Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அண்ணாமலை வாட்சில் அப்படி என்னதான் இருக்கிறது....? | Bell Ross Watch Review Tamil

Manoj Krishnamoorthi Updated:
அண்ணாமலை வாட்சில் அப்படி என்னதான் இருக்கிறது....? | Bell Ross Watch Review TamilRepresentative Image.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அணிந்திருந்த ஒரு எக்ஸ்குளுசிவ் வாட்ச் பற்றி திமுக அமைச்சர்கள் கேள்வி எழுப்பினர்.  அப்படி இந்த வாட்சில் என்ன....?  ஒரு வாட்சுக்கும் வருமான வரி வரை என்ன சம்பந்தம்...? எவ்வளவு காஸ்ட்லி வாட்ச் என்றால் இதன் பின்னணி என்ன..? விலை எவ்வளவு இருக்கும்..? போன்ற கேள்விக்கு விடையாக இந்த பதிவு அமையும். 

ரபேல் வாட்ச் (Bell & Ross Watches)

டசால்ட் நிறுவனம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த போர் விமானம் தயாரிக்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடும் வகையில் Bell & Ross நிறுவனத்துடன் இணைந்து விண்டேஜ் ஸ்போர்ட்ஸ் ஹெரிட்டேஜ்  என்ற மாடல் வாட்சை பல்கான் என்ற போர் விமானத்தின் நினைவாக வெளியிட்டது. 

Bell & Ross சுவிஸ்ட்சர்லாந்தில் ஒரு பிரபல வாட்ச் கம்பெனி ஆகும். 2013 ஆம் ஆண்டு பல்கான் விமானத்தின் நினைவாக வெளியிட்ட வாட்ச் போல 2015 ஆம் ஆண்டு BR-03-94 என்னும் மாடலில் 500 வாட்ச்களை தயாரித்தது. இந்த 500 வாட்ச்களும் ரபேல் விமானத்தின் நினைவாக உருவாக்கப்பட்டது. 36 ரபேல் போர் விமானம் இந்தியா டசால்ட் நிறுவனத்திடம்  இருந்து வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

500 வாட்ச்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டதாக அறிவிப்பு வந்ததால் முன்பதிவு மூலம் விற்பனை செய்யப்பட்டது, அத்துடன் இதன் விலை ஒவ்வொரு நாட்டின் வரிகளுக்கு ஏற்றவாறு 3.5- 5.5 லட்சம் என இருக்கும். 

சிறப்பம்சங்கள் (Bell & Ross Watch Specifications in Tamil)

ரபேல் வாட்ச் ரபேல் விமானத்தின் நினைவாக உருவாக்கப்பட்டதால் ரபேல் மாதிரி படம் இதில் உண்டு. இது Matt Black கேஸிங் செராமிக் மூலம் உருவாக்கப்பட்டது. மேலும் ஆட்டோமெடிக் மெஷின் பொருத்தப்பட்ட ஸ்ட்ராப் ரப்பரால் உருவாக்கப்பட்டது. 

இந்த ரபேல் வாட்ச் கேஸ் 42 mm அகலுமும் 12.80 mm அடர்த்தியில் உருவானது.  இதில் கிலோமீட்டர் கணக்கெடுக்கும் டாக்கி மீட்டர், வாட்டர் ரெசிஸ்டெண்ட் லெவல் 100 மீட்டர் மற்றும் எந்த வானிலையும் தாங்கும் தன்மை போன்ற அம்சங்களை பெற்றுள்ளது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்