Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Veg Route Seed Funding: விவசாயத்தின் நம்பிக்கை நட்சத்திரம் வெஜ்ரூட்டின் அடுத்த அத்தியாயம்…!!

Nandhinipriya Ganeshan July 19, 2022 & 16:30 [IST]
Veg Route Seed Funding: விவசாயத்தின் நம்பிக்கை நட்சத்திரம் வெஜ்ரூட்டின் அடுத்த அத்தியாயம்…!!Representative Image.

ஷியாம் பிரசாத் ராஜசேகரன் என்பவரால் 2020 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது தான் சென்னையை சேர்ந்த மிகவும் பிரபலமான அக்ரிடெக் ஸ்டார்ட்அப் வெஜ் ரூட். இந்நிறுவனம் தென்னிந்தியாவின் அடுக்கு -2 மற்றும் அடுக்கு -3 நகரங்களில் உள்ள பண்ணைகளில் இருந்து நேரடியாக விளைப்பொருட்களை வாங்கி நுகர்வோர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் பல்வேறு முதலீட்டாளர்களிடம் இருந்து முந்தைய விதை நிதியாக $125K-யை திரட்டியது. இது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இன்று (ஜூலை 19, 2022) அமெரிக்காவை சேர்ந்த VGROW வென்ச்சர்ஸ் தலைமையிலான விதை சுற்றில் $1.1 மில்லியன் நிதியை திரட்டியுள்ளது.

மேலும், இந்த விதைச்சுற்றில் சென்னையை தளமாகக் கொண்ட ஃபின்டெக் ஸ்டார்ட்அப் Ippo Pay நிறுவனர்களான மோகன் கே மற்றும் ஜெய் குமார்; வென்ச்சர் பார்ட்னர்&இன்வெஸ்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ரவிசங்கர் கதிர்வேலு; ஆர்தா ஸ்கூல் ஆஃப் என்டப்ரென்ஷிப்பின் இணை நிறுவனரான ஹரி TN; மாமா எர்த் நிறுவனத்தின் ஹெட் அபிஷேக் ராஜ் பாண்டே; வில்கோ சோர்ஸின் நிறுவனரான சுந்தரராமம் ராமசாமி ஆகியோருடன் இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்ற ஏஞ்சல் முதலீட்டாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்களை சரியான விலையில் விற்பனை செய்யவும், சரியான விலையில் தரமான பொருட்களை சரியான நேரத்தில் டெலிவரி செய்வதன் மூலமும் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது வெஜ்ரூட். 2025 ஆம் ஆண்டிற்குள் 100+ நகரங்களில் 5000+ விவசாயிகளுடன் ஒரு நாளைக்கு சுமார் 2.5 லட்சம் நுகர்வோர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எங்களது இலக்கு என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஷியாம் பிரசாத் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். இவர்களின் சேவை மேலும் வளர பாராட்டுக்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்