Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Weekly Funding Galore: இந்த வாரம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிதி குவிப்பு முழுவிபரம் [மே 16 - மே 21]..

Nandhinipriya Ganeshan May 23, 2022 & 12:15 [IST]
Weekly Funding Galore: இந்த வாரம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிதி குவிப்பு முழுவிபரம் [மே 16 - மே 21]..Representative Image.

Weekly Funding Galore: இந்திய ஸ்டார்ட்அப்களுக்கான துணிகர நிதி (Venture funding) வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. மே மூன்றாவது வாரத்தில் மொத்தம் 28 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நிதி திரட்டியுள்ளது. அதில் 24 நிறுவனங்களின் மொத்த துணிகர நிதியுதவி $438.07 மில்லியன் ஆகும். மேலும், இந்த வாரத்தின் மிகப்பெரிய ஒப்பந்தமாக GreyOrange $110 மில்லியன் நிதி திரட்டியுள்ளது. அதைத் தொடர்ந்து Fashinza மற்றும் Neso Brands விதை சுற்றில் தலா $100 மில்லியனைத் திரட்டி பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. இதற்கிடையில், மொத்த நிதியுதவி பெற்ற ஸ்டார்ட்அப்களின் நான்கு நிறுவனங்களின் நிதியுதவி பட்டியல் வெளியிடப்படவில்லை. 

இந்த வாரத்தின் ஒப்பந்தங்கள்:

ரோபோடிக் ஸ்டார்ட்அப் GreyOrange ஒரு வளர்ச்சி நிதியுதவி சுற்றில் $110 மில்லியனை திரட்டியது.

B2B சந்தையானது Fashinza, Prosus Ventures, Westbridge Capital, Accel, Elevation Capital, DisruptED மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து கடன் மற்றும் பங்குகளின் கலவையில் $100 மில்லியனை திரட்டியது.

ஈ-காமர்ஸ் ரோல்-அப் நெசோ பிராண்ட்ஸ் விதை சுற்றில் $100 மில்லியனை திரட்டி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Melorra, ஆக்சிஸ் க்ரோத் அவென்யூஸ் ஏஐஎஃப்-ஐ, எஸ்ஆர்எஃப் ஃபேமிலி ஆபிஸ், N+1 மற்றும் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து சீரிஸ் D சுற்றில் $16 மில்லியன் திரட்டியது.

எயிட் ரோட்ஸ் வென்ச்சர்ஸ் மற்றும் எலிவேஷன் கேபிடல் தலைமையில் சமூக வர்த்தக பிராண்ட் Bliss Club $15 மில்லியன் திரட்டியது.

டெக் ஸ்டார்ட்அப் Smytten ஃபயர்சைட் வென்ச்சர்ஸ், ரூட்ஸ் வென்ச்சர்ஸ், ஷார்ப் வென்ச்சர்ஸ், வாவோ பார்ட்னர்ஸ், சர்வம் பார்ட்னர்ஸ் மற்றும் பலவற்றிலிருந்து ரூ.100 கோடியை திரட்டியது.

வெளிப்படுத்தப்படாத ஒப்பந்தங்கள் (Undisclosed deals):

  • FlexC
  • WOW Skin Science
  • HealthySure
  • BHIVE Group

ஆகியவை தங்கள் நிதி விவரங்களை வெளியிடவில்லை.

இந்த வார Acquisitions:

இந்த வாரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நிதி திரட்டல்களை தவிர, நான்கு கையகப்படுத்தல்களும் (acquisitions) காணப்பட்டன.

Mamaearth இன் தாய் நிறுவனமான Honasa Consumer (HCPL), தோல் பராமரிப்பு பிராண்டான Dr. Sheth's இன் பெரும்பாலான பங்குகளை ரூ. 28 கோடி மதிப்பீட்டில் வாங்கியது. அதைத் தொடர்ந்து, PhonePe நிறுவனம் உணவக டேபிள் முன்பதிவு தளமான WealthDesk மற்றும் OpenQ -வையும், CleverTap நிறுவனம் Leanplum-வையும் மற்றும் Endurance டெக் நிறுவனம் ION எனர்ஜியின் BMS யூனிட் Maxwell எனர்ஜி சிஸ்டம்ஸ் -வையும் வாங்கியுள்ளன. இதன் மதிப்பு தெரிவிக்கப்படவில்லை. 

சென்ற வாரம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவங்களின் நிதி குவிப்பு முழுவிபரம் [மே 09 - மே 14 ]....

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செ ய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்