Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Cashify Funding: இந்தியாவின் பிரபல மறு-வணிக ஸ்டார்ட்அப் நிறுவனம் புதுசா நிதி திரட்டியிருக்காங்க... எவ்வளவு தெரியுமா?

Nandhinipriya Ganeshan June 23, 2022 & 13:00 [IST]
Cashify Funding: இந்தியாவின் பிரபல மறு-வணிக ஸ்டார்ட்அப் நிறுவனம் புதுசா நிதி திரட்டியிருக்காங்க... எவ்வளவு தெரியுமா?Representative Image.

Cashify Funding: மறு-வணிக ஸ்டார்ட்அப்பான கேஷிஃபை (Cashify), நியூக்வெஸ்ட் கேபிடல் பார்ட்னர்ஸ் மற்றும் ப்ரோசஸ் தலைமையிலான சீரிஸ் E நிதிச்சுற்றில் 90 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது. மேலும், இந்த சுற்றில் தற்போதுள்ள முதலீட்டாளர்களான பெஸ்ஸெமர், ப்ளூம் வென்ச்சர்ஸ், ஒலிம்பஸ் கேபிடல் மற்றும் பராமார்க் வென்ச்சர்ஸ் ஆகியோரும் பங்கேற்றன. 

இந்த சுற்றில் பெற்ற நிதியுதவியின் அடிப்படையில் நிறுவனத்தின் மதிப்பு தற்போது இரு மடங்காக உயர்ந்துள்ளது. மேலும், இந்த ஸ்டார்ட்அப் கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஒலிம்பஸ் கேபிடல் மற்றும் ஆசிய என்விரான்மென்ட்டல் பார்ட்னர்ஸ் தலைமையிலான சீரிஸ் D நிதிச்சுற்றில் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

கேஷிஃபை ஸ்டார்ட்அப்:

பழைய அல்லது பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் கேஜெட்டுகள்/சாதனங்களை விற்கும் ஆன்லைன் தளமாக விளங்கும் கேஷிஃபை, மன்தீப் மனோச்சா, நகுல் குமார், அமித் சேத்தி மற்றும் சித்தாந்த் திங்ரா ஆகியோரால் 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்நிறுவனம் பழைய ஸ்மார்ட்போன்ஸ், லேப்டாப்ஸ், மடிக்கணினி, டெஸ்க்டாப்ஸ் மற்றும் கேமிங் கன்சோல்ஸ் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கி புதுப்பித்து மலிவு விலையில் தரமான எலக்ட்ரானிக் சாதனங்களை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறது. 

இதன் மாதாந்திர மொத்த விற்பனை மதிப்பு தற்போது 100 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்து ஆறு மாதங்களில் இரட்டிப்பாகும் எனவும் நிறுவனத்தின் தலைவர் மன்தீப் மனோச்சா தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் செங்கல் மற்றும் மோட்டார் கடைகளின் வடிவத்தில் அதன் ஆஃப்லைன் தடயங்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

தனது தரமான வணிகத்தின் மூலம் மலிவு விலையில் தரமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து ஆன்லைன் உலகில் தனக்கென ஒரு பெயரைக் கொண்டுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்