Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அட்டகாசமான கேமரா அம்சத்துடன் களமிறங்கிய மூன்று 5ஜி ஸ்மார்ட்போன்கள்.. எது வாங்குவீங்க? | Oppo Reno 10 5g Series

Nandhinipriya Ganeshan Updated:
அட்டகாசமான கேமரா அம்சத்துடன் களமிறங்கிய மூன்று 5ஜி ஸ்மார்ட்போன்கள்.. எது வாங்குவீங்க? | Oppo Reno 10 5g Series Representative Image.

Oppo நிறுவனம் இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் மூன்று புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர்களுக்கு தரமான அனுபவத்தை வழங்குவதமாக இந்த ஸ்மார்ட்போன்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த Oppo Reno 10 சீரிஸில் இடம்பெற்றுள்ள ரெனோ 10 5ஜி, ரெனோ 10 ப்ரோ 5ஜி மற்றும் ரெனோ 10 ப்ரோ+ 5ஜி ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களின் விவரக்குறிப்புகள் மற்றும் விலைகளை இப்பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

அட்டகாசமான கேமரா அம்சத்துடன் களமிறங்கிய மூன்று 5ஜி ஸ்மார்ட்போன்கள்.. எது வாங்குவீங்க? | Oppo Reno 10 5g Series Representative Image

OPPO Reno 10 5G விவரக்குறிப்புகள்:

OPPO Reno 10 5G ஆனது Reno 10 சீரிஸின் அடிப்படை மாடலாகும். இது 120Hz ரெஃப்ரஸிங் ரேட் ஆதரவுடன் 6.7-இன்ச் 3D வளைந்த டிஸ்ப்ளேவுடன் வருகிறது. MediaTek Dimensity 7050 SoC சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 8GB ரேம் மற்றும் 128 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கேமராவை பொறுத்தவரையில், பின்புறத்தில் 32MP டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் உடன் 64MP பிரதான சென்சார் கொண்ட ட்ரிபிள்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 32MP செல்ஃபி கேமரா உள்ளது. மேலும், 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. ரெனோ 10 5ஜி ஆனது இரண்டு வருட ஓஎஸ் அப்டேட் வசதியையும், மூன்று வருட பாதுகாப்பு அப்டேட் வசதியையும் கொண்டுள்ளது.

அட்டகாசமான கேமரா அம்சத்துடன் களமிறங்கிய மூன்று 5ஜி ஸ்மார்ட்போன்கள்.. எது வாங்குவீங்க? | Oppo Reno 10 5g Series Representative Image

OPPO Reno 10 Pro 5G விவரக்குறிப்புகள்:

OPPO Reno 10 Pro 5G ஆனது Reno 10 சீரிஸின் மிட் மாடலாகும். இது 120Hz ரெஃப்ரஸிங் ரேட் ஆதரவுடன் 6.7-இன்ச் 3D வளைந்த டிஸ்ப்ளேவுடன் வருகிறது. Qualcomm Snapdragon 778G சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 12GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கேமராவை பொறுத்தவரையில், பின்புறத்தில் 32MP டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் உடன் OIS ஆதரவுடன் 50MP Sony IMX890 பிரதான சென்சார் கொண்ட டிரிபிள்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 32MP செல்ஃபி கேமரா உள்ளது. மேலும், 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. ரெனோ 10 ப்ரோ 5ஜி ஆனது இரண்டு வருட ஓஎஸ் அப்டேட் வசதியையும்,  மூன்று வருட பாதுகாப்பு அப்டேட் வசதியையும் கொண்டுள்ளது.

அட்டகாசமான கேமரா அம்சத்துடன் களமிறங்கிய மூன்று 5ஜி ஸ்மார்ட்போன்கள்.. எது வாங்குவீங்க? | Oppo Reno 10 5g Series Representative Image

OPPO Reno 10 Pro+ 5G விவரக்குறிப்புகள்:

OPPO Reno 10 Pro+ ஆனது Reno 10 சீரிஸின் டாப் மாடலாகும். இது 120Hz ரெஃப்ரஸிங் ரேட் ஆதரவுடன் 6.7-இன்ச் 3D வளைந்த டிஸ்ப்ளேவுடன் வருகிறது. Qualcomm Snapdragon 8+ Gen1 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 12GB ரேம் மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கேமராவை பொறுத்தவரையில், பின்புறத்தில் 4MP டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் உடன் OIS ஆதரவுடன் 50MP சோனி IMX890 முதன்மை சென்சார் கொண்ட டிரிபிள்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 32MP செல்ஃபி கேமரா உள்ளது. மேலும், 100W வேகமாக சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. ரெனோ 10 ப்ரோ+ 5ஜி ஆனது மூன்று வருட ஓஎஸ் அப்டேட்வசதியையும், நான்கு வருட பாதுகாப்பு அப்டேட் வசதியையும் கொண்டுள்ளது.

அட்டகாசமான கேமரா அம்சத்துடன் களமிறங்கிய மூன்று 5ஜி ஸ்மார்ட்போன்கள்.. எது வாங்குவீங்க? | Oppo Reno 10 5g Series Representative Image

OPPO Reno 10 சீரிஸ் விலை:

OPPO Reno 10 5G ரூ.32,999 க்கும், Reno 10 Pro 5G ரூ.39,999 க்கும், OPPO Reno 10 Pro+ 5G ரூ.54,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. HDFC, ICICI மற்றும் SBI போன்ற முன்னணி வங்கிகளின் கார்டுகள் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.4000 வரை தள்ளுபடி மற்றும் ரூ.4000 கேஷ்பேக் பெறலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்