Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Apply Tanseed 4.0 in Tamil: அரசு தரும் ரூ.10 லட்சம் நிதி.. திருப்பி தர தேவையில்ல.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

Nandhinipriya Ganeshan July 23, 2022 & 13:00 [IST]
How to Apply Tanseed 4.0 in Tamil: அரசு தரும் ரூ.10 லட்சம் நிதி.. திருப்பி தர தேவையில்ல.. உடனே அப்ளை பண்ணுங்க..!!Representative Image.

How to Apply Tanseed 4.0 in Tamil: ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (Tamil Nadu Startup and Innovation Mission - TANSIM) பல்வேறு உதவுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு ஸ்டார்ட்அப் விதை மானிய நிதி திட்டத்தின் (Tamil Nadu Startup Seed Grant Fund - TANSEED) கீழ் ஆரம்ப கட்டத்தில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வரை விதை நிதியாக வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த திட்டத்தின் நான்காவது பதிப்பு (TANSEED 4.0) அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வம் உள்ள நிறுவனர்கள் உடனே விண்ணப்பித்து உங்க ஸ்டார்ட்அப்பை கிக்ஸ்டார்ட் செய்வதற்கான வாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகுதி:

உங்க நிறுவனம் TANSIM மற்றும் Startup India ஆகியவற்றில் பதிவுசெய்யப்பட்ட ஸ்டார்ட்அப்பாக இருக்க வேண்டும்.

நிறுவனம் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் அல்லது பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தை தமிழ்நாட்டிற்கு மாற்ற தயாராக இருக்க வேண்டும்.

மேலும், நிறுவனம் Private Limited Company ஆகவோ அல்லது Limited Liability Partnership ஆகவோ அல்லது Partnership firm ஆகவோ பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வருமான வரிக் கணக்கின்படி, கடந்த மூன்று வருடங்களில் நிறுவனத்தின் சராசரி லாபம் 5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். ஒருவேளை புதிதாக பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாக இருந்தால் அதைவிடவும் குறைவாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்பும் ஸ்டார்ட்அப் கம்பெனி ஒரு இந்திய ஸ்டார்ட்அப் ஆக இருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், உங்க ஸ்டார்ட்அப் ஏற்கனவே மற்றொரு நிறுவனத்தின் துணை/கூட்டு முயற்சியாக/அசோசியேட்டாக உருவாக்கப்பட்டிருக்க கூடாது.

கடைசி தேதி: ஆகஸ்ட் 21,2022

பதிவு செய்வதற்கான இணையதள முகவரி: Tanseed 4.0


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்