Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,014.23
8.29sensex(0.01%)
நிஃப்டி22,534.20
32.20sensex(0.14%)
USD
81.57
Exclusive

Father's Day Gift 2022 in Tamil: தந்தையர் தினத்தை முன்னிட்டு...உங்களுடைய அப்பாவுக்கு இந்த கிஃப்ட் வாங்குங்க! அசந்து போய்டுவாங்க!

Priyanka Hochumin June 16, 2022 & 10:30 [IST]
Father's Day Gift 2022 in Tamil: தந்தையர் தினத்தை முன்னிட்டு...உங்களுடைய அப்பாவுக்கு இந்த கிஃப்ட் வாங்குங்க! அசந்து போய்டுவாங்க!  Representative Image.

Father's Day Gift 2022: இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் ஜூன் மாதத்தில் வரப்போகிறது ஜூன் 19, 2022. அன்று உலகம் முழுவதும் 'தந்தையர் தினம்' ஆக கொண்டாடப்படுகிறது. அன்று அவர்களை ஸ்பெஷலாக ஃபீல் பண்ண வைக்க நாம் ஏராளாமான யோசனைகளை மேற்கொள்வோம். அப்பாவுக்கு இந்த கிஃப்ட் நல்ல இருக்குமா? இல்ல அவருக்கு பயனாகும் வகையில் ஏதேனும் வாங்கலாமா? என்று தலைய பிச்சிகிட்டு இருப்போம். உங்களுடைய குழப்பங்களை தீர்த்து வைக்க இதோ எங்களால் முடிந்த ஒன்று.

நாம் பெரும்பாலும் நம் பெற்றோர்களின் உடல் நலத்தை கவனிக்கும் வகையில் அல்லது அவர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் ஏதேனும் வாங்கி தரலாம் என்று யோசிப்போம். ஏனெனில் நாம் வாங்கும் பரிசு எவ்ளோ காஸ்டிலியா இருக்குதுங்கறத விட, எவ்ளோ பயனுள்ளதா இருக்குதுங்கிறது தான் முக்கியம். அதற்கான சிறந்த கேட்ஜெட்ஸ்-களின் பட்டியல்களைப் பார்க்க தொடர்ந்து படியுங்கள்.

Smart Coffee Mug

உங்களுடைய தந்தை காபி பிரியராக இருந்தால் நீங்கள் தாராளமாக இந்த பரிசை வாங்கித் தரலாம். ஏனெனில் இந்த ஸ்மார்ட் காபி மக் ஒரு நாள் முழுவதும் உங்களுக்கு வேண்டிய சூட்டில் வைத்திருக்க உதவும். நீங்கள் காபி தயார் செய்து விட்டு அதை இந்த மக்-கில் ஊற்றி அதை அந்த warmer என்று கூறப்படும் பிளேட் போன்றவற்றில் வைத்து உங்களுக்கு வேண்டிய temperature இல் வைக்கவும். அதை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்து குடிக்கலாம். உங்களுக்கு வேலையும் மிச்சம், தலைவலியை உடனே சரி செய்வது போன்று ஒரு நிம்மதியும் கிடைக்கும்.

Earpods

ஒரு வேளை தந்தை தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், இது ஒரு பெஸ்ட் சாய்ஸ். அவருக்கு பிடித்த இளையராஜா பாடல்களை பிலே லிஸ்டில் வைத்துக்கொண்டு காலை மாலை வாக்கிங் செல்லும் பொழுது கேட்கலாம். அப்பொழுது தன்னுடைய பிள்ளை வாங்கிக் கொடுத்த நியாபகம் அவருக்கு வந்து வந்து செல்லும். நீங்கள் வயர்டு அல்லது வயர்லெஸ் இரண்டில் எது வேண்டுமானாலும் வாங்கித்தரலாம். ஆனால் தந்தைக்கு சௌகரியமாக இருக்க வேண்டும் என்றால், வயர்லெஸ் ஹெட்போன் வாங்கி கொடுங்கள்.  ஏனெனில் அதனை ப்ளூடூத் மூலமாக கனெக்ட் செய்துக்கலாம், டச் மூலமாக ஆன் மற்றும் ஆஃப் செய்துகொள்ளலாம். மேலும் ஹை குவாலிட்டியில் பாடல் கேட்கலாம்.

Smart Watch

தந்தையின் உடல் நலத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு இருக்கிறதா. அப்ப யோசிக்காமல் இந்த பரிசை வாங்கிக்கொடுங்கள். ஏனெனில் தற்போது வரும் ஸ்மார்ட் வாட்சில் ஏகப்பட்ட டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. அது நம்முடைய இதய துடிப்பு, ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு, நம்மை தண்ணீர் குடிக்க ஞாபக படுத்தும், நம்முடைய உடலில் ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் அலெர்ட் செய்யும் என்று நிறைய இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் உங்கள் தந்தை மற்றும் தாயின் உடல் நலத்தை கண்காணித்துக்கொண்டே இருக்கலாம்.

Neck Massager

கழுத்து வலி அதிகமா இருக்கா? உங்கள் அப்பாக்கு. இந்த நெக் மசாஜர் கண்டிப்பா அவங்களுக்கு பயனளிக்கும். இது அவங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும். நம்மக்கு இப்ப வேலை அதிகாமாக இருப்பதால் தினமும் நம்முடைய பெற்றோர்க்கு மசாஜ் செய்ய முடியாது. இந்த கேட்ஜெட்டை வாங்கிக் கொடுத்தால் அவர்களுக்கு கழுத்து வலிக்கும் சமயத்தில் இதனை பயன்படுத்திக்கலாம். இது கழுத்து, முதுகு, வயிறு, இடுப்பு, தொடை என்று அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.

 

Father's Day Gift 2022 in Tamil, father's day 2022, father's day 2022 gifts, father's day 2022 gift ideas, father's day 2022 gifts amazon, father's day 2022 gadgets gifts india, father's day 2022 gadgets gifts tamil, father's day 2022 gadgets gifts ideas, father's day 2022 gift from daughter, father's day 2022 gadgets gifts from son, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்