Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜஸ்ட் ரூ.12,999/-க்கு இவ்ளோ லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போன் வாங்கலாம்..! | Realme Narzo 60x 5G Sale Starts Today

Priyanka Hochumin Updated:
ஜஸ்ட் ரூ.12,999/-க்கு இவ்ளோ லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போன் வாங்கலாம்..! | Realme Narzo 60x 5G Sale Starts TodayRepresentative Image.

இந்தியாவில் இன்று முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது Realme Narzo 60x ஸ்மார்ட்போன். பட்ஜெட் விலையில் வாங்க நினைக்கும் நபர்களுக்கு இதை விட சிறந்த மாடல் எதுவும் கிடைக்காது. வெறும் ரூ.20,000/-க்குள் எல்லாம் லேட்டஸ்ட் அம்சங்களுடன் போன் வாங்க முடியும் என்றால் அது ரியல்மி நார்சோ 60எக்ஸ் மாடலாக மட்டும் இருக்க முடியும். இதனின் விலை, அம்சம், விவரக்குறிப்பு உள்ளிட்ட தகவல்களை பற்றி பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 60எக்ஸ் 5ஜி விவரக்குறிப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 180ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட ஆதரவுடன் 6.72-இன்ச் Full HD+ IPS LCD டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ மாலி G57 MC2 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது.. ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான Realme UI 4.0 மூலம் இயங்குகிறது.

ஜஸ்ட் ரூ.12,999/-க்கு இவ்ளோ லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போன் வாங்கலாம்..! | Realme Narzo 60x 5G Sale Starts TodayRepresentative Image

5P லென்ஸ் மற்றும் f/1.8 aperture 50எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2MP டெப்த் ஷூட்டர் ஆகியவை அடங்கிய டூயல் ரியர் கேமரா உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால் பயன்பாட்டிற்கு, 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வேரியண்ட்டில் கிடைக்கும். இறுதியாக, 33W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5G, 4G LTE, புளூடூத், GPS மற்றும் USB Type-C போர்ட் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. பாதுகாப்பிற்காக சைடு-மௌன்டட் பிங்கர் பிரிண்ட் சென்சார் அமைக்கப்பட்டுள்ளது.

ஜஸ்ட் ரூ.12,999/-க்கு இவ்ளோ லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போன் வாங்கலாம்..! | Realme Narzo 60x 5G Sale Starts TodayRepresentative Image

இந்த மாடல் ஸ்டெல்லார் க்ரீன்ஸ் மற்றும் நெபுலா பர்பிள் ஆகிய 2 கலர் ஆப்ஷனில் வருகிறது.  4ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடல் ரூ.12,999/-க்கும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ.14,999/-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அமேசான் அல்லது ரியல்மி நிறுவனத்தின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். முதல் நாள் சேல் என்பதால் வாங்குபவர்களுக்கு ரூ.1000/- தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்