Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆரம்பித்து விட்டது அமேசான் கிரேட் சம்மர் சேல்...ஐபோன் 14 வாங்கலாம் வெறும் ரூ.40,000/-க்கு!

Priyanka Hochumin Updated:
ஆரம்பித்து விட்டது அமேசான் கிரேட் சம்மர் சேல்...ஐபோன் 14 வாங்கலாம் வெறும் ரூ.40,000/-க்கு!Representative Image.

மக்களே! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த Amazon The Great Summer Sale 2023 நாளை [மே 4, 2023] நள்ளிரவு தொடங்குகிறது. இதில் ஐபோன் 14 மாடலுக்கு அசத்தலான தள்ளுபடிகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் இதனின் அம்சங்கள், விலை, சலுகை உள்ளிட்ட தகவலை விரிவாக பார்க்கலாம்.

ஐபோன் 14 அம்சங்கள்

ஐபோன் 14 மாடல் ஸ்மார்ட்போன் 1,200 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஆப்பிளின் சொந்த ஏ15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. ரியர் கேமராவைப் பொறுத்தவரை, 1.9um சென்சார் மற்றும் எஃப்/1.7 அப்பெச்சர் உடனான 12 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா + எஃப்/2.4 அப்பெச்சர் உடனான 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா ஆகிய டூயல் ரியர் கேமரா (Dual rear Camera) செட்டப் அமைக்கப்பட்டுள்ளது.

செல்பீ மற்றும் வீடியோ கால் பயன்பாட்டிற்கு, முன்பக்கத்தில் எஃப்/1.9 அப்பெச்சர் உடனான 12 மெகாபிக்சல் ட்ரூடெப்த் (TrueDepth) கேமரா உள்ளது.

ஆஃபர் விலை

ஐபோன் 14 மாடலின் அறிமுக விலை ரூ.79,990/- ஆகும். ஆனால் அமேசானில் ஐபோன் 14 மீது ரூ.9,901/- ஃபிளாட் ஆஃபர் (Flat Offer) அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது ஐபோன் 14 மாடலை ரூ.69,999/-க்கு நம்மால் வாங்க முடியும். இத்துடன் அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டிற்கான ரூ.2,331 கேஷ்பேக், ஐசிஐசிஐ மற்றும் கோடக் வங்கிகளுக்கான ரூ.375 என்கிற பேங்க் ஆஃபர் (Bank Offer), ரூ.5,000 அமேசான் பே ரிவார்ட்ஸ் (Amazon Pay Rewards) மற்றும் ரூ.20,000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆஃபர் (Exchange Offer) போன்றவைகளையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தினால் ஐபோன் 14 இன் விலை ரூ 39,293 ஆக குறைக்க முடியும். இப்ப பார்த்தால் ரூ.70,000/- மதிப்புள்ள ஐபோன் 14-ஐ நம்மால் வெறும் ரூ.40,000/-க்கு வாங்க முடியும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்