Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Honor Magic Book 14 Review: உலகின் முதல் AMD Ryzen™ 4000 பிராஸசர்...மறைக்கப்பட்ட வெப் கேமரான்னு...சொல்லிட்டே போலாம்! அது தான் Honor MagicBook 14!

Priyanka Hochumin July 25, 2022 & 13:00 [IST]
Honor Magic Book 14 Review: உலகின் முதல் AMD Ryzen™ 4000 பிராஸசர்...மறைக்கப்பட்ட வெப் கேமரான்னு...சொல்லிட்டே போலாம்! அது தான் Honor MagicBook 14!Representative Image.

Honor Magic Book 14 Review: ஹானர் நிறுவனத்தின் பிரத்தியேக அல்ட்ரா லைட் வெயிட் டிசைன் கொண்ட ஹானர் மாஜிக் புக் 14 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் பயன்படுத்தி எந்த ஒரு வேலையையும் பாஸ்ட் மற்றும் ஸ்மூத்தாக முடிக்க முடியும். அப்படி பட்ட அதிநவீன லேப்டாப்பைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

இப்படி ஒரு ஸ்லிம்மான டிஸ்பிளேவை பார்த்திருக்கிறீர்களா?

இது எந்த அளவுக்கு மெலிதாக இருக்கிறது என்றால், இதனின் இடை வெறும் 1.38 Kg மட்டுமே ஆகும். ஹானர் மேஜிக்புக் 14 இன் 4.8மிமீ அல்ட்ரா-நெரோ பெசலின் அளவு எல்சிடி பேனலில் இருந்து ஒளியின் பிரதிபலிப்பைக் குறைக்க முழு லேமினேட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும் சூரிய ஒளியின் கீழ் இந்த லேப்டாப் பயன்படுத்தும் பொழுது மிகவும் அழகான, தத்ரூபமான மற்றும் உண்மையான வாழ்க்கைப் படங்களை உருவாக்குவதாக கூறப்படுகிறது. மேலும் 512GB வரையிலான ஸ்டோரேஜ் அமைப்பைக் கொண்டுள்ளது.

அதிவேக செயல்பாட்டிற்காக புத்தம் புது பிராஸசர்!

லேப்டாப்பில் நம்முடைய அன்றாட பணிகளை செய்ய ஹானர் மாஜிக் புக் 14, புதிய AMD RyzenTM 5 4500U மொபைல் செயலி அல்லது AMD RyzenTM 5 3500U மொபைல் பிராஸசர்களை பயன்படுத்துகிறது. இந்த RyzenTM 5 4500U மொபைல் செயலி 33.7% வேகமான மல்டி-கோர் செயல்திறனை வழங்குகிறது. அப்படியென்றால், இந்த லோட் டைமிங் எல்லாம் இதுல இருக்கவே இருக்காது. மேலும் ஹானர் மாஜிக் புக் 14 அல்ட்ரா ஃபாஸ்ட்  PCIe NVMe SSD ஸ்டோரேஜ் டிரைவ் உடன் வருகிறது. இது ஸ்டாண்டர்ட் SATA SSD டிரைவ்-ஐ விட ஐந்து மடங்கு வேகமான வாசிப்பு வேகத்தை தருகிறது.

அரை மணி நேர சார்ஜ் ஒரு நாளைக்கு தங்குமாம்...

இது எப்படி சாத்தியம் என்றால், இந்த லேப்டாப் மிகப்பெரிய 56 WH ஹை எனர்ஜி டென்சிட்டி பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட 10.6 மணி நேரம் வரை நிறக்காமல் தனித்த உற்பத்தித்திறனை அளிக்கிறது. மேலும் இதில் ஒற்றை USB-C போர்ட் இருக்கிறது. இதனை பயன்படுத்தி லேப்டாப்பிற்கு சார்ஜ் ஏற்றலாம் அல்லது மற்ற டிவைஸ்களுக்கு சார்ஜ் செய்யலாம். HONOR MagicBook 14 ஆனது 65W ஃபாஸ்ட் சார்ஜருடன் பெட்டிக்கு வெளியே வருவதால், அரை மணி நேரத்தில் 46% வரை சார்ஜ் பெறலாம்.

மறைக்கப்பட்டுள்ள வெப் கேமரா

ஒவ்வொரு முறியும் பாஸ்வோர்ட் போட்டு லேப்டாப் ஓபன் பண்ண கடுப்பா இருக்கா? அதற்காகவே பவர் பட்டன் மீது வைக்கப்பட்டுள்ளது பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர். எனவே, ஒரே டச் இல் ஈஸியா லேப்டாப்பை ஓபன் செய்து வேலையை பார்க்கலாம். மேலும் இதில் வெப் கேமரா கீபோர்டில் மறைக்கப்பட்டுள்ளது. எப்பொழுது நமக்குத் தேவைப்படுகிறதோ அப்பொழுது பாப்-அப் ஆகி செயல்படும். பிறகு மீண்டும் உள்ளே சென்று விடும்.

லேப்டாப் இனி தீ பிடிக்காது 

நீண்ட நேர பயன்பாட்டினால் லேப்டாப் சூடாகும் என்ற கஸ்டமர்களின் நிபந்தனைக்கு ஏற்ப ஒரு புதுமையான மற்றும் திறமையான ஃபேன் பிளேட் வடிவமைப்பை ஹானர் மேஜிக்புக் 14 கொண்டுள்ளது. மேலும் பயனுள்ள காற்றோட்டத்திற்கு பிளேடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது ஹானர் நிறுவனம். எனவே, இந்த தனித்துவமான ஃபேன் பிளேட் வடிவமைப்பு சத்தத்தை குறைக்கிறது மற்றும் 38% வரை வெப்பச் சிதறலை (heat dissipation) அதிகரிக்கிறது.  

   

Honor Magic Book 14 Review, Honor Magic Book 14 amazon, Honor Magic Book 14 specs, Honor Magic Book 14 price in india, Honor Magic Book 14 2022, Honor Magic Book 14 laptop, Honor Magic Book 14 ryzen 5, Honor Magic Book 14 price.  \

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்