Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Apply Employment Registration in Tamil: இங்க அப்ளை பண்ணுங்க...உடனே வேலைய வாங்குங்க!

Priyanka Hochumin July 13, 2022 & 10:45 [IST]
How to Apply Employment Registration in Tamil: இங்க அப்ளை பண்ணுங்க...உடனே வேலைய வாங்குங்க!  Representative Image.

How to Apply Employment Registration in Tamil: நூற்றுக்கு தொண்ணூரு சதவீதம் பேர் படித்து முடித்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு வழிகாட்டும் விதமாக இந்த பதிவு இருக்கும் என்று நம்புகிறோம்.

நீங்கள் 10, 12வது, டிகிரி மற்றும் PG படிப்பு முடித்தவர்களாக இருந்தால், இப்பொழுது வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் உடனே இதை தெரிந்துகொள்ளுங்கள். ஏனெனில் அரசாங்கத்தில் இருக்கும் நிரைய காலி இடங்கள் பற்றி நமக்கு தெரியாது. எனவே, வேலைவாய்ப்புக்காக இங்கே பதிவு செய்து வாழ்க்கையில் முன்னேறுங்கள். இதை ஆன்லைனில் எப்படி செய்ய வேண்டும் என்பதை படிப்படியாக பார்க்கலாம்.

ஸ்டெப் 1

முதலில் அரசாங்கத்தின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.in/ என்னும் முகவரிக்கு செல்லவும். அதில் Click here to visit Employment Exchange Website என்பதை கிளிக் செய்த உடன் புது விண்டோ ஒன்று ஓபன் ஆகும். அதில் For New User ID Registration என்னும் ஆப்ஷனை செலக்ட் செய்யவும். அடுத்தது Terms and Conditions என்ற பக்கத்தில் நிறைய நிபந்தனைகள் மற்றும் குறிப்புக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதை முழுமையாக படித்துவிட்டு, இறுதியில் Agree என்பதை கிளிக் செய்யவும்.

Also ReadHow to Apply Income Certificate Online in Tamil: இப்படியும் வருமான சான்றிதழ் அப்ளை செய்து வாங்கலாமா? இது தெரியாம போச்சே!

ஸ்டெப் 2

இப்பொழுது ஓபன் ஆகும் பக்கத்தில் பதிவாளரின் பர்சனல் விவரங்களை உள்ளிடவும். அதில் பதிவாளரின் பெயர், ஈமெயில் ஐடி, User ID என்ற இடத்தில ஒரு புது ID-ஐ கொடுக்கவும், பிறகு தந்தை பெயர், பிறந்த தேதி, ரேஷன் கார்டு நம்பர் ஆகியவற்றை சரியாக கொடுக்கவும். அடுத்ததாக Image Code என்பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள Code-ஐ டைப் செய்து சேவ் செய்துகொள்ளுங்கள்.

இப்பொழுது உங்களுக்கென்று ஒரு ID உருவாகிவிட்டது. இதற்கு பின்பு Do you want to continue? என்பதில் ஆம் என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 3

இதனை தொடர்ந்து மற்றொரு பக்கம் தோன்றும். அதில் பதிவாளரின் பாலினம், திருமணம் ஆகிவிட்டதா? இல்லையா?, பிறகு தாயாரின் பெயர், இனம், சாதி, சாதிச் சான்றிதழில் கொடுக்கப்பட்டுள்ள எண் போன்ற விவரங்களை தெளிவாக மற்றும் கவனமாக கொடுக்க வேண்டும். இறுதியாக ஒரு முறை கொடுத்த விவரங்களை சரிபார்த்துவிட்டு Next என்பதை தட்டவும்.

Also Read | How to get Varisu Certificate Online in Tamil: வாரிசு சான்றிதழ் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி? முழுவிவரங்கள் இங்கே!

ஸ்டெப் 4

அடுத்து ஷ்கிரீனில் தோன்றும் பக்கத்தில், உங்களின் வீடு முகவரியை கொடுக்க வேண்டும். பிறகு நீங்கள் இருக்கும் மாவட்டத்தை உள்ளிடவும். இது முடிந்த பிறகு தான் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும், ஏனெனில் Name of the Employment Office என்பதை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் UG முடித்தவராக இருந்தால் District Employment Office என்று தேர்வு செய்ய வேண்டும். இதுவே நீங்கள் PG முடித்தவராக இருந்தால் Professional and Executive Employment Branch Office என்பதை செலக்ட் செய்யவும். இதக்ரு பிறகு தாலுக்கா போன்ற விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும், அதனை தெளிவாக பார்த்து தேர்வு செய்யவும்.

ஸ்டெப் 5

அடுத்து உங்களின் Qualification Details என்ற பகுதியில் பதிவாளரின் கல்வி தகுதியைப் பற்றி கேட்கப்பட்டுள்ள விவரங்களை உள்ளிடவும். பின்பு Add என்பதை கிளிக் செய்யவும். அதற்கு பின்பு கூடுதல் டிகிரி ஏதேனும் இருந்தால் அதனை உள்ளிட்டு சேவ் என்பதை அழுத்தவும். இப்பொழுது இறுதியாக Continue என்பதை கிளிக் செய்த பிறகு பிரிண்ட் அவுட் என்ற ஆப்ஷன் தோன்றும். அதனை அழுத்தி உங்களின் வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்ததை பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளலாம்.  

How to Apply Employment Registration in Tamil, how to apply employment registration online in tamil, how to register in employment office online tamilnadu, employment registration online for 10th and 12th tamil nadu, how to apply employment registration online in tamilnadu, how to apply employment registration for engineering,  

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்