Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Cool a Room without AC in Summer: இத்தனை வருசமா இது தெரியாம போச்சே...இனி AC-க்கு அதிகமா கரண்ட் பில் கட்ட தேவையில்ல!

Priyanka Hochumin July 26, 2022 & 10:30 [IST]
How to Cool a Room without AC in Summer: இத்தனை வருசமா இது தெரியாம போச்சே...இனி AC-க்கு அதிகமா கரண்ட் பில் கட்ட தேவையில்ல! Representative Image.

How to Cool a Room without AC in Summer: சம்மர் ஆரபித்து மழைக் காலம் வரும் வரை வீட்டில் வெப்பம் தாங்க முடியாது. இதற்கு முக்கிய காரணமும் நாம் தான். ஏனெனில் இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அளிப்பதனின் விளைவு தான் இந்த பருவ மாற்றம். அதனால் வெயில் காலத்தில் நம்மால் தாங்க முடியாத அளவிற்கு வெப்பம் அதிகரித்துள்ளது. எனவே, வீட்டையும் நம்மளையும் குளிர வைக்க ஏசி பயன்படுத்துகிறோம். இதனால் கரண்ட் பில் எகிறும், நீண்ட நேரம் பயன்படுத்தினால் ஏசிக்கு மற்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

ஆகவே, இந்த பதிவில் ஏசி பயன்படுத்தாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வீட்டை குளிர்ச்சியாக எப்படி வைக்கலாம் என்று பார்ப்போம்.

வெப்பம் அதிகரிக்க காரணம்

நம்முடைய வீட்டில் வெப்பம் அதிகரிக்க மூல காரணமே மின்விசிறி, அதாவது ஃபேன் தான். ஏனெனில் காலையில் மொட்டை மாடி முழுவதும் வெயிலில் இருக்கும். அப்பொழுது நாம் ஃபேன் போடும் பொழுது மாடியில் இருக்கும் வெப்பத்தை இது உள்ளே இழுத்து நமக்கு வெப்ப காற்றை வழங்குகிறது. இதன் காரணமாக தான் இரவில் மூட்டை மாடி குளிர்ச்சியாக இருந்தாலும், நாம் தூங்கும் அறை சூடாக உள்ளது.

அதுக்கு என்ன செய்யணும்?

அதற்கு முதலில் மொட்டை மாடியை நேரடியாக வெயிலில் படுவதை தடுக்க வேண்டும். அப்படி செய்ய பல வழிகள் உள்ளது. மொட்டை மாடியை வெள்ளை சுண்ணாம்பைக் கொண்டு முழுமையாக பூச வேண்டும். தற்போது மார்க்கெட்டில் கம்மி விலையில் வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கு வெள்ளை பெயிண்ட் விற்பனை செய்யப்படுகிறது. அதனையும் பயன்படுத்தலாம், இவை வெயிலை பிரதிபலிக்கும் அதனால் வீட்டிற்குள் வெப்பம் இறங்காது.

ஃபேனுக்கு பதிலா இதை யூஸ் பண்ணுங்க!

நாம் சீலிங் ஃபேன் பயன்படுத்துவதற்கு பதிலாக டேபிள் ஃபேன் பயன்படுத்தலாம். இது ஜன்னலில் இருந்து இயற்கை காற்றை உள்ளே இழுத்து அறையை குளிர்ச்சியாக வைத்திருக்கும். மேலும் டேபிள் ஃபேனின் பின்புறத்தில் சற்று தள்ளி ஒரு வாலி நிறைய நீரை வைத்தால் இன்னும் குளிர் காற்று நமக்கு கிடைக்கும்.

பழைய துணி இருந்தா போதும்...

இது கொஞ்சம் சயின்ஸ் மாறி இருக்கும் இருந்தாலும் எபெக்ட்டிவ் தான். அது என்னென்னா, வீட்டில் இருக்கும் பழைய போர்வை ஏதாவது இருந்தால் அதை தண்ணீரில் நினைத்து ஜன்னலில் தொங்க விடுங்க. இதனால் என்னநடக்கும்னா ஜன்னலில் வெளிப்புறத்தில் ஆவியாதல் (Evaporation) நடைபெறும். இயற்பியல் விதிப்படி, ஒரு புறத்தில் ஆவியாதல் நடைபெற்றால், மறுபுறத்தில் குளிரவுதல் நடக்கும். இதன் மூலம் நம்முடைய வீடு குளிர்ச்சியாக இருக்கும், இதுக்கு பொய் ஏசி போட்டு கரண்ட் பில்லலாம் கட்டிக்கிட்டு எதுக்கு.

இது தான் கரெக்ட்

நம்முடைய கிட்சனில் வைக்கப்படும் Exhaust Fan எவ்ளோ பயனுள்ளது தெரியுமா? வீட்டில் இருக்கும் வெப்ப காற்றை வெளியேற்றும். அது மட்டுமின்றி வெளியில் இருந்து வரும் வெப்ப காற்றை முடிந்த வரை கட்டுப்படுத்தும். இதனை வீட்டில் வைத்து பயன் பெறுங்கள். இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் செய்தால் போதும், வீடு குளிர்ச்சியாக இருக்கும் நாமும் நிம்மதியாக தூங்கலாம்.  

How to Cool a Room without AC in Summer, how to keep room cool in summer naturally, how to cool down the hottest room in the house, best products to cool a room, how to cool down a room without a fan, how to cool a room with fans, how to cool a room down quickly, how to keep room cool in summer without ac and cooler in india, how to keep room cool in summer without ac and cooler in tamil.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்