Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முழுசா ரூ.7000 டிஸ்கவுண்ட்.. கம்மி பட்ஜெட்டில் சாம்சங் ஃபோன் வாங்கணுமா? செம்ம சான்ஸ்.. | Flipkart Offers Samsung Mobile

Nandhinipriya Ganeshan Updated:
முழுசா ரூ.7000 டிஸ்கவுண்ட்.. கம்மி பட்ஜெட்டில் சாம்சங் ஃபோன் வாங்கணுமா? செம்ம சான்ஸ்.. | Flipkart Offers Samsung MobileRepresentative Image.

நம்மில் பலரும் பிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களில் பாதிக்குப்பாதி தள்ளுபடி தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஃஸ்மார்ட்போன்களை வாங்குவதற்காக காத்திருப்போம். தற்போது அதற்கான நேரம் தான் இது. சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு 27% தள்ளுபடியோடு, பேங்க் ஆஃபர்களும் கொடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எந்த மாடலுக்கு தள்ளுபடி கிடைக்கிறது? அந்த போனின் சிறப்பம்சங்கள் என்ன? போன்ற தகவல்களை பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட்டில் 27% தள்ளுபடி சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் கொண்ட 6.6 இன்ச் (1080x2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே உள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12) கொண்ட சாம்சங் ஒன் யுஐ 4.1 (Samsung One UI 4.1) உடன் ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 1280 (Octa-Core Exynos 1280) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 

இந்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி என்று இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதோடு, 1 டிபி வரை மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட்டும் உள்ளது. கேமராவை பொறுத்தவரையில், பின்புறத்தில் 50 எம்பி முதன்மை கேமராவும், முன்புறத்தில் 20 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. 

இந்த போனில் சூப்பர் அம்சமாக 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி தொடர்ந்து 4 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும். எமரால்டு பிரவுன் (Emerald Brown), மிஸ்டிக் கிரீன் (Mystique Green) மற்றும் டீப் ஓஷன் ப்ளூ (Deep Ocean Blue) என்று மூன்று வண்ண விருப்பங்களில் வாங்கக் கிடைக்கிறது. 

முதலில் ரூ.24,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போன் தற்போது அந்தவிலையில் பிளிப்கார்ட் 27% தள்ளுபடி கொடுத்து விற்பனை செய்து வருகிறது. இந்த 27 சதவீதம் ஆஃபர் போக ரூ.18,025 விலைக்கே சாம்சங் போனை வாங்கிக்கொள்ளலாம். இந்த விலையில், எச்டிஎஃப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. எனவே, கம்மி பட்ஜெட்டில் தரமான சாம்சங் போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதுயொரு சரியான வாய்ப்பு என்றே சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் நல்ல பேட்டரி பேக்கப் வசதியும் கிடைக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்