படுத்தப்படும். இந்த திட்டம் முதன் முதலில் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. 

A&B பிரிவு:

இந்த தரவரிசை பட்டியல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் A பிரிவு மற்றும் B பிரிவு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இரண்டாவது பிரிவில் 1 கோடிக்குட்பட்ட மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன.

States' Startup Ranking 2021:

அந்த வகையில், 2021 ஆம் ஆண்டுக்கான ஸ்டார்ட்அப் தரவரிசையில், மொத்தம் 24 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள் பங்கேற்றன. அவை Top Performers, Best Performers, Leaders, Aspiring Leaders, Emerging Startup Ecosystems என்ற ஐந்து பிரிவுகளின் கீழ் தரவரிசைப்படுத்தப்பட்டன. 

❖ Top Performers - டாப் பர்ஃபாமர்ஸ் பிரிவில் கேரளா, தெலுங்கானா, ஒடிசா, மஹாராஷ்டிரா ஆகிய நான்கு மாநிலங்கள் ஏ கேட்டகிரியிலும், ஜம்மு மற்றும் காஷ்மீர் பி கேட்டகிரியிலும் சேர்க்கப்பட்டன.

❖ Best Performers - குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் ஏ பிரிலும், மேகலாயா பி பிரிவிலும் - "Best Performers" என்று பரிந்துரைக்கப்பட்டன. 

❖ Leaders - ஸ்டார்ட்அப் லீடர்ஸில் ஏ பிரிவில் ஐந்து மாநிலங்களும் (தமிழ்நாடு, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் அசாம்) மற்றும் பி பிரிவில் இரண்டு மாநிலங்களும் ஒரு யூனியன் பிரதேசமும் (அருணாச்சல பிரதேசம், கோவா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்) பரிந்துரைக்கப்பட்டன. 

❖ Aspiring Leaders - நான்காவது பிரிவில், சண்டிகர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, டெல்லி மற்றும் சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, ராஜஸ்தான் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் யூனியன் பிரதேசங்கள் சேர்க்கப்பட்டன.

❖ Emerging Startup Ecosystems - கடைசி பிரிவில் பிகார், ஆந்திரப் பிரதேசம், மிசோரம் மற்றும் லடாக் ஆகியவற்றை கொண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சேர்க்கப்பட்டன. 

வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கருத்துப்படி, இதுவரை இந்தியாவில் டிபிஐஐடியில் 70,809 பதிவுசெய்யப்பட்ட ஸ்டார்ட்அப்கள் உள்ளன. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு:

இந்த தரவரிசை பட்டியலில், ஸ்டார்ட்அப் லீடர் பிரிவில் இருக்கும் ஆறு மாநிலங்களில் "தமிழ்நாடும்" ஒன்றாக இடம்பெற்றுள்ளதை அடுத்து, டான்சிம் மற்றும் எம்எஸ்எம்இ டிவிசனை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இனி வரும் காலத்தில் டாப் பர்ஃபாமெர்ஸ் என்ற பிரிவில் தமிழ்நாடு வரும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளையும் உடனுக்குடன் பெறுங்கள். 

Tags:

States' Startup Ranking 2021 | DPIIT rankings | Startup ecosystem ranking | Startup ecosystem ranking 2022 india


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்