Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vivo T2 5G Series | பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் புதிய டி2 5ஜி ஸ்மார்ட்போன்.. விலை எவ்வளவு?

Nandhinipriya Ganeshan Updated:
Vivo T2 5G Series | பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் புதிய டி2 5ஜி ஸ்மார்ட்போன்.. விலை எவ்வளவு?Representative Image.

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ ஒரே நேரத்தில் இரண்டு 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி அதிரடி காட்டியுள்ளது. அதாவது, விவோ நிறுவனம் விவோ டி2 5ஜி, விவோ டி2எக்ஸ் 5ஜி என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சரி வாங்க, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் தனித்துவமான அம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம். 

Vivo T2 5G Series | பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் புதிய டி2 5ஜி ஸ்மார்ட்போன்.. விலை எவ்வளவு?Representative Image

விவோ டி2 5ஜி அம்சங்கள்:

Vivo T2 5G ஸ்மார்ட்போன், 2400×1080 தீர்மானம் கொண்ட 6.38-இன்ச் AMOLED FHD+ டிஸ்ப்ளே, 90Hz புதுப்பிப்பு வீத பேனல், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் 360Hz ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Funtouch OS உடன் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில், 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. தேவைப்பட்டால் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் ஸ்டோரேஜை அதிகப்படுத்திக் கொள்ளலாம். குவால்காம் ஸ்னாப்டிராகன் (Qualcomm Snapdragon) 695 சிப்செட் வசதியைக் கொண்ட இந்த போனில் அட்ரினோ 619 ஜிபியு வசதியும் உள்ளது. 

மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி bokeh கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு, 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 4500 எம்ஏஎச் பேட்டரி, 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 

Vivo T2 5G Series | பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் புதிய டி2 5ஜி ஸ்மார்ட்போன்.. விலை எவ்வளவு?Representative Image

விவோ டி2எக்ஸ் 5ஜி அம்சங்கள்:

Vivo T2x 5G ஸ்மார்ட்போன், 2408×1080 பிக்சல் தீர்மானம் கொண்ட 6.58-இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்ளே வசதியை கொண்டுள்ளது. மேலும், மீடியாடெக் டைமென்சிட்டி 6020 சிப்செட் வசதியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Funtouch OS இல் இயங்கும். மேலும் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. தேவைப்பட்டால் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் ஸ்டோரேஜை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி bokeh கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 

Vivo T2 5G Series | பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் புதிய டி2 5ஜி ஸ்மார்ட்போன்.. விலை எவ்வளவு?Representative Image

விலை எவ்வளவு?

விவோ டி2 5ஜி விலை - விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.18,999க்கும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.20,999க்கும் கிடைக்கிறது. வெலாசிட்டி வேவ் மற்றும் நைட்ரோ பிளேஸ் என்ற இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் இன்று முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ டி2எக்ஸ் 5ஜி விலை - விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் கிடைக்கிறது. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.12,999க்கும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.13,999க்கும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.15,99க்கும் கிடைக்கிறது. ரைன் ப்ளூ, அரோரா கோல்ட் மற்றும் பிளாக் என்ற மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 21-ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்