Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vahak Funding: வஹாக் இவர்களிடமிருந்து இத்தன கோடியை தன்வசப்படுத்தியுள்ளது…!! எவ்வளவு தெரியுமா?

Nandhinipriya Ganeshan June 21, 2022 & 17:45 [IST]
Vahak Funding: வஹாக் இவர்களிடமிருந்து இத்தன கோடியை தன்வசப்படுத்தியுள்ளது…!! எவ்வளவு தெரியுமா?Representative Image.

Vahak Funding: ஒவ்வொரு நாளும் பில்லியன் கணக்கான மதிப்புள்ள பொருட்கள் இந்தியாவின் சாலைகள் முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன, மேலும் இந்த விநியோகச் சங்கிலியை இயக்குவது சாலை போக்குவரத்து சந்தை நிறுவனமான வஹாக் தான். 

தற்போது, இந்நிறுவனமானது ஃபண்டமெண்டல், ஐசீட் வென்ச்சர்ஸ், லியோ கேபிடல், ஆர்டிபி குளோபல் மற்றும் டைட்டன் கேபிடல் ஆகியவற்றின் பங்கேற்புடன் நெக்ஸஸ் வென்ச்சர் பார்ட்னர்ஸ் தலைமையிலான சீரிஸ் A நிதிச்சுற்றில் 14 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது. மேலும், Vahak மார்ச் 2020 ஆம் ஆண்டு முதல் சுற்றில் இருந்து இப்போது மொத்தம் 20.3 மில்லியன் டாலர்கள் திரட்டியுள்ளது.  

இந்த நிதியானது பயனர் அடிப்படை விரிவாக்கம், AI, ML, பிக் டேட்டாவை இணைத்து தொழில்நுட்ப உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் கூடுதல் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

Vahak நிறுவனம் கரன் ஷாஹா மற்றும் விகாஸ் சந்திராவத் ஆகியோரால் கடந்த 2019 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த ஸ்டார்ட்அப் இந்தியாவில் உள்ள பழமையான தளவாட (logistics) அணுகுமுறையை சீர்குலைத்து, டிரக் சப்ளையர்கள் தங்களுக்கு ஒரு பெயரை உருவாக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள சில முக்கிய வழித்தடங்களில், டிரக் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் டிரக் டிரைவர்கள் வழக்கமாக சம்பாதிப்பதை விட இரண்டு மடங்கு அதிகமாக சம்பாதிக்க வஹாக் உதவுகிறது.

உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்