Tue ,Apr 23, 2024

சென்செக்ஸ் 73,648.62
560.29sensex(0.77%)
நிஃப்டி22,336.40
189.40sensex(0.86%)
USD
81.57
Exclusive

Realme அறிமுகப்படுத்த போகும் 5 லேட்டஸ்ட் கேஜெட்ஸ்! அதுவும் ஒரே நாளில்! என்னைக்கு தெரியுமா?

Priyanka Hochumin July 25, 2022 & 11:45 [IST]
Realme அறிமுகப்படுத்த போகும் 5 லேட்டஸ்ட் கேஜெட்ஸ்! அதுவும் ஒரே நாளில்!  என்னைக்கு தெரியுமா?Representative Image.

ரெட்மிக்கு அடுத்து நம்ப பட்ஜெட்டிற்கு ஏற்ற பிராண்டாக ரியல்மி திகழ்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படி பட்ட ரியல்மி நிறுவனத்தின் உலகளாவிய Realme AIoT Launch Event, ஜூலை 26 அதாவது நாளை நடைபெறுகிறது. இதில் ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட் கேஜெட்ஸ் ரிலீஸ் ஆகவுள்ளது. அதை பற்றிய முழு விவரத்தை தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்கப்போகிறோம்.

சரியா இத்தனை மணிக்கு லைவ் ஸ்ட்ரீம்ல பார்க்கலாம்!

நாளை ரியல்மி AIoT லான்ச் ஈவென்ட் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு நடைபெறுகிறது. எப்பையும் போல இந்த நிகழ்வை பார்க்க வேண்டும் என்றால், நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம் மற்றும் யூடியூப்பில் லைவ் ஸ்ட்ரீமில் பார்க்க முடியும். அந்த நிகழ்ச்சியில் ரியல்மியின் என்னென்ன தயாரிப்புகள் அறிமுகமாகும் என்று நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதனுள் நெக்பேண்ட், இயர் பட்ஸ், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் டேப்லெட் என்று இவை அனைத்தும் அடங்கும். அதனின் ஒரு சின்ன சாம்பிள் பற்றி பார்ப்போம்.

தெறிக்கவிடும் ரியல்மி ஸ்மார்ட் வாட்ச்

பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இந்த Realme Watch 3 ஆனது, இன்பில்ட் மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கர் காம்போ உடனான ப்ளூடூத் காலிங் அம்சத்தை கொண்டுள்ளது. 3rd ஜெனெரேஷன் ஸ்மார்ட் வாட்ச் என்று அழைக்கப்படும் இது சதுர வடிவிலான டயல் வடிவமைப்பை கர்வ்டு கிளாஸ் கவர் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது 1.8 இன்ச் டிஸ்பிளே அளவை கொண்டுள்ளது மற்றும் பிளாக், ஒயிட் என்கிற இரண்டு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். இது சுமார் ரூ. 4,499/-க்கு விற்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதிக பேட்டரி லைஃப் கொண்ட நெக்பேண்ட்

Realme Buds Wireless 2 இன் அப்கிரேடட் வெர்சனான Realme Buds Wireless 2S தான் அந்த நெக்பேண்ட். கிடைத்த தகவல் படி, 11.2mm ட்ரைவர்ஸ், ENC (Environmental Noise Cancellation), டூயல் கனெக்ஷன், 88ms லோ லேட்டன்சி மோட் மற்றும் 24-மணிநேர பேட்டரி லைஃப் போன்றவை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நெக்பேண்ட் பிளாக் மற்றும் ப்ளூ என்னும் இரண்டு கலர் ஆப்ஷனில் வரும். இது ரூ. 2,499/-க்கு விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி நியோ இயர்பட்ஸ்

கடந்த வாரம் சீனாவில் அறிமுகமானது இப்பொழுது இந்தியாவிற்கு வருகிறது, அது தான் Realme Buds Air 3 Neo. இது 10mm ட்ரைவர்ஸ், ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபிஎக்ஸ்5 மதிப்பீடு, ஈஎன்சி (Environmental Noise Cancellation), 88ms லோ லேடன்சி மோட், டால்பி அட்மோஸ் மற்றும் 30 மணிநேர பேட்டரி லைஃப் போன்ற அதிநவீன அம்சங்களை கொண்டு வந்துள்ளது. Realme Buds Air 2 Neo போல் இல்லாமல் இதில் ஒரு ஸ்டெம் உடன் வருகிறது, இருப்பினும் எதிர்பாராத விதமாக Realme Buds Air 3 Neo இல் ANC (ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்) இல்லை என்பது குறிப்பிட தக்கது. இந்த லேட்டஸ்ட் இயர்பட் ரூ. 2,399/-க்கு விற்பனைக்கு வரலாம்.

ரியல்மியின் முதல் ஃபஸ்ட் மானிட்டர்

நிறுவனத்தின் முதல் மானிட்டரான Realme Flat Monitor Full HD நாளை அறிமுகமாகிறது. இது மிகவும் ஸ்லிம்மான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த மானிட்டரின் மூன்று பக்கங்களிலும் குறைந்தபட்ச பெசல்களே இருக்கும். இதனின் தடிமன் எவ்ளோ என்று தெரிந்தால் நீங்க அதிர்ச்சியாவீர்கள், வெறும் 6.9 மிமீ மட்டும் தான். இந்த ரியல்மி மானிட்டரின் பேனல் 75Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 8ms ரெஸ்பான்ஸ் டைம் வரையிலான ஆதரவைப் பெறுகிறது.

இவ்ளோ இருந்த அப்ப கண்டிப்பா காஸ்டிலியா தான் இருக்கும்!

ரியல்மியின் லேட்டஸ்ட் டேப்லெட்டான Realme Pad X, இரண்டு மாதங்களுக்கு முன்னர் சீனாவில் அறிமுகமானது. இப்பொழுது இந்தியாவில் 5G செல்லுலார் வேரியண்ட் உடன் இந்த டேப்லெட் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. இந்த டேப்லெட் 11-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 8,340mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் சப்போர்ட், குவாட் ஸ்பீக்கர்ஸ், ஸ்டைலஸ் சப்போர்ட், மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட், 13MP ரியர் கேமரா மற்றும் 8MP செல்பீ கேமரா ஆகிய அம்சங்களுடன் வரலாம். இதனின் விலை தோராயமாக ரூ. 20,000/-க்கு குறைவாக தான் இருக்கும் என்பர் கூறப்படுகிறது.

Realme Watch 3 price in india, realme watch 3 launch date in india, realme watch 3 leaks, relame watch 3 specifications, Realme Buds Wireless 2S price, Realme Buds Wireless 2S launch date in india, realme buds air 3 neo challenge, realme buds air 3 neo tagline, realme buds air 3 neo price in india, realme buds air 3 neo launch date in india, realme buds air 3 neo tws, realme buds air 3 neo review, Realme Flat Monitor Full HD, Realme Pad X 5g, Realme Pad X 5g price in india, Realme Pad X launch date in india, Realme Pad X review, Realme Pad X tablet.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்