Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

WhatsApp New Update: போதும் போதும் லிஸ்ட் பெருசா போய்கிட்டே இருக்கு! வாட்ஸ்அப் கொண்டு வரப்போகும் அப்டேட்களின் பட்டியல்!

Priyanka Hochumin July 26, 2022 & 12:00 [IST]
WhatsApp New Update: போதும் போதும் லிஸ்ட் பெருசா போய்கிட்டே இருக்கு! வாட்ஸ்அப் கொண்டு வரப்போகும் அப்டேட்களின் பட்டியல்!Representative Image.

WhatsApp New Update: மக்களை குஷியில் ஆழ்த்தும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு அப்டேட்டை வெளியிட போகிறது. இனிமேல் வாட்ஸ்அப் பயனர்களை வேற ஒரு அவதாரத்தில் பார்க்க முடியும் என்பது உறுதி. வாருங்கள் அதனைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்வோம்.

வாட்ஸ்அப்பின் புது அவதாரம்

மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் மக்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்து அம்சங்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் அடுத்ததாக அவதார் பயன்பாட்டை கொண்டு வருகிறது. Facebook போலவே வாட்ஸ்அப்பிலும் அவதாரங்களை பயன்படுத்தும் அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை WABetaInfo கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீங்கள் வீடியோ கால் பேசும் பொழுது உங்களின் முகத்தை காட்ட விரும்பாத பட்சத்தில் இந்த அவதாரத்தை உங்களின் முகமூடியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது டிட்டோ பேஸ்புக் போல தான்

Facebook Messenger செயலியில் இருப்பது போன்று தான் வாட்ஸ்அப்பிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது. நீங்கள் உங்களுடைய அவதூறை உருவாக்கலாம், பின்பு சேட்டிங் செய்யுங்கள் உங்களின் அவதாரை தனி பயனாக்கி ஸ்டிக்கராகவும் யூஸ் பண்ணலாம். இது தற்போது டெவெலப்மென்டில் இருப்பதால் எப்பொழுது பயனர்கள் உபயோகிக்கலாம் என்று தெரியவில்லை.

நெக்ஸ்ட் அப்டேட்களின் பட்டியல்

நாம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இல் போட்டோ, வீடியோ அல்லது ஏதேனும் டைப் செய்து வைப்போம். ஆனால் வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் அம்சத்தில் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.

மெசேஜ்களுக்கு பதிலளிக்கும் வகையில் 6 எமோஜிகளை மட்டுமே இதுவரை காண்பிக்கிறது. ஆனால் தற்போது மெசேஜை அழுத்தினால் அனைத்து எமோஜிகளும் காண்பிக்கப்படும். அதனுள் நீங்கள் செலக்ட் செய்து ரிப்ளை செய்யலாம். இது வாட்ஸ்அப் யூசர் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதுவரை Delete for Everyone ஆப்ஷன் 1 மணிநேரம் 8 நிமிடங்கள் மற்றும் 16 வினாடிக்கள் வரை பயன்பாட்டில் உள்ளது. இந்த நேரத்திற்குள் நீங்கள் ஏதேனும் மெசேஜை டெலீட் செய்ய விரும்பினால் செய்யலாம். இந்த நேரத்தை இன்னும் கூடுதலாக்கி மொத்தம் 2 நாட்கள் 12 மணி நேரம் வரை விரிவடைய வாட்ஸ்அப் முடிவெடுத்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

அதே போல் வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கும் உறுப்பினரை யாரேனும் தகாத முறையில் பேசி மெசேஜ் அனுப்பினால் அதனை அகற்றும் உரிமையை குரூப் அட்மினுக்கு வழங்கப்பட்டது. குரூப் அட்மின் அந்த மெசேஜை தாராளமாக டெலீட் செய்யலாம்.

WhatsApp New Update, WhatsApp New Update 2022, WhatsApp New Update today, WhatsApp New Update emoji, WhatsApp New Update features, WhatsApp New Update android, WhatsApp New Update tamil, WhatsApp New Update apk, whatsapp new update avatar, avatar update in whatsapp,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்