Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சாம்சங் மாடல் ரூ.17,499/-க்கு கிடைக்கிறது...அமேசானில் சூப்பர் ஆஃபர் | Samsung Galaxy M34 5G Amazon Sale

Priyanka Hochumin Updated:
சாம்சங் மாடல் ரூ.17,499/-க்கு கிடைக்கிறது...அமேசானில் சூப்பர் ஆஃபர் | Samsung Galaxy M34 5G Amazon SaleRepresentative Image.

அமேசானில் சாம்சங் கேலக்சி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. போன் மாற்ற நினைப்பவர்கள், குறைந்த விலையில் சூப்பர் அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்கள், புதிய ஸ்மார்ட்போன் வாங்க எண்ணுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இது தான் சரியான டைம். இந்த பதிவில் எந்த சாம்சங் நிறுவனத்தின் எந்த மாடலுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்34 விவரக்குறிப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸை சப்போர்ட் செய்யும் 6.5-இன்ச் Full HD+ AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது. அது இன்பினிட்டி-யூ எச்டிஆர் மாடல் டிஸ்பிளே கொண்டது இதனின் சிறப்பாகும். இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1280 5என்எம் சிப்செட் மூலம் இயக்கப்படும். கூடுதலாக, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் சாம்சங் ஒன் யுஐ 5.1 ஓஎஸ் ஆகியவை மூலம் இயங்கும்.

சாம்சங் மாடல் ரூ.17,499/-க்கு கிடைக்கிறது...அமேசானில் சூப்பர் ஆஃபர் | Samsung Galaxy M34 5G Amazon SaleRepresentative Image

கேமராவைப் பொறுத்தவரையில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா அடங்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது. 13எம்பி சென்சார் கேமரா அமைப்பு செல்பீ பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வேரியண்ட்டில் கிடைக்கும். இறுதியாக, 25W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 6000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, ப்ளூடூத் 5.3, வை-பை 801, டூயல் ஃபிரிகொன்சி ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த மாடல் மிட்நைட் ப்ளூ, பிரிசம் சில்வர் மற்றும் வாட்டர்ஃபால் ப்ளூ ஆகிய மூன்று கலர் ஆப்ஷனில் வருகிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ.18,999/-க்கும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ.20,999/-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, அமேசானில் இந்த மாடலுக்கு ரூ.1,500/- தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்ய வேண்டும். மேலும் ரூ.12,250 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைப்பதால், ரூ.18,999 மதிப்புள்ள 6ஜிபி ரேம் மாடலை வெறும் ரூ.17,499க்கு வாங்க முடியும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்