ஐபோன் பயனர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஐபோன் 15 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆப்பிள் தனது சமீபத்திய ஐபோன் 15 ஸ்மார்ட்போனை [ஐபோன் 15, ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 மேக்ஸ், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்] இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், ஐபோன் 15 ஸ்மார்ட்போனைப் பற்றிய பல விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் கசியத் தொடங்கிவிட்டன. அந்தவகையில், ஆப்பிள் ஐபோன் 15 மாடல்களின் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஐபோன் 15 அம்சங்கள்:
Apple iPhone 15 ஆனது 6.1 (15.49 cm)-இன்ச் OLED டிஸ்ப்ளேயுடன் 457ppi பிக்சல் அடர்த்தி (Density) மற்றும் 1170 x 2532 பிக்சல் தீர்மானத்துடன் (Resolution) வருகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் மல்டி-டச் தொழில்நுட்பத்துடன் இணக்கமான பெசல்-லெஸ் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.
அதோடு, iPhone 15 இன் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பை வழங்கப்பட்டுள்ளது. இது 12 MP f/1.6 வைட் ஆங்கிள் மெயின் லென்ஸ் மற்றும் மற்றொரு 12 MP f/2.4 அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவால் ஆனது. அதேபோல், 12 MP கொண்ட செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. மேலும், எல்இடி ஃபிளாஷ், ஐஎஸ்ஓ கண்ட்ரோல், எச்டிஆர் மோட், ஆட்டோ ஃப்ளாஷ் மற்றும் எக்ஸ்போஷர் காம்பன்சேஷன் ஆகியவவையும் வழங்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 15 ரிலீஸ் தேதி:
மேலும், ஆப்பிள் ஏ14 பயோனிக் சிப்செட்டுடன் இயங்கும் இந்த ஐபோன் 15, 8ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரியுடன் வருகிறது. இருப்பினும், மெமரி கார்ட் ஸ்லாட் இதில் கொடுக்கப்பட வில்லை. பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 4200mAh Li-ion பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்புகளை கொண்ட ஐபோன் 15 இந்தியாவில் ஆகஸ்ட் 23, 2023 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு மற்றும் தங்கம் என இரண்டு வண்ணத்தேர்வுகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 15 விலை:
வரவிருக்கும் ஐபோன் 15 மாடலின் விலையானது முந்தைய பதிப்பான ஐபோன் 14 ஐப் போலவே இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் ஐபோன் 14 மாடலின் விலை ரூ.79,900 ஆக உள்ளது. இருப்பினும், ஐபோன் 15 மாடலின் வடிவமைப்பில் ஆப்பிள் நிறுவனம் சில மாற்றங்களை செய்தால் விலையில் வித்தியாசம் வரலாம். இது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை, இருப்பினும் ஐபோன் 15 அறிமுகப்படுத்தப்பட்டவுடன் போனின் விலை பயனர்களுக்கு நிறைவுபடுத்தும் வகையில் இருக்கும்.
ஐபோன் 15 சீரிஸ்:
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸில் 6.1 இன்ச் டிஸ்பிளே கொண்ட ஐபோன் 15, 6.1 இன்ச் டிஸ்பிளே கொண்ட ஐபோன் 15 ப்ரோ, 6.7 இன்ச் டிஸ்பிளே கொண்ட ஐபோன் 15 மேக்ஸ் மற்றும் 6.7 இன்ச் டிஸ்பிளே கொண்ட ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு விதமான மாடல்களை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…