Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Logitech Mechanical Keyword: லாஜிடெக்கின் லேட்டஸ்ட் கீபோர்டு, மவுஸ்! இவ்ளோ கம்மி விலையில கிடைக்கவே கிடைக்காது!

Priyanka Hochumin May 25, 2022 & 20:15 [IST]
Logitech Mechanical Keyword: லாஜிடெக்கின் லேட்டஸ்ட் கீபோர்டு, மவுஸ்! இவ்ளோ கம்மி விலையில கிடைக்கவே கிடைக்காது!Representative Image.

Logitech Mechanical Keyword: லாஜிடெக் இரண்டு புதிய மெக்கானிக்கல் கீபோர்டு மற்றும் எர்கோனோமிக் மவுஸ் (ergonomic mouse) ஆகியவற்றை மாஸ்டர் சீரிஸில் அறிமுகப்படுத்தியுள்ளது.

லாஜிடெக்கின் MX மெக்கானிக்கல் மற்றும் MX மெக்கானிக்கல் மினி லேட்டஸ்ட் ஜெனெரேஷன் லோ ப்ரொபைல் மெக்கானிக்கல் சுவிட்சுகளுடன் வருகின்றன. MX மெக்கானிக்கல் மினி கீபோர்டு, ஃபுல்-சைஸ் MX மெக்கானிக்கல் கீபோர்டின் சிறிய மாறுபாடாகும். மேலும் புதிய எர்கோனோமிக் மவுஸ் MX Master 3S, MX Master 3 மவுஸின் மேம்படுத்தப்பட்ட வெர்ஸனாகும். MX Master 3ஐ விட இந்த புதிய மவுஸ் 90 சதவீதம் அமைதியானது என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த இரண்டு கீபோர்டு மற்றும் மவுஸை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் லாஜிடெக்கின் இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

லாஜிடெக் MX மெக்கானிக்கல், MX மெக்கானிக்கல் மினி அம்சங்கள் | Logitech New Keyboard

லாஜிடெக்கின் இரண்டு புதிய வயர்லெஸ் கீபோர்டுகளும் ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களில் இணைக்க முடியும். மேலும் 10-மீட்டர் வயர்லெஸ் வரம்புடன் மூன்று டிவைஸ்களுக்கு இடையில் எளிதான ஸ்விட்ச் செய்யும் விருப்பத்தை வழங்குகின்றன. இந்த கீபோர்டுகள் புளூடூத் அல்லது லாஜிடெக்கின் தனியுரிம லாஜி போல்ட் USB ரிசீவரைப் பயன்படுத்தி இணைக்க முடியும். USB Type-C மூலம் ரீசார்ஜ் செய்யக் கூடிய அமைப்பைக் கொண்டுள்ளது. பல வண்ண பின்னொளியை (multi-colored backlighting) டிஸ்ஏபில் செய்தால் 10 மாதங்கள் வரை பேட்டரி ஆயுளை நீடிக்கலாம். மேலும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 15 நாட்கள் வரை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

லாஜிடெக் MX மெக்கானிக்கல் மற்றும் MX மெக்கானிக்கல் மினி ஆகியவை தொட்டுணரக்கூடிய கருத்துக்களுக்காக (tactile feedback) லேட்டஸ்ட் ஜெனெரேஷன் லோ-ப்ரொபைல் மெக்கானிக்கல் சுவிட்சுகளுடன் வந்துள்ளன. இந்த கீபோர்டுகளைப் பயன்படுத்தும் பொழுது கம்மியளவிலான சத்தம் கேட்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் கூடுதலாக இரண்டு ஸ்டைல் விருப்பங்கள் உள்ளன - லீனியர் மற்றும் கிளிக்கி. இவை இரண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் மட்டுமே கிடைக்கும். இதில் பேக்லைட் தானாகவே ஆம்பிஎண்ட் லைட்டின் பிரகாசத்திற்கேற்ப அட்ஜஸ்ட் செய்துகொள்ளும். எனர்ஜியை சேமிக்க பயன்படுத்தாத நிலையில் அந்த லைட்கள் ஆஃப் ஆகிவிடும்.

இந்த சம்மர் லீவ்ல கேம் விளையாடி டைம் பாஸ் பண்ணலாம்! அதுக்கு இந்த கேம்ஸ் ட்ரை பண்ணுங்க!

இந்த இரண்டு கீபோர்டுகளின் Logi Options சாப்ட்வேர் தனிப்பட்ட பட்டன், பேக்லைட்டிங் மற்றும் பலவற்றைத் தனிப்பயனாக்க (customise) பயனர்களை அனுமதிக்கிறது. இவை இரண்டும் Windows, macOS, iPadOS, Android, Chrome OS மற்றும் Linux ஆகியவற்றுடன் இணக்கமாக உள்ளன. MX மெக்கானிக்கல் ரூ. 13,200/-க்கும், MX மெக்கானிக்கல் மினி ரூ. 11,600/-க்கு (Logitech Mechanical Keyboard Price) விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் லாஜிடெக்கின் இணையதளத்தில் Tactical Quiet, Linear மற்றும் Clicky ஆகிய மூன்று வடிவங்களில் கிடைக்கின்றன.

Logitech MX Master 3S அம்சங்கள் | Logitech MX Master 3S

இந்த புதிய MX Master 3S மவுஸ் பழைய MX Master 3-ஐ விட அமைதியாக செயல்படும் என்று நிறுவனமா தெரிவிக்கிறது. இது MagSpeed எலெக்ட்ரோ மேக்னெட்டிக் வீலைக் கொண்டுள்ளது. இது ஒரு வினாடிக்கு 1,000 வரிகளை ஸ்கிரால் செய்யும். மேலும் horizontal navigation-க்கு சைடு ஸ்க்ரோலுடன் வருகிறது. இது 70 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்குகிறது. ஒரு நிமிடம் சார்ஜ் செய்தால் 3 மணி நேரம் வரை வேலை செய்ய முடியும் மற்றும் USB Type-C கேபிள் பயன்படுத்தி சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த மவுஸ் ரூ. 7,700/-க்கு விற்பனை செய்யபப்டுகிறது. Black, Graphite மற்றும் Pale Gray ஆகிய நிறங்களில் உங்களுக்கு கிடைக்கிறது.

4 மணி நேர ட்ராவல்...வெறும் 20 நிமிடத்தில்...ஹைப்பர்லூப் டெக்னாலஜி மூலம்! எப்படி சாத்தியம்?

Logitech Mechanical Keyword, logitech mechanical keyboard price , logitech new keyboard

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்