Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரு சிறுவனின் விளையாட்டால்...FASTag-க்கு வந்த சோதனை...விளக்கம் சொல்லி ஓயல!

Priyanka Hochumin July 27, 2022 & 10:30 [IST]
ஒரு சிறுவனின் விளையாட்டால்...FASTag-க்கு வந்த சோதனை...விளக்கம் சொல்லி ஓயல!Representative Image.

ஸ்மார்ட் டிவைஸ்கள் மூலம் FASTag இல் இருந்து பணம் திருடப்படுவதாக ஒரு புரளி கிளம்பி வருகிறது. ஒரே ஒரு வீடியோ மொத்த நாட்டின் கவனத்தையும் FASTag மீது திருப்பியுள்ளது. அது என்ன சம்பவம் என்று பார்க்கலாம் வாங்க.

தேசிய நெடுஞ்சாலையில் செல்லுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனை ஆன்லைன் முறையில் செயல்படுத்தவே FASTag, நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் நீண்ட நேரம் வரிசையில் நிக்காமல் செல்லலாம். இந்த திட்டத்தை இந்த ஆண்டு முதல் அனைத்து வாகனங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இருப்பினும் ஒரு சில தருணங்களில் கூடுதல் கட்டணம் அல்லது இரண்டு முறை பணம் பிடித்தம் செய்யப்படுவதாக பயனர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இந்த சமயத்தில் ஸ்மார்ட் வாட்ச்சை பயன்படுத்தி FASTag இல் இருந்து பணம் மோசடி செய்யும் வகையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதன் மூலம் மக்கள் FASTag மீது சந்தேகத்துடன் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அப்படி என்ன செய்தான் அந்த சிறுவன்?

வடமாநிலங்களில் ரோடு சிக்னலில் நீண்ட நேரங்களாக நிற்கும் கார்களின் கண்ணாடியை துடைத்து காசு கேட்கிறார்கள் சிறுவர்கள். அதில் ஒரு சிறுவன் கார் கண்ணாடியை துடைத்து கொண்டிருக்க தன்னுடைய வாட்ச்சை FASTag மீது வைத்து உடன் அவனுடைய வாட்சில் சிவப்பு லைட் எரிகிறது. இதனை பார்த்ததும் அந்த காரின் உரிமையாளர் அந்த சிறுவனை துரத்தும் வீடியோ வெளியாகி அனைவரையும் குழப்பி உள்ளது. இதன் மூலம் அந்த வாட்சில் சிவப்பு லைட் எரிந்தது FASTag இல் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என்று அனைவரும் கமெண்டில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

NPCI இன் விளக்கம்!

இதனை தொடர்ந்து விளக்கம் அளித்த இந்திய தேசிய கொடுப்பனவு கவுன்சில், FASTag இல் இப்படி மோசடி செய்ய முடியாது. ஏனெனில் சுங்கச்சாவடிகளில் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே FASTag சேவை இயங்கும். மேலும் சுங்கச்சாவடி சேவை வழங்கும் நிறுவனங்களால் மட்டுமே FASTag மூலம் பணப்பிடித்தம் செய்ய முடியும். அதே போல் FASTag சேவை வழங்கும் PayTM நிறுவனமும் அந்த வீடியோ போலியானது என்று ட்விட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ளனர்.

எனவே மக்களே FASTag இல் அங்கீகரிக்கப்படாத எந்த ஒரு சாதனம் மற்றும் தொழில்நுட்பத்தாலும் முறைகேடு செய்ய முடியாது என்று தீர்மானமாக கூறப்பட்டுள்ளது.

Fastag fraud news, fastag latest news today, fastag fraud video, fastag fraud using watch, fastag fraud with watch, fastag fraud viral video, fastag fraud cybersecurity, fastag fraud case, fastag fraud in india,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்