Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Lock a Folder in Windows 11 Tamil: உங்ககிட்ட இருக்கிறது Windows 11-ஆ அப்ப இம்பார்ட்டண்ட் பைல்ஸை லாக் செய்வதற்கான ஈஸி டிப்ஸ் இதோ!

Priyanka Hochumin August 06, 2022 & 14:30 [IST]
How to Lock a Folder in Windows 11 Tamil: உங்ககிட்ட இருக்கிறது Windows 11-ஆ அப்ப இம்பார்ட்டண்ட் பைல்ஸை லாக் செய்வதற்கான ஈஸி டிப்ஸ் இதோ! Representative Image.

How to Lock a Folder in Windows 11 Tamil: நம்முடைய ஸ்மார்ட்போனில் வைத்திருக்க முடியாத நிறைய விஷயங்களை ஒரு போல்டரில் சேமித்து கம்ப்யூட்டரில் வைத்திருக்க முடியும். இருப்பினும் அதில் ஒரு சிக்கல் உள்ளது, என்னவென்றால் திடிரென்று உங்களின் நண்பரோ அல்லது குடும்பத்தினரோ இரு சின்ன வேலை இருக்கு சிஸ்டம் கொஞ்சம் யூஸ் பண்ணிக்கவா என்று கேட்டால் நாமும் சரி என்று குடுத்து விடுவோம். ஆனால் அந்த முக்கியமான போல்டர் நம்முடைய நினைவுக்கு அப்பொழுது வராது. அது வந்தது பதறி போய் வேணாம் ஓபன் பண்ணாதீங்க என்று பதறி அடித்துக்கொண்டு ஓடுவோம். அது ஒரு சில நேரத்தில் வெற்றியும் அடையும் ஆனால் தவிர்க்க முடியாத பட்சத்தில் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியும். அப்படி பட்ட சூழ்நிலையில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ளவே இந்த டிப்ஸ்.

போல்டர லாக் பண்ண முடியுமா?

நம்மிடம் இருக்கும் லேப்டாப் மற்றும் டெஸ்கடாப் சாதனங்கள் பெரும்பாலும் விண்டோஸ் மூலம் தான் இயங்குகிறது. இதில் ஒரு பைல் அல்லது போல்டரை ஹைட் அல்லது லாக் செய்யத் தெரியாமல் திணறுகிறோம். ஏனெனில் விண்டோஸ் இல் போல்டர்களை ஹைட் செய்வதற்காக அம்சம் இல்லை என்பது தான் உண்மை. இருப்பினும் அதற்கு சில வழிகள் உள்ளது. அதனை பயன்படுத்தி உங்களின் முக்கிய பைல் அல்லது போல்டரை பாஸ்வோர்ட் மூலம் லாக் செய்யலாம். அதற்கு முதலில் நோட்பேட் மற்றும் கமாண்ட் (Command) அம்சத்தைப் பயன்படுத்தி ஒரு இயங்கக்கூடிய '.bat' பைலை உருவாக்க வேண்டும். இந்த முறை கம்ப்யூட்டர் வித்தையில் கற்று தெரிந்தவர்களுக்கு தான் எளிதாக இருக்கும். நம்மைப் போல சாமானியர்களுக்கு அது கொஞ்சம் கடினமாக இருக்கும்.

அதுக்கு ஒரு வழி இருக்கு...

அதனால் கவலை பட வேண்டாம், ஏனெனில் பிகினர்களுக்கு என்று ஒரு ஈஸியான வழிமுறை உள்ளது. அதற்கு ஒரு மூன்றாம் தரப்பு பயன்பாட்டை பயன்படுத்தப் போகிறோம். அதில் நாம் என்னென்ன செய்யப்பசாகிறோம் என்னும் வழிமுறைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

  • முதலில் உங்களின் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் ஓபன் செய்து ஏதேனும் ஒரு பிரௌசரை ஓபன் செய்யவும்.
  • இப்போ Easy File Locker by Xoslab என்பதை டவுன்லோடு செய்துகொள்ளுங்கள்.
  • இப்பொழுது உங்கள் சிஸ்டமில் புதுசாக நிறுவப்பட்ட ஈஸி ஃபைல் லாக்கர் பயன்பாட்டை ஓபன் செய்யுங்கள்.
  • பிறகு System > Set Password என்பதை கிளிக் செய்யவும்.
  • இப்பொழுது Set a new Password அதாவது ​​புதிய கடவுச்சொல்லை அமைக்கும்படி கேட்கும்.
  • நீங்கள் விருப்புவதை கடவுச்சொல்லாக டைப் செய்து உறுதி செய்ய OK என்பதை கிளிக் செய்யவும்.
  • பின்பு Files & Folders என்பதை கிளிக் செய்து அதில் Add Folder or Add File என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
  • Accessible என்பதை செலக்ட் செய்து நீக்கம் செய்யுங்கள்.
  • இப்போது Visible என்பதை டிக் செய்யவும்.
  • பிறகு மூன்று புள்ளிகளை கிளிக் செய்து பாஸ்வோர்ட் மூலம் நீங்கள் லாக் செய்ய விரும்பும் பைலை செலக்ட் செய்யவும்.
  • கடைசியாக OK என்பதை கிளிக் செய்யவும்.

இப்ப அடுத்து ஹைட் செய்யலாமா?

இந்த வழிமுறைகள் மூலம் உங்களுக்கு மிகவும் முக்கியமான பைல் அல்லது போல்டர்களை லாக் செய்யலாம். இப்பொழுது யார் அந்த குறிப்பிட்ட போல்டர் அல்லது பைலை ஓபன் செய்தாலும் பாஸ்வோர்ட் கேட்கப்படும். இது முடிஞ்சது, இப்ப இன்னும் கொஞ்சம் secured-ஆ வச்சிக்க என்ன பண்ணலாம் என்று யோசிக்கிறீர்களா? அதுக்கும் ஒரு வழி இருக்கு. பேசாம அந்த பைல் அல்லது போல்டரை ஹைட் பண்ணிடலாம். அதனை செய்வதற்கு போல்டர் எக்ஸ்ப்ளோரரின் மேல் வலது மூலையில் இருக்கும் View என்ற விருப்பத்தை கிளிக் செய்து Hidden Files என்பதில் இருக்கும் டிக் மார்க்கை நீக்கி விடுங்கள்.

இப்பொழுது நீங்கள் பாதுகாப்பாக வைக்க விரும்பும் பைல் அல்லது போல்டரை ஒரு முறை கிளிக் செய்யவும். பிறகு ரைட் கிளிக் செய்து Properties என்னும் ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.

இப்போ காட்டப்படும் மெனுவில் Attributes என்னும் பிரிவில் Hidden என்ற விருப்பத்தை கிளிக் செய்து Apply என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது அந்த போல்டர் அல்லது பைலை தாராளமாக ஹைட் செய்யலாம். இதன் மூலம் அதற்கு டபுள் செக்யூரிட்டி கிடைக்கும், இனி ஒரு பய உங்க பிரைவசிக்கு குறுக்க வரமாட்டாங்க.

How to Lock a Folder in Windows 11 Tamil, How to Lock a Folder in Windows 11 with password, how to lock folder in laptop windows 11, how to password protect a folder in windows 11 home, how to keep folder lock in windows 11, how to make a folder lock in windows 11, how to hide a folder in windows 11.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்