Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Chaayos Funding: டீ பிரியர்களே இந்த கடைக்கு போயிருக்கீங்களா? அடேங்கப்பா இத்தன வகையான டீயா? 

Nandhinipriya Ganeshan June 23, 2022 & 13:30 [IST]
Chaayos Funding: டீ பிரியர்களே இந்த கடைக்கு போயிருக்கீங்களா? அடேங்கப்பா இத்தன வகையான டீயா? Representative Image.

Chaayos Funding: புது டெல்லியை சேர்ந்த சாய் கஃபே ஸ்டார்ட்அப் சாயோஸ், அதன் தற்போதைய முதலீட்டாளர்களான எலிவேஷன் கேபிட்டல், டைகர் குளோபல் மேனேஜ்மென்ட், மற்றும் வெஸ்ட்மென்ட்ஸ் ஆகியவற்றின் பங்கேற்புடன், ஆல்ஃபா வேவ் வென்ச்சர்ஸ் தலைமையிலான சீரிஸ் சி சுற்றில் 53 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இன்று) திரட்டியுள்ளது. 

மேலும், திரட்டப்பட்ட நிதியை தொழில்நுட்ப மேம்பாடு, ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மற்றும் கடை விரிவாக்கம் என பலவற்றிற்கு பயன்படுத்த உள்ளதாக நிறுவனத்தின் சீஇஓ நிதின் சலூஜா தெரிவித்துள்ளார். 

சாயோஸ் ஸ்டார்ட்அப்:

2012 ஆம் ஆண்டு நிதின் சலுஜா மற்றும் ராகவ் வர்மா என்ற இரண்டு ஐஐடி (Who is the owner of Chaayos?) மாணவர்களால் நிறுவப்பட்ட சாயோஸ், தற்போது 6 பெரிய நகரங்களில் 190 கடைகளை நடத்தி வருகின்றது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் இன்னும் 100 கடைகளை நிறுவ உள்ளதாகவும் திட்டமிட்டுள்ளனர். 

இங்கு 80,000 வகையான டீ கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், டீ தூளும் (chaayos tea) விற்பனை செய்கிறார்களாம். ஆர்டர் செய்யப்பட்டவுடன் விருந்தினர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வித்தியாசமான சுவையில் டீ தயாரிக்கப்படுகிறது. சாயோஸ் ரெஸ்டோரண்ட் உங்கள் நகரங்களில் இருந்தால், ஒருமுறையாவது சென்று டீ குடிச்சிப்பார்க்கலாமே.

அப்படி இல்லையென்றால், இவர்கள் ஆன்லைனிலும் டெலிவரி செய்கிறார்களாம், உங்களுக்கு பிடித்த டீ வகையை தேர்ந்தெடுத்து ஆர்டர் போட்டு பாருங்க. அல்லது டீ தூள் வாங்கி வீட்டிலேயே டீ போட்டு குடிக்கலாம். இந்நிறுவனம் டீ மட்டும் விற்பனை செய்யவில்லையாம், முன் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களையும் விற்பனை செய்கிறார்களாம். 

மேலும், இந்த ஸ்டார்ட்அப் ஸ்டார்பக்ஸ், கோஸ்டா காபி, சாய் பாயிண்ட் போன்ற பிரபல நிறுவனங்களுடன் போட்டியாக அருமையாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், நம்ம இந்தியாவில் தேயிலை மற்றும் காபி சங்கிலி சந்தை 2023 க்குள் 4,540 கோடி ரூபாயாக உயரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்