Sat ,Jul 20, 2024

சென்செக்ஸ் 80,604.65
-738.81sensex(-0.91%)
நிஃப்டி24,530.90
-269.95sensex(-1.09%)
USD
81.57
Exclusive

குறைவான விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் கேனான் மிரர்லெஸ் கேமரா அறிமுகம்.. | Canon EOS R100 Mirrorless Camera Price

Nandhinipriya Ganeshan Updated:
குறைவான விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் கேனான் மிரர்லெஸ் கேமரா அறிமுகம்.. | Canon EOS R100 Mirrorless Camera PriceRepresentative Image.

சமீபத்தில் கேனான் நிறுவனம் பவர்ஷாட் வி10 மாடலை இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து தற்போது நிறுவனம் RF மவுண்ட் ஃபார்மேட் பான்கேக் லென்ஸுடன், Canon EOS R100 என்ற புதிய சிறிய மிரர்லெஸ் கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது. Canon EOS R100 கேமராவின் சிறப்பம்சம், விலை எவ்வளவு பற்றிய முழு விபரங்களை பார்க்கலாம்.

கேனான் இஓஎஸ் ஆர்100 மிரர்லெஸ் கேமரா அம்சங்கள்:

Canon EOS R100 முதல் முறையாக மிரர்லெஸ் கேமரா பயன்படுத்துபவர்களுக்காகவும், EOS Rebel அல்லது EOS M கேமரா வரம்பில் பழக்கப்பட்டவர்களுக்காவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. EOS R100 அதன் 24.2-மெகாபிக்சல் APS-C அளவு CMOS சென்சார் மற்றும் DIGIC 8 இமேஜ் செயலி மூலம் அழகான தெளிவான படங்களை எங்கும், எந்த நேரத்திலும் எடுக்க முடியும். மேலும், இந்த கேமரா 1.04 மில்லியன் டாட் பின்புற LCD டிஸ்ப்ளேவைக் (1.04 million dot rear LCD display) கொண்டுள்ளது.

வீடியோ திறன்களைப் பொறுத்தவரை, 4K வீடியோக்கள் மற்றும் ஸ்லோ-மோஷன் வீடியோக்களை அதிக பிரேம் ரேட் ரெக்கார்டிங்குடன் பதிவு செய்துக்கொள்ளலாம். ஹைப்ரிட் ஆட்டோ மோடு உங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோ துணுக்குகளை அன்றைய நாளின் செயல்பாடுகளின் டைஜெஸ்ட் மூவியாக மாற்றுகிறது. அதே நேரத்தில் 4K டைம்லேப்ஸ் வீடியோ பயன்முறையானது ஒரு காட்சியின் காட்சிகளை முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடைவெளியில் தானாகவே எடுத்து அவற்றை உயர் தெளிவுத்திறன் கொண்ட வீடியோவாக மாற்றுகிறது. 

குறைவான விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் கேனான் மிரர்லெஸ் கேமரா அறிமுகம்.. | Canon EOS R100 Mirrorless Camera PriceRepresentative Image

கிரியேட்டிவ் அசிஸ்ட் மோடு, கிரியோட்டிவ் ஃபில்ட்டர்ஸ், சீன் மோடுகள் மற்றும் சீன் இன்டெலிஜென்ட் ஆட்டோ ஆகியவை கூடுதல் அம்சங்களாகும். கேமராவானது புகைப்படங்களுக்கு 100–12,800 (H:25,600) மற்றும் 1080p குவாலிட்டி உள்ள வீடியோக்களுக்கு 100–12,800 (H:25,600) ISO வரம்பைக் கொண்டுள்ளது. கேமராவின் எடை 356 கிராம் மட்டுமே, எனவே பயணங்களில் எடுத்து செல்வதற்கும் ஈஸியாக இருக்கும். இது இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், புளூடூத் மற்றும் வைஃபை இணைப்பு மூலம், உங்கள் ஸ்மார்ட்போன் வழியாக Canon Camera Connect பயன்பாட்டின் மூலம் நீங்க எடுத்தப்  புகைப்படங்களை உங்க சமூக ஊடகங்களில் எளிதாகப் பகிர்ந்துக் கொள்ளலாம். 

எலக்ட்ரானிக் வ்யூஃபைண்டர், இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (Movie Digital IS) மற்றும் கண்/முகம் கண்டறியும் ஆட்டோஃபோகசிங் (Eye Detection AF) அம்சத்தின் மூலம், நீங்கள் நடக்கும்போது வீடியோ அல்லது புகைப்படம் எடுத்தாலும், நபரை மையமாக வைத்து, நிலையான காட்சிகளை உறுதி செய்துக்கொள்ளலாம். மேலும், ஒரே டேக்கில், 29 நிமிடங்கள் 59 வினாடிகள் வரை சாதாரண வீடியோவாகவும், 7 நிமிடங்கள் 29 வினாடிகள் உயர்-பிரேம்-ரேட் வீடியோவாகவும் எடுத்துக் கொள்ள முடியும்.

குறைவான விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் கேனான் மிரர்லெஸ் கேமரா அறிமுகம்.. | Canon EOS R100 Mirrorless Camera PriceRepresentative Image

RF மவுண்ட் ஃபார்மேட் பான்கேக் லென்ஸ்:

கேமராவுடன், நிறுவனம் RF28mm f/2.8 STM பான்கேக் என்ற லென்ஸையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இது வெறும் 25cm நீளமும் 120 கிராம் எடையும் கொண்டது. இந்த லென்ஸ் முழு-பிரேம் கேனான் மிரர்லெஸ் கேமராக்கள் மற்றும் EOS R100 போன்ற APS-C சென்சார் வகை கேமரா இரண்டிற்கும் இணக்கமானது. மேலும், இது மூன்று பெரிய விட்டம் கொண்ட பிளாஸ்டிக்-அச்சு அஸ்பெரிகல் (plastic-moulded aspherical lenses)லென்ஸ்களைப் பயன்படுத்துகிறது. f/2.8 துளையுடன் வரும் இந்த லென்ஸின் குவிய நீளம் (focal length) 28மிமீ ஆகும்.  

கேமரா & லென்ஸின் விலை:

Canon EOS R100 கேமரா இந்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Canon EOS R100 இன் விலை (Body Only) USD 479.99 (தோராயமாக ரூ.39,690) ஆகும். அதுவே, RF-S18-45mm F4.5-6.3 IS STM லென்ஸுடன் சேர்த்து கேமராவின் மொத்த விலை USD 599.99 (தோராயமாக ரூ. 49,610)ஆகும். F4.5-6.3 IS STM மற்றும் RF-S55-210mm F5-7.1 IS STM லென்ஸ்களுடன், கேமராவின் மொத்த விலை USD 829.99 (சுமார் ரூ.68,630) ஆகும். தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய  RF28mm f/2.8 STM லென்ஸின் விலை US$299.99 (தோராயமாக ரூ. 24,805) ஆகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்