Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Ola, Uber-க்கு வந்த சோதனை...லேட்டா வந்தா கேன்சல் தாண்டி...கஸ்டமர்கள் மிரட்டல்!

Priyanka Hochumin July 27, 2022 & 11:30 [IST]
Ola, Uber-க்கு வந்த சோதனை...லேட்டா வந்தா கேன்சல் தாண்டி...கஸ்டமர்கள் மிரட்டல்!Representative Image.

காலைல வேலைக்கு போக சீக்கிரம் எழுந்து, வீடு வேலையெல்லாம் முடிசிட்டு அடிச்சிபுடிச்சு வண்டி, கிடைக்கிற பஸ், ஆட்டோன்னு ஏறி போற காலமெல்லாம் போய்டுச்சு. இப்பெல்லாம் வீட்டுக்கு முன்னாடியே வந்து கேப், ஆட்டோ வந்து நிக்கிது. அந்த அளவுக்கு தொழிநுட்பம் வளந்துகொண்டு இருக்கிறது. இது ஒரு வகையில் நல்ல விஷயம் தான், ஆனால் இதனால் நமக்கு நல்லதா? என்று கேட்டால் வாங்க பாக்கலாம்.

ஓலா, உபர் கேப்

ஆட்டோல போனா பேரம் பேசியே சோந்து போற காலத்துல, வாடிக்கையாளர்களுக்கு மனநிறைவை அளிக்கும் வகையில் வந்து தான் இந்த ஓலா, உபர் கான்செப்ட். அதாவது ஒரு இடத்திற்கு செல்லும் வகையில் கூகுள் மேப் பயன்படுத்தி நாம் இருக்கும் இடம் மற்றும் நாம் செல்ல வேண்டும் இடத்தை செலக்ட் செய்து கேப் புக் செய்தால் போதும். நம்முடைய போக்குவரத்து தூரம் என்ன, அதற்கான கட்டணம் என்ன, யார் ஓட்டுநர் என்று அனைத்து விவரங்களும் வந்துவிடும். மேலும் நம்முடைய வீட்டுக்கு முன்னாடியே வந்து கூட்டிட்டு போய்டுவாங்க, அந்த அளவுக்கு பாதுகாப்பு மற்றும் ஈஸியும் கூட.

இதில் அப்படியே நாளாக ஆட்டோவை சேர்த்தனர், இன்னும் கொஞ்சம் நாட்கள் கடந்ததும் பைக்கையும் சேர்த்து கார், ஆட்டோ, பைக் ஆன்லைன் கேப் சர்வீஸ்களை மக்களுக்கு அளித்து வருகின்றனர்.

ஆனா இவங்களுக்கு வந்த சோதனை

இப்படியாக ஸ்மூத்தா போய்கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென்று இவர்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு இடையே ஒரு தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. அதாவது ஆரம்பத்தில் குறைந்த கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்த Ola, Uber, Rapido போன்ற நிறுவனங்கள் தற்போது அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் மீது மக்கள் இடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.

காரணம் ஜிஎஸ்டியா?

இந்த விலை ஏற்றத்தின் காரணம் பெட்ரோல், டீசல் விலை ஏற்றமா அல்லது ஜிஎஸ்டியா என்று தெரியவில்லை. ஆனால் கட்டாயம் இவற்றால் தான் இந்த விலை ஏற்றம் இருக்கும் என்று ஒரு சிலர் கருத்துக்களை தெருவித்து வருகின்றனர். மக்கள் இதனைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமல் ஓலா, உபர், rapido ஆகிய நிறுவனங்கள் மீது அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இப்படி பண்ணா எப்படி...

அதுகூட பரவால்ல, இப்பெல்லாம் கேப் புக் பண்ணி கொஞ்சம் லேட்டா வந்தா புக்கிங்கை கேன்சல் பண்ணிடுறாங்க சார்! என்று கேப் டிரைவர்கள் தங்கள் வருத்தத்தை தெருவிக்கின்றனர். இவர்கள் இப்படி கூறுகையில், வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் அவர்கள் தாமதமாக வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பயணத்தை கேன்சல் செய்து நிம்மதியாக எங்கையும் செல்ல முடியவில்லை மன உளைச்சலாக இருக்கிறது என்று கூறுகின்றனர். இப்பொழுது இதில் யார் பரிதாபமான நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

Ola, Uber, Rapido வந்த கொஞ்ச நாட்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் எவ்ளோ ஆதி வாங்கினார்களோ, அதை இப்பொழுது இவர்கள் பெறுகிறார்கள். இவர்களின் நிலமை இப்பொழுது தலைகீழாக மாறியுள்ளது, இதற்கு என்ன தீர்வு காணப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

customer dissatisfaction on ola uber, customer dissatisfaction on ola uber in india, customer dissatisfaction on ola uber in tamil, ola, uber, rapido,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்