Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Realme 9i 5G Specifications in Tamil: ப்பா! திருப்புங்க கண்ணு கூசுது...பளபளப்பான பேக் பேனல்...கொண்டு சூப்பர் அறிமுகம் Realme!

Priyanka Hochumin August 19, 2022 & 10:15 [IST]
Realme 9i 5G Specifications in Tamil: ப்பா! திருப்புங்க கண்ணு கூசுது...பளபளப்பான பேக் பேனல்...கொண்டு சூப்பர் அறிமுகம் Realme!  Representative Image.

Realme 9i 5G Specifications in Tamil: நேற்று சும்மா பளபளப்பான பேக் பேனலைக் கொண்டு அறிமுகமான ரியல்மி 9 ஐ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். நிறுவனத்தால் செல்லமாக "ராக் ஸ்டார்" என்று அழைக்கப்படும் இந்த மாடல் கஸ்டமர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

எப்படி டிஸ்பிளே?

நமக்கு ஏத்த பட்ஜெட் போனாக இருக்கிறது இந்த Realme 9i ஸ்மார்ட்போன். இருப்பினும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடன் கூடிய 6.6 இன்ச் Full HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும் அதிவேக பயன்பாட்டிற்காக ஆக்டா கோர் மீடியா டேக் டைமென்சிட்டி 810 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. Realme 9i 5ஜி ஸ்மார்போன் டூயல் நானோ சிம் ஆதரவைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 OS-ஐ அடிப்படையாகக் கொண்டு மற்றும் நிறுவனத்தின் Realme UI 3.0 கொண்டு இயங்குகிறது. மேலும் இதனின் டிஸ்பிளே ஆனது 400 nits ப்ரைட்னஸ்-ஐ வழங்குகிறது.

அது என்ன Dynamic RAM Expansion டெக்னாலஜி?

இதில் இருக்கும் அல்ட்ரா சூப்பர் அம்சம் என்ன என்றால்? ஆப் ரெஸ்பான்சிவ்னெஸ்-ஐ (App Responsiveness) மேம்படுத்துவதற்காக இந்த ஸ்மார்ட்போனில் விர்ச்சுவல் ரேம்-ஐ (Virtual RAM) வழங்கும் டைனமிக் ரேம் எக்ஸ்பான்ஷன் டெக்னாலஜி (Dynamic RAM Expansion technology) சேர்க்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. உங்களுக்கு புரியும் படி கூறவேண்டும் என்றால், இன்டெர்னல் ஸ்டோரேஜில் இருந்து 5GB வரை நம்மால் கடனாக வாங்க முடியும். எனவே அதை ஒட்டு மொத்தமாக சேர்த்து சுமார் 11GB வரை RAM இன் அளவை அதிகரிக்க முடியும்.

அசத்தலான கேமரா!

கிளாரிட்டியான போட்டோக்களை எடுக்க பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டு வருகிறது. அதனுள் 50 மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் ஒரு போர்ட்ரெய்ட் ஷூட்டர் மற்றும் மேக்ரோ கேமராவும் உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால் பயன்பாட்டிற்கு 8 மெகாபிக்சல் (f/2.0) கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 128GB இன்டெர்னல் மெமரி கொண்டுள்ள Realme 9i ஸ்மார்ட்போன் மைக்ரோ SD கார்டு பயன்படுத்தி 1TB வரை ஸ்டோரேஜை விரிவாக்க முடியும்.

நீண்ட நாள் தாங்கும் பேட்டரி...

இது 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் செக்யூரிட்டி மேம்பாட்டிற்காக பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. நிறுவனம் அளித்த தகவல் படி, இந்த ஸ்மார்ட்போன் 187 கிராம் எடை கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இணைப்பு விருப்பங்களும் - 5G, 4G LTE, வைஃபை, ப்ளூடூத் v5.2, GPS/AGPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும்.

இவ்ளோ கம்மியா?

இதனின் பேஸிக் மாடல் 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் ரூ. 14,999/-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஸ்டாண்டர்டு மாடல் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ரூ. 16, 999/-க்கு வாங்கலாம். இது வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் மற்றும் Realme.com மூலம் நம்மால் வாங்க முடியும். இதனின் அறிமுக சலுகையாக ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு  ரூ.1000 என்கிற உடனடி தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Realme 9i 5G Specifications in Tamil, realme 9i 5g, realme 9i review, realme 9i 5g price, realme 9i 5g price in india, realme 9i 6gb 128gb, realme 9i specification, realme 9i 5g specifications, realme 9i 5g launch date in india, realme 9i flipkart, realme 9i features, realme 9i flip cover, realme 9i front camera.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்