Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Oppo A77 4G Price in India: இன்று முதல் இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகும் அந்த மாடல் ஸ்மார்ட்போன்!

Priyanka Hochumin August 03, 2022 & 17:30 [IST]
Oppo A77 4G Price in India: இன்று முதல் இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகும் அந்த மாடல் ஸ்மார்ட்போன்!Representative Image.

Oppo A77 4G Price in India: இன்று முதல் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாகிறது ஒப்போ ஏ 77 4ஜி ஸ்மார்ட்போன். நமக்கு ஏற்கனவே தெரிந்தது போல் ஒப்போ வழங்கும் ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனானது MediaTek Helio G35 SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் இன்னும் என்னென்ன கூடுதல் அம்சங்களை கொண்டு வந்துள்ளது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பக்கா டிஸ்பிளே

நாம் நீண்ட நேரம் ஸ்மார்ட்போனை பிடித்து பயன்படுத்தும் வகையில் ஒப்போ ஏ 77 4ஜி ஸ்மார்ட்போன் 6.56 இன்ச் எல்சிடி எச்டி பிளஸ் டிஸ்பிளே பேனலைக் கொண்டுள்ளது. அத்துடன் 60Hz புதுப்பிப்பு விகிதம் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் உடன் வந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கம் முன்பே கூறியது போல் இந்த கைபேசியானது MediaTek Helio G35 SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதே போல் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, ஒருவேளை இந்த அளவை அதிகரிக்க விரும்பினால் அதற்கென்று மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியும் இடம்பெற்றுள்ளது.

இது போதுமே வளச்சு வளச்சி போட்டோ எடுக்க...

ஒரு புது போன் வாங்குகையில் நாம் ஸ்டோரேஜிக்கு பிறகு பார்ப்பது கேமரா அமைப்பை தான். இந்த போனில் டூயல் ரியர் கேமரா செட் அப் உள்ளது. அதில் 50 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் உடன் ஒரு LED பிளாஷ்-ம் இடம்பெற்றுள்ளது. அதே போல் செல்பி, வீடியோ கால் பயன்பாட்டை பெற முன்புறத்தில் 8 மெகாபிக்சல் Front shooter பொருத்தப்பட்டுள்ளது. ஒப்போ ஏ 77 ஆனது ColorOS 12.1 இல் இயங்குகிறது, இது ஆண்ட்ராய்டு 12 அவுட்-ஆஃப்-பாக்ஸை அடிப்படையாகக் கொண்டது. இது அல்ட்ரா-லீனியர் ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனருடன் வருகிறது.

இவ்ளோ கம்மி விலை தானா?

இந்த அளவு வசதிகளைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ. 15,499/-க்கு இந்தியாவில் விற்பனையாகிறது. நீங்கள் இந்த போனை வாங்க விரும்பினால் நிறுவனத்தின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் இருந்து வாங்கலாம். பிறகு ஒரு முக்கிய குறிப்பு - இந்த ஸ்மார்ட்போன் ஸ்கை ப்ளூ மற்றும் சன்செட் ஆரஞ்சு ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் மட்டுமே கிடைக்கும்.

Oppo A77 4G Price in India, Oppo A77 4G price in Pakistan, Oppo A77 4G, Oppo A77 4G specifications in tamil, Oppo A77 4G specifications in india, Oppo A77 spec Malaysia, oppo mobile under 5000 4g, Oppo A77 review, Oppo A77 mobile.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்