Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

iPad Pro 2022: எல்லாமே advanced ஸ்பெக்ஸ்...வாங்க ரெடியா இருங்க...ஆனா ரேட்டு தான்!

Priyanka Hochumin October 19, 2022 & 12:00 [IST]
iPad Pro 2022: எல்லாமே advanced ஸ்பெக்ஸ்...வாங்க ரெடியா இருங்க...ஆனா ரேட்டு தான்!Representative Image.

iPad Pro 2022: இதுவரை வந்த ஆப்பிள் டேப்லெட்களை மிஞ்சும் அளவிற்கு வெளியானது புது ஐபாட் ப்ரோ (2022). ஆப்பிள் எம்2 செயலியைக் கொண்ட ஐபாட் ப்ரோ 2022 நேற்று செவ்வாயன்று நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த லேட்டஸ்ட் மாடல் அமெரிக்காவில் mmWave ஆதரவு மற்றும் ஹை-ஸ்பீட் Wi-Fi 6E உள்ளிட்ட 5G இணைப்புடன் விருப்பமாக பொருத்தப்பட்டுள்ளன. இன்னும் இதில் இருக்கும் ஏராளமான விஷயங்களைப் பற்றி பார்ப்போம். இந்த ஐபாட் ப்ரோ இப்போ முன்பதிவுக்கு கிடைக்கிறது, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்தது.

iPad Pro 2022: எல்லாமே advanced ஸ்பெக்ஸ்...வாங்க ரெடியா இருங்க...ஆனா ரேட்டு தான்!Representative Image

கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க....

இந்த லேட்டஸ்ட் iPad Pro 2022, 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் மொத்தம் இரண்டு வேரியண்டில் வருகிறது. இதில் 11 இன்ச் ஐபாட் ப்ரோ, Wi-Fi மாடலுக்கு ரூ. 81,900/- மற்றும் Wi-Fi + செல்லுலார் மாடலுக்கு ரூ. 96,900/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுவே 12.9 இன்ச் ஐபாட் ப்ரோ, Wi-Fi மாடலுக்கு ரூ. 1,12,900/- மற்றும் Wi-Fi + செல்லுலார் மாடலுக்கு ரூ. 1,27,900/- என்று அறிமுகமானது. இது சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே ஆகிய கலர் ஆப்ஷனில் வருகிறது, மேலும் 128GB, 256GB, 512GB, 1TB மற்றும் 2TB ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் கிடைக்கும்.

இந்தியாவில் ஆப்பிள் பென்சிலின் (2வது ஜென்) விலை ரூ. 11,900/- ஆகும். அது மட்டும் இல்லாமல் ஆப்பிள் பிளாக் மற்றும் வைட் கலரில் அதன் மேஜிக் கீபோர்டு டாக், ஸ்மார்ட் கீபோர்டு ஃபோலியோ மற்றும் ஸ்மார்ட் ஃபோலியோ ஆகியவற்றை 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபாட் ப்ரோ மாடல்களுக்கு வழங்குகிறது.

iPad Pro 2022: எல்லாமே advanced ஸ்பெக்ஸ்...வாங்க ரெடியா இருங்க...ஆனா ரேட்டு தான்!Representative Image

11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் வித்தியாசங்கள்....

ஆப்பிள் ஐபாட் ப்ரோ 2022, 11 இன்ச் மாடலில் 1688x2388 பிக்சல் தெளிவுத்திறனுடன் கூடிய லிக்விட் ரெடினா டிஸ்ப்ளே மற்றும் ப்ரோமோஷனுடன் 120 ஹெர்ட்ஸ் வரை புதுப்பிப்பு வீதம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இது 470 கிராம் எடை கொண்டது.

இதுவே 12.9 இன்ச் மாடலைப் பார்த்தால், 2048x2732 பிக்சல் தெளிவுத்திறனுடன் கூடிய லிக்விட் ரெடினா எக்ஸ்டிஆர் மினி-எல்இடி (XDR mini-LED) டிஸ்ப்ளே மற்றும் ப்ரோமோஷனுடன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதம் உள்ளது. இது சாதாரணமாக பயன்படுத்தும் போது 1000 nits மற்றும் HDR கன்டென்ட் உடன் 1600 நிட்கள் வரை உச்ச பிரகாசத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இது 685 கிராம் எடை கொண்டுள்ளது. 

iPad Pro 2022: எல்லாமே advanced ஸ்பெக்ஸ்...வாங்க ரெடியா இருங்க...ஆனா ரேட்டு தான்!Representative Image

பொதுவா இருக்கும் அம்சங்கள்...

இந்த புது ஆப்பிள் iPad Pro 2022 மாடல்கள், இப்போ ஷ்கிரீனில் இருந்து 12mm வரை வட்டமிடும் ஆப்பிள் பென்சிலை கண்டறிய முடியும். இந்த ரெண்டு இன்ச் மாடல் ஐபாட்டிலும் 5G இணைப்புடன் கூடிய மாறுபாடுகளில் வருகின்றன. இரண்டு பேனல் வகைகளும் ட்ரூ டோன் மற்றும் P3 wide colour gamut reproduction போன்றவற்றை ஆதரிக்கிறது. மேலும் இவை Thunderbolt 4 இணைப்பு மற்றும் USB Type-C போர்ட்டில் 6K ரெசல்யூஷன் டிஸ்ப்ளேக்களுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. மற்ற இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 6E மற்றும் புளூடூத் 5.3 ஆகியவை அடங்கும்.

iPad Pro 2022: எல்லாமே advanced ஸ்பெக்ஸ்...வாங்க ரெடியா இருங்க...ஆனா ரேட்டு தான்!Representative Image

கேமராவும் தாறுமாறு!

லேட்டஸ்ட் iPad Pro 2022 மாடல்கள், 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் முன் கேமராவுடன் f/2.4 அபெர்ச்சர் லென்ஸ் மற்றும் சென்டர் ஸ்டேஜ் ஆதரவு கொண்ட செல்பீ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பின்னாடி f/1.8 துளை லென்ஸுடன் கூடிய 12-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 10-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, f/2.4 அபெர்ச்சர் லென்ஸுடன், லிடார் ஸ்கேனருடன் டூயல் ரியர் கேமரா கொண்டுள்ளது. மேலும் 20W USB Type-C பவர் அடாப்டருடன் கொண்டு வருகிறது. அவை நான்கு ஸ்பீக்கர் அமைப்பு மற்றும் ஐந்து மைக்ரோஃபோன்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.    


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்