Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Remove Password from PDF: பாஸ்வோர்ட் போட்டு அழுத்து போச்சா...அப்ப இப்படி ட்ரை பண்ணுங்க! உங்க ஃபைல் பத்திரமா இருக்கும்!

Priyanka Hochumin May 27, 2022 & 17:00 [IST]
How to Remove Password from PDF: பாஸ்வோர்ட் போட்டு அழுத்து போச்சா...அப்ப இப்படி ட்ரை பண்ணுங்க! உங்க ஃபைல் பத்திரமா இருக்கும்!Representative Image.

How to Remove Password from PDF: நீங்கள் PDF டாக்குமெண்ட் அதிகமாக பயன்படுத்துபவரா? அதுல முக்கியமான டாக்குமெண்ட் திறக்க அடிக்கடி பாஸ்வோர்ட் போன்றது கடுப்பா இருக்கா? கவலைய விடுங்க அந்த பிரச்சனையில் தீர்க்க ஈஸியான வழி இருக்கே.

தற்போது எல்லாமே டிஜிட்டலாகி விட்டதால் மக்கள் முக்கிய ஆவணங்களை PDF டாக்குமெண்டாக தங்களின் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போனில் வைத்து கொள்கின்றனர். மேலும் தொழிநுட்ப நிறுவனங்கள் தங்களின் திட்டங்கள் அல்லது பண பரிமாற்றம் போன்ற ஆவணங்களை ஆன்லைனில் பரிமாறுவது மிகவும் ஆபத்தான ஒன்று. ஏனெனில் நூதன முறையில் உங்களின் ஆவணங்கள் திருடு போவதற்கு அதிக வைப்புகளைக் உள்ளது.

இந்த பிரச்சனைகளில் இருந்து காத்துக்கொள்ள மக்கள் PDF டாக்குமெண்டாக சேமித்து வைக்கின்றனர். ஏனென்றால் உங்களின் முக்கிய ஆவணங்களில் நீங்க பாஸ்வோர்ட் வைத்துக்கொள்ளலாம். மேலும் பிறருக்கு அதை அனுப்பும் பொழுது, அவர்கள் பாஸ்வோர்ட் கொடுத்தால் தான் அந்த டாக்குமெண்ட் திறக்கும். எனவே ஆவணங்கள் திருடு போகாமல் பத்திரமாக அனுப்ப இது நமக்கு உதவுகிறது. இருப்பினும் ஒவ்வொரு முறையும் நீங்கள் அந்த ஆவணங்களை திறக்கும் பொழுதும் பாஸ்வோர்ட் கொடுப்பது மிகவும் எரிச்சலான செயல். நீங்கள் அந்த பாஸ்வோர்டை எடுக்க அதற்கு தனியாக ஒரு செயலியை டவுன்லோட் செய்து அதற்கு மாதம் சந்தா செலுத்தி, இவ்ளோ செய்கிறதுக்கு இந்த ஈஸியான வழியை ட்ரை பண்ணி பாருங்க.

சந்தா செலுத்தி

Adobe Acrobat DC ஐப் பயன்படுத்தி PDF பாஸ்வோர்ட் எப்படி நீக்குவது? | Remove Password from PDF Adobe

Adobe Acrobat DC ஐப் பயன்படுத்தி PDF பாஸ்வோர்ட் நீக்கினால் நீங்கள் இதற்கு சந்தா செலுத்த வேண்டும். இது மாதம் அல்லது வருடம் என்ற கணக்கில் கட்டணம் செலுத்தினால் நீங்கள் இதை தாராளமாக பயன்படுத்தலாம்.

நீங்கள் சந்தா அல்லது ஒரு மாதம் ட்ரயல் பயன்படுத்த ரெஜிஸ்டர் செய்த உடன், Acrobat DC செயலியை ஓபன் செய்யவும்.

பின்பு tools menu-வுக்குச் செல்லவும், protect என்பதை கிளிக் செய்யவும், பிறகு encrypt செய்து remove security என்பதை கிளிக் செய்யவும்.

ஒரு வேலை அந்த PDF டாக்குமெண்ட் ஓபன் செய்ய பாஸ்வோர்ட் இருந்தால், முதலில் அதை உள்ளிடவும். பின்பு அதற்கு permissions password இருந்தால் அதை உள்ளிட்டு, OK என்பதை இரண்டு முறை அழுத்தினால் அந்த PDF இன் பாஸ்வோர்ட் அகன்றுவிடும்.

சந்தா இல்லாமல்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்தி PDF பாஸ்வோர்ட் அகற்ற என்ன செய்ய வேண்டும்? | Remove Password from PDF without Password

உங்களது ஸ்மார்ட்போனில் இன்-பில்டாக இருக்கும் PDF viewer-ஐ பயன்படுத்தி PDF டாக்குமெண்டை ஓபன் செய்யவும். மேலும் அந்த ஃபைலை ஓபன் செய்ய பாஸ்வோர்ட் கொடுக்க வேண்டும்.

இப்பொழுது மெனு ஐகானை தட்டவும், பிறகு ஷேர் அதற்கு பிறகு print ஐகானை கண்டுபிடிக்கவும். இப்பொழுது அந்த டாக்குமெண்டை பாஸ்வோர்ட் இல்லாமல் சேமிக்க "print to PDF" என்று இலக்கைக் குறிப்பிடலாம்.

பின்பு உங்களின் ஸ்மார்ட்போனில் இன்டெர்னல் ஸ்டோரேஜ்-க்கு டாக்குமெண்டை அப்லோட் செய்ய சேமி என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது இந்த ஃபைலை பாஸ்வோர்ட் இல்லாமல் மற்றவர்களுக்கு அனுப்பலாம்.

கூகுள் குரோம் பயன்படுத்தி PDF இலிருந்து பாஸ்வோர்டை அகற்றுவது எப்படி? | Remove Password from PDF Online

உங்களிடம் இருக்கும் default PDF செயலியை பயன்படுத்தாமல், கூகுள் குரோம் பயன்படுத்தி அந்த டாக்குமென்டை ஓபன் செய்யவும். பிறகு பாஸ்வோர்டை உள்ளிடவும்.

இப்பொழுது PDF ஓபன் ஆன பிறகு, பாஸ்வோர்டை அகற்ற விண்டோஸ் இல் Ctrl + P-ஐ அழுத்தவும்.

அல்லது உங்களின் default பிரிண்டரை தேர்ந்தெடுக்காமல், "save as PDF" அல்லது "print as PDF" என்ற ஆப்ஷனில் சேமிக்கவும். 

how to remove password from pdf bank statement in mobile, how to remove password from pdf bank statement on iphone, remove password from pdf online, remove password from pdf adobe, remove password from pdf without password, remove password from pdf aadhar online, remove password from pdf bank statement

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்