Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கல்லூரி மாணவர்களுக்கான பட்ஜெட் Friendly லேப்டாப்ஸ்.. | Best Budget Laptop for Students 2023

Nandhinipriya Ganeshan Updated:
கல்லூரி மாணவர்களுக்கான பட்ஜெட் Friendly லேப்டாப்ஸ்.. | Best Budget Laptop for Students 2023Representative Image.

நீங்க ஒரு கல்லூரி மாணவராக இருக்கும்போது, ​​சரியான மடிக்கணினிகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஏனென்றால், அது உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதோடு பட்ஜெட்க்கு ஏற்றவாறும் இருக்க வேண்டும். பொதுவாக, லேப்டாப் என்றாலே விலை கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும். அவற்றில் விலை குறைவான லேப்டாப்களை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் கவலைப்பட வேண்டாம், இந்த பதிவில் குறிப்பாக கல்லூரி செல்லும் மாணவர்கள் வாங்குவதற்கு ஏற்ற 5 சிறந்த பட்ஜெட்டு Friendly லேப்டாப்களின் பட்டியலை வழங்கியுள்ளோம்.

Acer Aspire 3

ஏசர் ஆஸ்பியர் 3 லேப்டாப் பட்ஜெட்டுக்கு ஏற்ற மற்றொரு லேப்டாப் ஆகும். இது குறைந்த விலையில் நல்ல செயல்திறனை வழங்குகிறது. மடிக்கணினி இன்டெல் பிரீமியம் செயலி மற்றும் 4 ஜிபி ரேம் உடன் வருகிறது. இது அடிப்படை பணிகளுக்கு மிகவும் போதுமானது. மேலும் இதன் எடையானது 1.9 கிலோ மட்டுமே.

விலை: ரூ.25,000

Lenovo Ideapad S145 

Lenovo Ideapad குறைந்த விலையில் சிறந்த அம்சங்களை வழங்கக்கூடிய லேப்டாப்களில் ஒன்றாகும் . இந்த லேப்டாப் AMD Ryzen 3 செயலி மற்றும் 4GB ரேம் உடன் வருகிறது. மேலும், செயலாக்கம், இணைய உலாவுதல் மற்றும் மீடியா ஸ்ட்ரீமிங் போன்ற அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கிய இந்த லேப்டாப் ஒரு நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் எடையை பொறுத்துவரை வெறும் 1.85 கிலோ எடையை மட்டுமே. எங்கும் எளிதாக எடுத்த செல்ல முடியும். 

விலை: ரூ.28,000

Asus VivoBook X507

இன்டெல் கோர் i3 செயலி மற்றும் 4GB RAM உடன் வரும் இந்த லேப்டாப் ஒரு நேர்த்தியான வடிவமைப்பையும் கொண்டுள்ளது. வெறும் 1.7 கிலோ எடையைக் கொண்டுள்ள இந்த லேப்டாப் அடிப்படை பணிகளுக்கு போதுமானது. மேலும், எங்கும் எந்த நேரத்திலும் ஈஸியாக எடுத்து செல்ல முடியும். 

விலை: ரூ.28,000

Dell Inspiron 3567

இன்டெல் கோர் ஐ3 செயலி மற்றும் 4ஜிபி ரேம் உடன் வரும் இந்த லேப்டாப்பில் 15.6-இன்ச் முழு HD டிஸ்ப்ளே மற்றும் 1TB ஹார்ட் டிரைவ் உள்ளது. இதனால், ஏராளமான ஃபைல்களை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இவ்வளவு குறைந்த விலையில் அதிக சேமிப்பகத்தை கொண்டுள்ள இந்த லேப்டாப் கல்லூரி மாணவர்களுக்கு சிறந்த தேர்வாக கண்டிப்பாக இருக்கும்.

விலை: ரூ.36,000 - ரூ.37,000

HP Pavilion x360

ஹெச்பி பெவிலியன் x360 லேப்டாப் 2-இன்-ஒன் லேப்டாப் ஆகும். அதாவது இதை லேப்டாப்பாகவும், டேப்லெட்டாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். அடிப்படை பணிகளுக்கு போதுமான, இன்டெல் கோர் ஐ3 செயலி மற்றும் 4ஜிபி ரேம் உடன் வருகிறது. இது 360 டிகிரி கீலைக் கொண்டுள்ளது, இது உங்கள் தேவைகளைப் பொறுத்து வெவ்வேறு முறைகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

விலை: ரூ.30,000 - ரூ.40,000


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்