Tue ,Apr 23, 2024

சென்செக்ஸ் 73,648.62
0.00sensex(0.00%)
நிஃப்டி22,336.40
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

How to save Electricity at Home: இந்த கேஜெட்களை உபயோகித்தால்...கரண்ட் செலவு நிச்சியம் குறையும்! யூஸ் பண்ணி பாருங்க!

Priyanka Hochumin June 06, 2022 & 14:25 [IST]
How to save Electricity at Home: இந்த கேஜெட்களை உபயோகித்தால்...கரண்ட் செலவு நிச்சியம் குறையும்! யூஸ் பண்ணி பாருங்க!Representative Image.

How to save Electricity at Home: இப்பொழுது இருக்கும் விலை வாசியில் தங்கம் விலையை விட கரண்ட் விலையை பார்த்தால் தான் நமக்கு கை காலெல்லாம் உதறுது. எனவே, உங்கள் வீட்டின் கரண்ட் பில்லை எப்படி குறைப்பது என்பதை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.

நம் அனைவரின் ஒரு முக்கிய கனவாக இருப்பது, நமக்கு புடித்த மாறி சொந்த வீடு கட்டுறது தான். அப்படி கடும் பொழுது எல்லாம் கிளாஸியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யோசிக்காமல் எண்ணற்ற லைட் மற்றும் ஃபேன் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துகிறோம். அப்புறம் கரண்ட் பில் ஏறாம என்ன பண்ணும். உங்களுக்கு இந்த கஷ்டங்கள் இருந்தால் இந்த மாதிரியான பொருட்களைப் பயன்படுத்துங்கள், இதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம்.

லைட் இது வாங்குங்க! | How to save Electricity at Home in India

அந்த காலத்தில் விளக்கில் இருந்து வரும் ஒளியை பயன்படுத்தி மக்கள் வாழ்ந்தார்கள். இப்பொழுது ஒரு நிமிடம் கூட லைட் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டனர். சரி இது அத்தியாவசிய பொருள் என்பதால் நம்முடைய வீட்டில் அதிக விலைக்கு கூட வாங்கி பயன்படுத்துகிறார்கள். பிறகு போற பக்கம் எல்லாம் லைட் போட்டுவிட்டு அதை ஆஃப் செய்ய மறக்க வேண்டியது, அதன் விளைவு கரண்ட் பில் அதிகமாவது தான். எனவே, சராசரி பல்புகளைக் காட்டிலும் LED, CLF போன்ற பல்புகளை பயன்படுத்துங்கள். ஏனென்றால் இது மற்றவைகளை விட 3% முதல் 25% வரை மின்சார பயன்பாட்டை கட்டுப்படுத்த உதவும்.

Energy Star | How to save Electricity at Home in Tamil

நம்முடைய வீட்டில் எலக்ட்ரிக் பொருட்களை விட சோலார் பொருட்களை உபயோகிப்பதால் இன்னும் மின்சாரப் பயன்பாடு குறையும். அந்த வகையில் 'Energy Star' சான்றளிக்கப்பட்ட மின்சாரப் பொருட்களை நீங்க உங்கள் வீட்டில் பயன்படுத்தினால் பலமடங்கு மின்சார செலவைக் குறைக்கலாம். Energy Star சான்றளிக்கப்பட்ட வாஷிங் மெஷின் 45 சதவீத குறைவான தண்ணீர் மற்றும் 25 சதவீத குறைவான ஆற்றல்களுடன் பயன்படுகிறது. மேலும் ஃபிரிட்ஜ் 90% குறைவான ஆற்றலைப் பயன்படுத்துகிறது.

Tankless Water Heaters | How to save Electricity at Home in summer

நமக்கு மின்சார செலவு அதிகமாக ஏற்படுவதில் ஒரு முக்கிய காரணம் வாட்டர் ஹீட்டர். இது தினமும் சிறிது நேரம் பயன்படுத்தினால் அவ்ளோ தான் இந்த மாதம் கரண்ட் பில் எகுறும். எனவே இந்த பிரச்சனையில் இருந்து விடுபட இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர்களைப் பயன்படுத்துங்கள். அது Tankless Water Heaters நமக்குத் தேவையான வெந்நீரை மட்டும் அளிக்கும், அதனால் கொஞ்சம் நேரம் மின்சாரத்தைப் பயன்படுத்தினால் போதும். இதன் மூலம் நீங்க மாத மின்சார செலவைக் குறைக்கலாம்.

மேலும் எந்தெந்த எலக்ட்ரிக் பொருட்கள் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்துகிறது என்பதை தெரிந்துக்கொள்ள நிறைய கருவிகள் இருக்கின்றன. அதை உங்கள் வீட்டில் பயன்படுத்தி எந்தெந்த பொருட்கள் தேவையில்லாமல் உபயோகிக்கப்படுகிறது என்பதை தெரிந்துகொண்டு அதை சரிசெய்துகொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் வீட்டில் வீணாக கரண்ட் செலவு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

இதையும் விட பெஸ்ட் சாய்ஸ் ஒன்னு இருக்கு. அது என்னென்னா வீட்டில் இருக்கு கதவு ஜன்னல் அதை எல்லாத்தையும் பயன்படுத்தி இயற்கையாக ஒளி மற்றும் காற்றை வாங்கலாம். இது உடம்பிற்கும் நல்லது, தேவையில்லா செலவுகளையும் குறைக்க உதவுகிறது.  

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்