Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,863.26
10.32sensex(0.01%)
நிஃப்டி22,401.30
-1.10sensex(-0.00%)
USD
81.57
Exclusive

Xiaomi-யின் புது MIUI 14 அப்டேட்...ட்ரையல் பாக்கணுமா? அப்ப இதை பண்ணுங்க!

Priyanka Hochumin Updated:
Xiaomi-யின் புது MIUI 14 அப்டேட்...ட்ரையல் பாக்கணுமா? அப்ப இதை பண்ணுங்க! Representative Image.

Xiaomi நிறுவனம் MIUI 14, அதன் ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான சாப்ட்வேர் இன்டெர்பேஸ் (software interface) நாளை டிசம்பர் 1 ஆம் தேதி முதல் வெளியிடப்பட உள்ளது. மேலும் நாளை அறிமுகமாகப்போகும் Xiaomi 13 சீரிஸ் உடன் இந்த அப்டேடும் வெளியாக உள்ளது.

Xiaomi-யின் புது MIUI 14 அப்டேட்...ட்ரையல் பாக்கணுமா? அப்ப இதை பண்ணுங்க! Representative Image

வரவிருக்கும் சியோமி ஸ்மார்ட்போன்கள் வெளியாவதற்கு இரன்டு நாட்களுக்கு முன்பு, சீன OEM ஆனது சீனாவில் MIUI 14 க்கான ஆரம்ப அணுகல் திட்டத்தை (early access program) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்பே இந்த லேட்டஸ்ட் அப்டேட்டை சீனாவில் இருக்கும் மக்கள் மட்டும் பயன்படுத்த முடியும். மேலும் சிறிது நாட்களுக்கு பிறகு உலகில் மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படலாம்.

Xiaomi-யின் புது MIUI 14 அப்டேட்...ட்ரையல் பாக்கணுமா? அப்ப இதை பண்ணுங்க! Representative Image

இது குறித்து ITHome இன் அறிக்கையின்படி, சீனாவில் சியோமி நிறுவனம் வெளியாகப்போகும் MIUI 14 லேட்டஸ்ட் அப்டேட்டிற்கான ஆரம்ப அணுகலுக்குப் பயனர்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. இந்த சோதனை திட்டம் நவம்பர் 28 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 28 ஆம் தேதி அன்று இரவு 11.59 மணிக்கு முடிவடைகிறது. மேலும் ஒரு பயனர் தன்னிடம் இருக்கும் ஏதேனும் ஒரே சியோமி டிவைஸை (அதாவது ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்) மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படும். பயனர் பதிசெய்யப்பட்ட பின்பு அதே அக்கவுண்டை வைத்து வேறொரு சாதனத்தை பதிவுசெய்ய முடியாது.

Xiaomi-யின் புது MIUI 14 அப்டேட்...ட்ரையல் பாக்கணுமா? அப்ப இதை பண்ணுங்க! Representative Image

இந்த திட்டமானது குளறுபடிகளை தவிர்க்க கட்டம் கட்டமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. வரவிருக்கும் இந்த சாப்ட்வேர் அப்டேட் (MIUI 14) Android 13 ஐ அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு முந்தைய சியோமி போன்களுக்கு Android 12 ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 14 அப்டேட்டை பெரும் வாய்ப்புள்ளது. இந்த அப்டேட்டில் இந்த மாறியான அம்சங்கள் கிடைக்கும் என்று தகவலை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் மேம்படுத்தப்பட்ட பிரைவசி செட்டிங்ஸ், பெட்டெர் தீமிங் சப்போர்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட மீடியா பிளேயர் அறிவிப்பு உள்ளிட்ட முக்கிய Android 13 அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்