Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Fire-Bollt Talk 2 Smartwatch: இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் Fire-Bollt Talk 2 ஸ்மார்ட் வாட்ச்! விலை எவ்ளோ தெரியுமா?

Priyanka Hochumin May 30, 2022 & 19:15 [IST]
Fire-Bollt Talk 2 Smartwatch: இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் Fire-Bollt Talk 2 ஸ்மார்ட் வாட்ச்! விலை எவ்ளோ தெரியுமா?Representative Image.

Fire-Bollt Talk 2 Smartwatch: SpO2 டேக்கிங், முழு மெட்டல் பாடி மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் போன்றவற்றை கொண்டுள்ள Fire-Bollt Talk 2 ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது இருக்கும் அவசர உலகத்தில் மக்கள் தங்கள் உடல்நலத்தை கவனித்துக்கொள்ள மறந்துவிடுகின்றனர். அதற்காகவே உருவாக்கப்பட்டது தான் இந்த ஸ்மார்ட் வாட்ச்கள். இது உங்களின் இதயத் துடிப்பு, இரத்தத்தில் இருக்கும் SpO2 லெவல், நீங்கள் உடற்பயிற்சி செய்யும்பொழுது கண்காணிப்பது, உங்களை தண்ணீர் குடிக்க நியாபகம் படுத்துவது போன்ற நிறைய செயல்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட் வாட்ச் என்னென்ன அம்சங்களைக் கொண்டுள்ளது என்று பாக்கலாம்.

5000mAh பேட்டரி...ஃபேஸ் வேக் அம்சம்...விவோவின் மலிவு விலை போன் அறிமுகம்!

Fire-Bollt Talk 2 அம்சங்கள் Fire-Bollt Talk 2 Specifications

இந்த ஸ்மார்ட் வாட்ச் 240x240 ரிசொல்யூஷன் கொண்ட டச் ஷ்கிரீன் டிஸ்பிலே மற்றும் 2D ஹை ஹார்ட்நெஸ் கிளாஸைக் (high hardness glass) கொண்டுள்ளது. மேலும் Fire-Bollt Talk 2 ஸ்மார்ட் வாட்ச் 1.28-இன்ச் TFT LCD உடன் வழங்கப்படுகிறது. கூடுதலாக, இந்த ஸ்மார்ட் வாட்ச் நீடித்து நிலைக்க (durability) முழு மெட்டல் பாடியைப் பெறுகிறது. இதில் வாய்ஸ் அசிஸ்டன்ட் இருப்பதால் பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு கட்டளையிட முடியும். Play 2 mini உதவியுடன் இப்பொழுது பயனர்கள் ஸ்மார்ட் வாட்ச்சில் கேம் விளையாட முடியும். மேலும் பில்ட்-இன் மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கர்கள் இருப்பதால் புளூடூத் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளவும் பெறவும் உங்களை அனுமதிக்கிறது. இது டயல் பேட், ரீசென்ட் கால்ஸ் மற்றும் கான்டாக்ட் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் மாடல் நம்பர் BSW042 ஆகும். இந்த ஸ்மார்ட் வாட்ச் கிட்டத்தட்ட 60 ஸ்போர்ட்ஸ் மோடுகளைக் கொண்டுள்ளது.

இதில் கிட்டத்தட்ட 8 நாட்கள் வரை பேட்டரி ஆயுளை நீடிக்க உதவும் லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளத்தைக் கொண்டுள்ள டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்களை ஆதரிக்கிறது. வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ்டிற்கான IP68 மதிப்பீட்டை இந்த ஸ்மார்ட் வாட்ச் பெற்றுள்ளது. இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள Fire-Bollt Talk 2 ஸ்மார்ட் வாட்ச் தற்போது அமேசானில் கிடைக்கிறது. அதுவு மிக குறைந்த விலையாக ரூ. 2,499/-க்கு வாங்கலாம். மேலும் இது பிளாக், நேவி ப்ளூ, சில்வர் கிறீன், சில்வர் கிரே மற்றும் சில்வர் பிங்க் ஆகிய ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. 

வெறும் ரூ.999/-க்கு...40 மணி நேர பிளேடைம்...DSP ENC டெக்னாலஜி...இன்னும் பல அம்சங்களுடன்! புது இயர்பட் 

Fire-Bollt Talk 2 Smartwatch, Fire-Bollt Talk 2 launch date, Fire-Bollt Talk 2 review, Fire-Bollt Talk 2 amazon, Fire-Bollt Talk 2 sports mode, Fire-Bollt Talk 2 specifications, Fire-Bollt Talk 2 price in india,  

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்