Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாராந்திர நிதி குவிப்பு விபரங்கள் [செப் 19 - 24]...

Nandhinipriya Ganeshan September 26, 2022 & 13:30 [IST]
வாராந்திர நிதி குவிப்பு விபரங்கள் [செப் 19 - 24]...Representative Image.

Weekly Funding Roundup: இந்த வாரத்தில் 24 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்டி இருக்கின்றன. அதில் ஒரு நிறுவனம் (Student Ink) மட்டும் அதன் நிதி விபரங்களை வெளியிடவில்லை. ஆகமொத்தம், இந்த வாரத்தில் 23 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெற்ற மொத்த தொகையின் மதிப்பு சுமார் $220 மில்லியன் ஆகும். அதுவே, சென்ற வாரத்தில் 36 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுமார் $246 மில்லியனை பெற்றிருந்தன. வாராந்திர நிதியின் அடிப்படையில் பார்க்கும்போது இந்த வாரத்தின் மதிப்பு சென்ற வாரத்தை விடவும் சற்று குறைவாகவே உள்ளது. இருப்பினும் நிறுவனங்களின் மதிப்பு குறைவாக இருந்தாலும் தொகை அதிகளவிலேயே உள்ளது. 

இந்த வாரத்தின் முக்கிய ஒப்பந்தங்கள்:

Zopper - புதுடெல்லியை சேர்ந்த Zopper ஸ்டார்ட்அப், பெங்களூருவை தளமாக கொண்ட பிரைவேட் ஃபண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமான க்ரீஜிஸ் தலைமையிலான சீரிஸ் சி நிதியுதவி சுற்றில் 75 மில்லியன் டாலர்களை திரட்டியது. ஐசிஐசிஐ வென்ச்சர், பெஸ்ஸெமர் வென்ச்சர் பார்ட்னர்ஸ் மற்றும் ப்ளூம் வென்ச்சர்ஸ் உள்ளிட்டோரும் இந்த சுற்றில் பங்குப்பெற்றிருந்தனர். 

Light Microfinance - குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மைக்ரோஃபைனான்ஸ் ஸ்டார்ட்அப்பான லைட் மைக்ரோஃபைனான்ஸ், பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் தலைமையிலான சீரிஸ் பி நிதி சுற்றில் 24 மில்லியன் டாலர்களை திரட்டியது. மேலும், இந்த நிதியுதவிச் சுற்றில் நோர்டிக் மைக்ரோஃபைனான்ஸ் இனிஷிவேட்டிவ், டிரிபிள் ஜம்ப் பிவி மற்றும் இன்கோஃபின் ஐஎம் உள்ளிட்ட முதலீட்டாளர்களும் இடம்பெற்றிருந்தனர்.

Join Ventures - மும்பையை சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவனமான ஜாயின் வென்ச்சர்ஸ், தருண் ஜோசி என்பவரால் 2019 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது இந்த நிறுவனம் MO ஆல்டர்நேட் இன்வெஸ்ட்மென்ட் தலைமையிலான தொடர் B நிதி சுற்றில் 23.5 மில்லியன் டாலர்களை திரட்டியிருக்கிறது. 

KukuFM - மும்பையை சேர்ந்த ஆடியோ இயங்குதள நிறுவனமான குக்குஎஃப்எம், தி ஃபண்டமெண்டம் பார்ட்னர்ஷிப், பாராமார்க், கிராஃப்டன் இன்க், 3one4 கேபிடல், வெர்டெக்ஸ் மற்றும் வெர்லின்வெஸ்ட் பங்குபெற்ற சீரிஸ் பி 1 நிதிச் சுற்றில் இருந்து 21.8 மில்லியன் டாலர்களை பெற்றுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்