Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Google Maps Blurred House: மர்மான வீடு...Google Map காட்ட மறுக்கும் காரணம்! வைரலாகும் புகைப்படம்

Priyanka Hochumin May 16, 2022 & 17:00 [IST]
Google Maps Blurred House: மர்மான வீடு...Google Map காட்ட மறுக்கும் காரணம்! வைரலாகும் புகைப்படம்Representative Image.

Google Maps Blurred House: நாம் அனைவரும் தெரிந்த ஒன்று கூகுள் மேப்ஸ் ஒரு வழிகாட்டி செயலி. இருப்பினும் இந்த ஒரு வீட்டை மட்டும் ஏன் மங்கலாக காட்டுகிறது? தொடர்ந்து படியுங்கள். 

மக்களின் வேலையை குறைக்க கூகுள் நிறுவனம் நிறைய செயலிகள் கண்டுபிடித்துள்ளது. இது மக்களுக்கு பெரும் உதவியை புரிவதால் உலகெங்கிலும் நிறைய பேர் அதை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் கூகுள் மேப் செயலி ஒரு முக்கியான பங்கு வகிக்கிறது. நாம் ஒரு புது ஊர் அல்லது நாட்டிற்கு சென்றால் அட்ரஸ் கண்டுபிடிப்பது பெரும் சிரமமாக இருக்கும். இப்பொழுது இருக்கும் கால கட்டங்களில் முன் பின் தெரியாதவர்களை நம்பி அவர்களிடம் விவரங்களை கேட்பது என்பது சத்தியம் இல்லை. அப்படி ஒரு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்த கூகுள் மேப் செயலி. 

நீங்கள் எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தின் விவரத்தை மட்டும் கொடுத்தால் போதும், உங்களுக்கு மிகவும் ஈஸியான வழியை கூகுள் மேப் உங்களுக்கு காண்பிக்கும். மேலும் வழியில் இருக்கும் அங்க அடையாளங்கள், எவ்ளோ நேரத்தில் சென்றடைவோம், இன்னும் எவ்ளோ தூரம் உள்ளது போன்ற அனைத்து விவரங்களையும் உங்களுக்கு அளிக்கும்.  இந்த செயலி முக்கியமாக புது இடங்களுக்கு செல்பவர்கள் மற்றும் ஓட்டுனர்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். 

உங்க ஸ்மார்ட்போன்ல இந்த ஆப் இருக்கா...உடனே தூக்கிடுங்க!

ஏன் இந்த வீடு மட்டும்? | Blurred House in Google Maps 

இப்படி உலகினில் உள்ள அனைத்து இடங்களையும் காட்டும் கூகுள் மேப், ஒரு வீட்டை மட்டும் மங்கலாக காட்டும் (Google Maps Blurred House) புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடு அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் உள்ள புறநகர் பகுதியில் அமைத்துள்ளது. அந்த வீட்டுக்கு சொந்தக்காரர் எரியல் காஸ்ட்ரோ என்னும் ஒரு கிரிமினல். 1992 ஆம் ஆண்டு முதல் அந்த வீட்டில் குடியிருக்கும் இவர், 2002 - 2004 ஆம் ஆண்டுகளில் 3 பெண்களை கடத்தி அந்த வீட்டில் அடைத்து வைத்துள்ளார். 

பின்பு கைது செய்யப்பட்ட இவருக்கு, நீதிமன்றம் 1000 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் தண்டனை காலத்தின் போது இவர் பரோலில் வெளியாக முடியாது என்றும் நீதிபதிகள் கடுமையான தண்டனையை வழங்கினார்கள். அதன் பின்பு நகர நிர்வாகம் அவரின் வீட்டை இடித்து தரைமட்டமாகியது. என்ன தான் அந்த வீடு இடிக்கப்பட்டாலும், இன்னும் அந்த வீட்டை கூகுள் மேப் காமிக்காமல் இருக்கிறது. இதன் மூலம் தெரியவருவது, குற்றப் பின்னணி இருக்கும் இடங்களை பாதுகாப்பு காரணம் கருதி அதை தெரியப்படுத்த மறுக்கிறது கூகுள் மேப் (Blurred House in Google Maps). மக்களின் பாதுகாப்பிற்கு எந்த சேவையை செய்யும் கூகுள் நிறுவனத்திற்கு பாராட்டுகள். 

நீண்ட நாள்களாக எதிர்பார்த்த கேம்…. எப்ப வெளியாகுது தெரியுமா..?

கூகுள் மேப் அப்டேட் | Google Maps Advanced Features 

சமீபத்தில் கூகுள் மேப் ஒரு சில புதிய அப்டேட்களை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியது. அதாவது சுங்கக் கட்டணத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் வசதி, கட்டணமில்லா பாதை,சிக்னல்களில் இருக்கும் விளக்குகள் போன்றவை அதனுள் அடங்கும் என்பர் குறிப்பிட்டுள்ளது. இது மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்