Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Galaxy S22 Camera Comparison: இதுவா அதுவா எது பெஸ்ட்! Galaxy S22-ல தான் கேமரா சூப்பர்... ரீசன் இது தான்!

Priyanka Hochumin May 28, 2022 & 14:55 [IST]
Galaxy S22 Camera Comparison: இதுவா அதுவா எது பெஸ்ட்! Galaxy S22-ல தான் கேமரா சூப்பர்... ரீசன் இது தான்!Representative Image.

Galaxy S22 Camera Comparison: மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் ஒன்று சாம்சங், அதுவும் Samsung Galaxy-யாகும். இதில் கேலக்சி S21 vs கேலக்சி S22, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில் எது டக்கரான கேமரா, டச், குவாலிட்டி போன்றவற்றில் டாப் கிளாஸாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த பதிவில் கேமராவை கொண்டு எது சூப்பராக இருக்கிறது என்பதை பார்ப்போம். சாம்சங் ஸ்மார்ட்போன்களில் கேலக்சி S22 இல் 50MP சென்சார் கொண்ட கேமரா கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே கேலக்சி S22+ மற்றும் கேலக்சி S21+ கேமராவில் எது சிறப்பாக இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

போன்/கேமரா

பிரைமரி கேமரா

அல்ட்ரா வைட் கேமரா

டெலிஃபோட்டோ கேமரா

Galaxy S21+

டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் மற்றும் OIS உடன் 12MP (1/1.76-inch) பிரைமரி கேமரா

12MP (1/2.55-inch) அல்ட்ரா-வைட் கேமரா

3x ஹைப்ரிட் ஜூம் மற்றும் OIS உடன் 64MP டெலிஃபோட்டோ கேமரா (1/1.72-இன்ச்)

Galaxy S22+

டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் மற்றும் OIS உடன் 50MP (1/1.56-inch) பிரைமரி கேமரா

12MP (1/2.55-inch) அல்ட்ரா-வைட் கேமரா

OIS மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 8MP டெலிஃபோட்டோ கேமரா (1/3.94-inch)

கேலக்சி S21+ மற்றும் கேலக்சி S22+ இரண்டிலும், முன் கேமரா 10MP செல்ஃபி கேமராக்கள் மற்றும் டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் உள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள், வைத்திருக்கும் அனைத்து கேமராக்களைப் பயன்படுத்தி 4K 60fps வீடியோக்களை ரெகார்ட் செய்ய முடியும். Galaxy S21+ இன் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் Galaxy S22+ இன் பிரைமரி கேமராவைப் பயன்படுத்தி 8K 24fps வீடியோக்களை பதிவு செய்யலாம். 

கேலக்சி S21+ vs கேலக்சி S22+ பிரைமரி கேமரா | Samsung Camera Comparison

சாம்சங் பிரைமரி ரியர் கேமராவில் இமேஜிங் ஹார்டுவேரை மேம்படுத்தியுள்ளது. Galaxy S22+ கேமராவில் Galaxy S21+ ஐ விட, பெரிய மற்றும் புதிய சென்சார் பயன்படுத்துகிறது. இதனால் கேமராவின் குவாலிட்டி மேம்படுத்தப்பட்டு, விவரங்களை துல்லியமாக தருகிறது. மேலும் இயற்கை படங்களை எடுக்கும் பொழுது புல், இலைகள், மேகம் போன்றவை மிக துல்லியமாக கூடிய விவரத்துடன் நன்றாக தெரிகிறது.  டைனமிக் வரம்பு சற்று அகலமாக இருப்பதால், பல முக்கிய விவரங்கள் படத்தின் நிழல் பகுதிகளில் நன்றாக தெரியும். போட்டோவில் நிறங்கள் நேரில் பார்ப்பதை விட கண்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும். 

லோ-லைட் கண்டிஷன்

லைட் குறைவாக இருக்கும் நேரம் அல்லது இடத்தில் போட்டோ எடுக்கும் பொழுது, Galaxy S21+ ஐக் காட்டிலும் Galaxy S22+ ஷார்ப், துல்லியமான விவரங்கள், சிறந்த அமைப்புகளுடன் காண்பிக்கிறது. Galaxy S21+ அதிக இரைச்சல் மற்றும் குறைந்த விவரங்களைக் கொண்டு போட்டோவை தருகிறது.

நைட் மோட்

இரண்டு ஸ்மார்ட்போனிலும் நைட் மோடு பயன்படுத்தி போட்டோ எடுத்தால், ஒரே மாதிரியான படத் தரத்தை வழங்குகிறது. இருப்பினும் Galaxy S22+ இல் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் கொஞ்சம் முன்னிலையில் உள்ளது.

போர்ட்ரெய்ட் மோட்   

Galaxy S22+ போர்ட்ரெய்ட் மோடில் Galaxy S21+ ஐ விட சிறந்த படங்களை நமக்குத் தருகிறது. போட்டோவில் தலை முடி, பின்னணியில் இருக்கும் பொருட்களுக்கும் நமக்கும் இருக்கும் வித்தியாசங்களை மிகவும் துல்லியமாக தெரிவிக்கிறது.

மேக்ரோ ஷாட்ஸ்

இதைப் பொறுத்த வரை Galaxy S21+ சிறப்பாக இருக்கிறது. இதில் எடுக்கும் மேக்ரோ ஷாட்கள் நேரில் பார்க்கும் நிறத்திற்கு ஏற்றவாறு காண்பிக்கிறது மற்றும் லோ லைட் கண்டிஷனில் எடுக்கும் படங்கள் கூட உண்மையான விவரங்களை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

அல்ட்ரா-வைட் கேமராக்கள் | Samsung Galaxy S22 Camera

இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஒரே மாதிரியான கேமரா அனுபவத்தை வழங்குகிறது. போட்டோ விவரங்களைப் பொறுத்தவரை சமநிலை தான், ஆனால் நாய்ஸ் கட்டுப்படுத்துவதில் நல்ல வேலைப்பாடுகள் நடத்தப்பட்டுள்ளது. Galaxy S22+ இன் அல்ட்ரா-வைட் கேமராவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் நிழல்களில் கூடுதல் விவரங்களைக் காணலாம். இருப்பினும் Galaxy S21+ சிறப்பம்சங்கள் (அதாவது Highlights) மீது கூடுதல் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது.

டெலிஃபோட்டோ கேமராக்கள் | Galaxy S22 Camera Comparison

Galaxy S22 சீரிஸில் டெலிஃபோட்டோ கேமரா ஹார்ட்வேர் மேம்படுத்தப்பட்டுள்ளது. Galaxy S21 மற்றும் Galaxy S21+ 64MP சென்சார்களை முழுவதுமாக நம்பியிருந்தன, பிறகு 3x ஜூம் அடைய டிஜிட்டல் முறையில் ஜூமிங்கில் முக்கியத்துவத்தை அதிகரித்தன. Galaxy S22 மற்றும் Galaxy S22+, 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 8MP சென்சாரைப் பயன்படுத்துகின்றன. 

Galaxy S22+ அதிக (டிஜிட்டல்) ஜூம் நிலையிலும் தெளிவான விவரங்களை அளித்தது. Galaxy S21+ கேமரா 10x ஜூம் வரை நன்றாக இருந்தது, அதற்கு பிறகு தெளிவான போட்டோ அனுபவத்தை அளிக்கவில்லை.

மேலும் முன் கேமரா மற்றும் வீடியோ எடுப்பதில் கூட கேலக்சி S22+ முன்னிலையில் இருப்பதால் இந்த முடிவுக்கு வருகிறோம். கேலக்சி S21+ மற்றும் கேலக்சி S21+ குறிப்பிட்ட அம்சங்களில் இரண்டுமே முன்னிலையில் இருக்கிறது. நீங்கள் கேமரா அதிகமாக பயன்படுத்துவராக இருந்தால் யோசிக்காமல் Galaxy S22 Ultra ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்