Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Oppo K10 5G Price in India: இன்று முதல் விற்பனையாகும் Oppo K10 5G ஸ்டைலிஷ் ஸ்மார்ட்போன்! பாத்துட்டு வாங்குங்க!

Priyanka Hochumin June 15, 2022 & 09:15 [IST]
Oppo K10 5G Price in India: இன்று முதல் விற்பனையாகும் Oppo K10 5G ஸ்டைலிஷ் ஸ்மார்ட்போன்! பாத்துட்டு வாங்குங்க!Representative Image.

Oppo K10 5G Price in India: இந்தியாவில் இன்று மதியம் சரியாக 12 மணி முதல் விற்பனைக்கு வரும் Oppo K10 5G ஸ்மார்ட்போன். தற்போது புது போன் வாங்க நினைக்கும் அனைவருக்கும் கிடைத்த அற்புதமான வாய்ப்பு இதுவே. ஏன் இவ்ளோ உறுதியா சொல்றோம்னு முழுசா படித்து தெரிஞ்சிக்கோங்க.

Oppo K10 5G 

கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஓப்போ 10 கே 5ஜி ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் முதன் முறையாக விற்பனைக்கு வருகிறது. எனவே, ஆரம்ப சலுகையாக இந்த போனுக்கு நிறைய தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உங்களுக்கென்று ஒரு பட்ஜெட் இருக்கும், அதற்குள் இந்த ஸ்மார்ட்போன் இருக்குமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். அதற்கு உறுதியான பதில் 'ஆம்' கண்டிப்பாக உங்கள் பட்ஜெட்டிற்குள் தான் இந்த புது ஸ்டைலிஷ் ஸ்மார்ட்போன் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 17,499/- என்று ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் குறிப்பிட்டுள்ளது. நீங்கள் Axis அல்லது SBI வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். மேலும் பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கோடக் மஹிந்திரா வங்கியின் கார்டு உங்களிடம் இருந்தால் அதற்கு சிறப்பு சலுகைகள் உண்டு.

இவ்ளோ கம்மியாவா?

மேலே குறிப்பிட்டுள்ள வங்கியின் கார்டுகளில் ஏதேனும் இன்றைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன் வாங்கினால் ஊன்களுக்கு ரூ. 1,500/- குறைக்கப்படும். இப்பொழுது கூட்டிக்கழித்து பார்த்தல் மோதாமக இந்த ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ. 15,999/- மட்டுமே. இப்ப சொல்லுங்க இது உங்க பட்ஜெட் குள்ள வந்திடுச்சு தானே.

Oppo K10 5G அம்சங்கள் | Oppo K10 5G Specifications

இந்த மலிவு விலை ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 810 உடன் இணைந்து 6GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இயங்குகிறது. இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், Oppo K10 5G ஸ்மார்ட்போன் மொத்தமா ஏழு பேண்டுகளின் ஆதரவுடன் வருகிறது. பின்புறத்தில் 48MP பிரைமரி சென்சார் கொண்ட டூயல் கேமரா உள்ளது. வீடியோ மற்றும் செல்ஃபிகளுக்கு, AI போர்ட்ரெய்ட் கொண்ட 8MP முன் சென்சார் உள்ளது.

மேலும் ஆண்ட்ராய்டு 12 இன் அடிப்படையில் ColorOS மூலம் இயங்குகிறது. இது 33W SUPERVOOCTM பாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரியை ஆதரிப்பதாக கூறப்படுகிறது. செக்யூரிட்டி பொறுத்தவரை போனை அன்லாக் செய்வதற்காக சைடு மவுண்டட் பிங்கர் பிரிண்ட் சென்சார் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்போனே ஓசன் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இவை அனைத்தையும் தெரிந்த பிறகு இந்த புது ஸ்மார்ட்போனை வாங்கலாமா என்று நீங்க முடிவெடுத்துக்கொள்ளுங்கள். 

Oppo K10 5G Price in India, Oppo K10 5G specifications, Oppo K10 5G launch date in india, Oppo K10 5G price in india flipkart,  Oppo K10 5G flipkart,  Oppo K10 5G amazon,  Oppo K10 5G specs,  Oppo K10 5G 8 128,  Oppo K10 5G pro,  

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்