Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Gizfit Ultra Gaming Smartwatch: நீங்க வாட்ச் வாங்கணுமா அதுவும் gaming smartwatch-ன்னா இன்னும் சூப்பர்!

Priyanka Hochumin August 06, 2022 & 18:00 [IST]
Gizfit Ultra Gaming Smartwatch: நீங்க வாட்ச் வாங்கணுமா அதுவும் gaming smartwatch-ன்னா இன்னும் சூப்பர்!Representative Image.

Gizfit Ultra Gaming Smartwatch: இந்தியாவில் டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட கிஸ்மோர் என்னும் தொழில்நுட்ப நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்வாட்ச்சை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மிகவும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்வாட்ச் கம்மி விலையில் விற்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் Gizfit Ultra என்னும் ஸ்மார்ட்வாட்ச் தான் அது. இதை பார்க்கும் பொழுது அப்படியே ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்சை பார்ப்பது போன்று தான் தெரிகிறது.

சதுரங்க வடிவமைப்பைக் கொண்ட இந்த கிஸ்ஃபிட் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியை கொண்டுள்ளது. மேலும் நிறுவனம் செக்யூரிட்டி அம்சத்திற்கு அதிகம் கவனம் செலுத்தியதாக கூறப்பட்டுள்ளது. இப்படி பட்ட இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.69 இன்ச் எச்டி வளைந்த டச் ஸ்கிரீன் கொண்ட டிஸ்பிளேவை வழங்குகிறது. பொதுவாகவே ஸ்மார்ட்வாட்ச்சை நம் உடலை கவனிக்கவே பலரும் தற்போது வாங்கி வருகின்றனர். அந்த வகையில் இதில் 60 வித்தியாசமான ஸ்போர்ட்ஸ் மோட் இருக்கிறது. அதே போல் கேமிங் பக்கத்தில் பிரீயாக இன்ஸ்டால் செய்யப்பட்ட கேம்களும் இதில் கிடைக்கும்.

இது என்ன பிரமாதம் இதை விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு! என்பதற்கு ஏற்றவாறு அலெக்சா மற்றும் சிரி போன்ற வாய்ஸ் கமாண்ட்கள் ஆதரவுகளும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ளது. இதை தவிர ப்ளூடூத் காலிங், பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றம் மைக்ரோபோன் போன்ற பல ஆதரவுகளை இதில் இருக்கிறது. சுருக்க மாக சொல்ல போனால் போனில் செய்ய வேண்டிய அனைத்தும் இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலம் நம்மால் செய்ய முடியும். ஒரு முறை சார்ஜ் செய்வதால் சுமார் 15 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நம்முடைய இதய துடிப்பு, தூக்கம் ஆகியவற்றை கண்காணிக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இதில் SpO2, ஹார்ட் ரேட் மற்றும் ஸ்லீப் சென்சார் ஆதரவுகள் இருக்கிறது. இத்தனை அம்சங்களையும் கொண்டுள்ள கிஸ்ஃபிட் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் ரூ. 5,999/-க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ. 2,699/-க்கு தான் விற்பனையாகிறது. ஆனால் சலுகை காரணமாக தற்போது இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 1,799/- என்ற விலைக்கு நம்மால் வாங்க முடியும். எனவே நேரத்தை கடத்தாமல் உடனே இந்த ஸ்மார்ட்வாட்ச்சை வாங்கி பயன்பெறுங்கள்.

ஒரு முக்கிய குறிப்பு உங்களுக்கு இதில் இன்னும் சலுகை வேண்டும் என்றால் ஒரு சில வங்கி கார்டு பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக், பர்கண்டி மற்றும் வைட் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அந்த நிறங்களில் உங்களுக்கு பிடித்த நிறத்தில் வாங்கிக்கொள்ளுங்கள்.

Gizfit Ultra Gaming Smartwatch, Gizfit Ultra Gaming Smartwatch review, Gizfit Ultra Gaming Smartwatch price, Gizfit Ultra Gaming Smartwatch flipkart, Gizfit Ultra Gaming Smartwatch price in india, Gizfit Ultra Gaming Smartwatch app.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்