Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

நீங்க சாம்சங், LG ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவரா? அப்ப உஷார்!

Priyanka Hochumin Updated:
நீங்க சாம்சங், LG ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவரா? அப்ப உஷார்! Representative Image.

டெக்னாலஜி வளர வளர அதில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி மக்களின் தரவுகளை திருட நினைக்கும் பல கும்பல்கள் இன்னும் நடமாடிக் கொண்டே தான் இருக்கின்றனர். அதில் தற்போது சாம்சங் மற்றும் எல்ஜி ஸ்மார்ட்போன்களை குறிவைத்து மால்வேர் தாக்குதல் ஏற்படும் அபாயத்தை கண்டறிந்துள்ளனர். இந்த தகவல் சாம்சங் மற்றும் எல்ஜி பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் இந்த பிராண்டில் மீடியா டெக் சிப்செட்களைப் பயன்படுத்திய மாடல்களுக்கு மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படும் என்பது சற்று ஆறுதலான விஷயமாகும்.

சமீபத்தில், கூகுள் ஊழியர் மற்றும் மால்வேர் ரிவர்ஸ் இன்ஜினியருமான லுகாஸ் சீவியர்ஸ்கி, பல ஆண்ட்ராய்டு ஓஇஎம்-கள் பப்ளிக்காக வெளிப்படுத்தப்பட்டது என்று கூறினார். பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் மால்வேரை நிறுவ திட்டம் தீட்டும் நபர்கள் இதனை (Android OEMs) பயன்படுத்த முடியும். இதற்கான அர்த்தம் என்னவென்றால் - ஹேக்கர்கள் டிவைஸின் உற்பத்தியாளர் அல்லது ஆப் டெவலப்பர் போல காண்பித்து மால்வேரை நம்முடைய ஸ்மார்ட்போனில் நிறுவ முடியும். அதற்கு பின்னர் ஏதேனும் மூன்றாம் தரப்பு செயலி டவுன்லோட் செய்யப்பட்டால், மிக எளிமையாக ஹேக் செய்து அவர்கள் நினைத்ததை செய்யலாம்.

சிஸ்டம் இமேஜில் ஆண்ட்ராய்டு ஆப்பை சைன் செய்ய பயன்படுத்தப்படும் சைனிங் சர்டிஃபிகேட்டை, பிளாட்ஃபார்ம் சர்டிஃபிகேட் என்றும் அழைக்கலாம். ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அணுக உதவும் அதே சான்றிதழுடன் (same certificate) சான்றளிக்கப்பட்ட வேறு எந்த ப்ரோகிராமிற்கும் கிடைக்கும் என்று கூகுள் ப்லாக் போஸ்ட் குறிப்பிடுகிறது.

இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த பிரச்சனை குறித்து சாம்சங் நிறுவனம் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. எனவே, 2016 முதல் பாதுகாப்புத் திருத்தங்களை (security fixes) நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். மேலும் இந்த சாத்தியமான பாதிப்பு குறித்து எந்த சம்பவங்கள் பதிவாகவில்லை என்றும் கூறுகின்றனர். அதிலும் முக்கியமாக Application Signing Act எந்த அளவிற்கு முக்கியமானது என்று இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதாவது ஸ்மார்ட்போன் போனில் இருக்கும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் எப்படி படிக்காமல் மற்றும் ஆராயாமல் போனை பாதுகாக்கிறது என்பது முக்கிய அங்கமாகும். மேலும் போனின் டெவெலப்பர் மட்டுமே சாப்ட்வேர் அப்டேட்களை வாடிக்கையாளர்களின் போனிற்கு வழங்க முடியும் என்று இந்த செயல்முறை உறுதி செய்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்