Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் தட்டித்தூக்கும் ரியல்மியின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன்கள்.. அதுவும் பட்ஜெட் விலையில்.. | Realme 11 5g Series

Nandhinipriya Ganeshan Updated:
ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் தட்டித்தூக்கும் ரியல்மியின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன்கள்.. அதுவும் பட்ஜெட் விலையில்.. | Realme 11 5g SeriesRepresentative Image.

பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி (Realme), கேமரா பிரியர்களுக்காகவே பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் கூடிய இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. முழுத்தகவல்களை பார்க்கலாம்.

இந்தியாவில் ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், அசத்தலான அம்சங்களுடன் மலிவு விலையில் புதுப்புது ஸ்மார்ட்போன்களை ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துவருகிறது. அந்தவகையில், வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரியல்மி 11 5ஜி மற்றும் ரியல்மி 11எக்ஸ் 5ஜி என்ற இரண்டு புத்தம்புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. அடிப்படை மாடலான Realme 11 5G முன்பு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த புதிய ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு, வண்ண விருப்பங்கள், விற்பனை விவரங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆகியவற்றை பார்க்கலாம்.

ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் தட்டித்தூக்கும் ரியல்மியின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன்கள்.. அதுவும் பட்ஜெட் விலையில்.. | Realme 11 5g SeriesRepresentative Image

விவரக்குறிப்புகள்:

இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் எஸ்ஓசி (octa-core MediaTek Dimensity 6100+ SoC) சிப்செட் மூலம் இயக்கப்படும். மேலும்  120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட் 6.72-இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல் எஸ்டி பிளஸ் IPS LCD டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். Realme 11 5G ஆனது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட இரண்டு வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்படும். அதேபோல்,  Realme 11x 5G ஆனது 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் கிடைக்கும். 

கேமரா விவரம்:

குளோரி பிளாக் மற்றும் குளோரி கோல்ட் என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கக்கூடிய Realme 11 5G ஆனது 108எம்பி முதன்மை பின்புற கேமரா, 16எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. அதேபோல், மிட்நைட் பிளாக் மற்றும் பர்பில் டான் என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கக்கூடிய Realme 11x 5G ஆனது 64எம்பி முதன்மை பின்புற கேமரா, 8எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 2எம்பி சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது.

ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் தட்டித்தூக்கும் ரியல்மியின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன்கள்.. அதுவும் பட்ஜெட் விலையில்.. | Realme 11 5g SeriesRepresentative Image

அம்சங்கள்:

Realme 11 5G ஆனது 67W SuperVOOC வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. அதேபோல், Realme 11x 5G ஆனது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இரண்டு போன்களுமே ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ரியல்மி யூஐ(Realme UI) மூலம் இயக்கப்படும். மற்ற அம்சங்களை பொறுத்தவரையில், இரண்டு ஃபோன்களிலுமே 5G, 4G LTE, Bluetooth, NFC, GPS மற்றும் USB Type-C ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்காக, இரண்டு ஃபோன்களிலும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். 

விலை & ஆஃபர்:

Realme 11 மற்றும் Realme 11x க்கான முன்கூட்டிய ஆர்டர்கள் ஆகஸ்ட் 23 அன்று தொடங்கி ஆகஸ்ட் 28 வரை தொடரும் என்று கூறப்படுகிறது. அடிப்படை மாடலை முன்கூட்டிய ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.1,299 மதிப்புள்ள Realme Buds Wireless 2 Neo ஐப் இலவசமாக பெற வாய்ப்புள்ளது. அதேபோல்,  Realme 11x -க்கு ரூ.599 மதிப்புள்ள Realme Buds 2 ஐப் இலவசமாக பெறலாம்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்